இன்றைய ராசி பலன் 11.03.2021

நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்குமான ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன் 11.03.2021
Rasipalan 2020.03.11

இன்றைய  பஞ்சாங்கம்

11-03-2021, மாசி 27, வியாழக்கிழமை, திரியோதசிதிதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.45 வரை பின்புசதயம். சித்தயோகம் இரவு 09.45 வரை பின்புமரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மஹாசிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம்01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 

 

செவ் ராகு

 

சூரிய சுக்கி

திருக்கணித கிரக நிலை

11.03.2021

 

புதன் சந்தி

 குரு சனி

 

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் - 11.03.2021

மேஷம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரைஎதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறிசெயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடுஉண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில்வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்பவாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்றகவலை உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடிவரும்.  உங்கள் ராசிக்கு காலை 09.21 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில்தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும்மதியத்திற்கு பிறகு சாதகப் பலன் கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன்செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு காலை09.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால்பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரியதொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம்கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மைஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி

இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார்உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமானபலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும்நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால்குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீகசொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில்செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள்ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்தபிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றுபாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால்செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும்புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவுஇருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்தபிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீகசொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும்அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில்இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள்தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம்செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில்ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன்இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமைஏற்படும்.