இன்னுமொரு கொம்பனா விருமன்? - விருமன் முழு விமர்சணம்

நடிகர் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ஆர்கே சுரேஷ் நடித்த விருமன் படத்தின் விமர்சனம் இதோ..

Aug 12, 2022 - 04:46
Aug 12, 2022 - 05:03
 0  283
இன்னுமொரு கொம்பனா விருமன்? - விருமன் முழு விமர்சணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இவரது நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் விருமன்.

கதைக்களம் :

தாசில்தாராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள். இவர்களில் கடைசி மகன் தான் கார்த்தி. தன்னுடைய அம்மா சரண்யா பொன் மன்னனின் மரணத்திற்கு அப்பா பிரகாஷ் தான் காரணம் என்பதால் அவரை கொல்ல வேண்டும் என துடிக்கிறார் கார்த்தி. இன்னொரு பக்கம் ஆர்கே சுரேஷ் உடன் மோதுகிறார். கடைசியில் என்ன ஆனது? பிரகாஷ்ராஜ் கொல்லப்பட்டாரா அல்லது குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.


படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் கார்த்தி வழக்கம் போல வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார்.

அறிமுக நாயகி என சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலான நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார் அதிதி சங்கர். அதிலும் குறிப்பாக அவரது குத்தாட்டத்திற்கு பல ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

பிரகாஷ்ராஜ் தனது அன்பான நடிப்பால் நம்மை உருக வைக்கிறார். தன்னை எதிர்ப்பவர்களை எதிரியாக பார்த்து அவர் மீது கோபத்தை உண்டாக்குகிறார்.

வில்லனாக வரும் ஆர் கே சுரேஷ் கார்த்திக்கு பக்கா வில்லனாக ஸ்கோர் செய்துள்ளார். சூரியன் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்து உள்ளது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். ஒளிப்பதிவின் மூலம் மதுரையின் மண் வாசனையை அப்படியே பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். இயக்குனர் முத்தையா ஆக்சன், எமோஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக விருமன் படத்தைக் கொடுத்து அனைவரையும் கொண்டாட வைத்துள்ளார்.