இன்றைய ராசிபலன் 16:03:2021
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் 16:03:2021
இன்றைய பஞ்சாங்கம்
16-03-2021, பங்குனி 03, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறைசதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 16.03.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும்மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புஉருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகஇருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள்வசூலாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண்பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில்எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம்ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில்எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால் அனுகூலமான பலன்கள்உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள்ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில்சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியைஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம்கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகிநட்பு ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள்விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராதபிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல்விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
கன்னி
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போதுஎச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில்நிதானம் தேவை.
துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும்வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால்அனுகூலப்பலன் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள்கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள்அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும்அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியமனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள்ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மனநிம்மதிகுறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்குபலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள்உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமைகுறையும்.
கும்பம்
இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்றபலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில்அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில்முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கைஉண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால்பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்றநிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்துகொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்லாபகரமாக இருக்கும்.