பிரபல பிக்பாஸ் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரிக்கு தேடிவந்த திரைப்பட வாய்ப்பு

பிக்பொஸ்4ஆவது சீசனில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு, பொலிஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

பிரபல பிக்பாஸ் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரிக்கு தேடிவந்த திரைப்பட வாய்ப்பு

பிக்பொஸ்4ஆவது சீசனில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு, பொலிஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில், நடிகர் ஆரி, பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுதவிர ராஜ மித்ரன் இயக்கியுள்ள அலேகா, களிங்கன் இயக்கியுள்ள பகவான் போன்ற படங்களில் ஆரி நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.