சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் இணையும் பிரபல காமடி நடிகர். - இந்த காம்போ மிஸ் ஆனதே இல்ல

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் இணையும் பிரபல காமடி நடிகர். - இந்த காம்போ மிஸ் ஆனதே இல்ல
soori joined in set of don

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணையும் காமெடி பிரபலம்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சிவகார்த்திகேயனின் தான் படத்தில் சூரி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்திலும் உருவாக உள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாஸ்கரன், காளி, ஆர்ஜே விஜய், பாலா, கலையரசு போன்ற திரையுலக பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.

இப்படியான நிலையில் தற்போது காமெடி நடிகரான சூரி படத்தில் இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.