மகளிர் தின வாழ்த்து கவிதைகள்

மகளிர் தின சிறப்பு கவிதைகள்

1.

பிறப்பிலும்
வலிமை கொண்டு
மென்மை உருவென
வேடம் தரித்து
நால்வகை குணம்
திணித்து
இருள் சிறையில்
நிழல் பட்சியாக
உழலும் உயிராகி
கிடந்த வாழ்வை

தன் சுய ஆற்றல்
உளி கொண்டு
புதிப்பித்த 
பெண்மைக்கு!

மகளிர்! 
தின வாழ்த்துகள்

2.

மடியில் சுமக்கும் தாயாய்

கைபிடித்து நடக்கும் சகோதரியாய்

ஆறுதலாய் இருக்கும் தோழியாய்

அன்புகாட்டும் காதலியாய்

நல்வழிபடுத்தும் ஆசிரியையாய்

இவையாவும் ஒன்றே அடங்கிய மனைவியாய்
குடும்பத்தின் ஒட்டுமொத்த சக்தியாகவும் இருக்கும் பெண்களுக்கு...

மகளிர் தின வாழ்த்துக்கள்

3.

அன்பில் ஒரு தாய்!
அழகில் ஒரு தேவதை!
அறிவில் ஒரு மந்திரி!
நட்பில் ஒரு நேர்மை!
கண்டிப்பில் ஒரு ஆசிரியர்!
தியாகத்தின் மறு உருவம்! பெண்மையை போற்றுவோம்!

4.

தெய்வங்களை
கோவிலில்
தெருவில் தேடாதீர்கள்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கிறார்கள்
தாயாய்
மகளாய்
தமக்கையாய்
தோழியாய்
மனைவியாய்
பெண்மையே
தலை வணங்குகிறேன்

5.

"ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டே நான் அளவிடுகிறேன்."
-பாபாசாகேப் அம்பேத்கர்.

6.

அன்னை யாய்
தங்கை யாய்
அக்கா வாய்
தாய் யாய்
மங்கையருக்கு,
என்னோடு 
பயனிக்கும் அனைத்து
இனையதள  தோழிகளுக்கும்
மகளிர் தினம் வாழ்த்துக்கள்  !
மகளிர் தினம் சமர்பணம்..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்....

7.

பாசம் சுமந்தவள் 
தங்கையாகிறாள்

உணர்வு புரிந்தவள் 
தோழியாகிறாள்

நேசம் புரிந்தவள் 
மனைவியாகிறாள்

உயிர் சுமந்தவள் 
தாயாகிறாள்

இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்