நாளைய இராசி பலன்கள் 22.03.2022 செவ்வாய்கிழமை

நாளைய நாளுக்கான சுப நேரங்கள் மற்றும் உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

Mar 21, 2022 - 04:50
Mar 21, 2022 - 05:10
 0  1.4k
நாளைய இராசி பலன்கள் 22.03.2022 செவ்வாய்கிழமை

இன்றைய  பஞ்சாங்கம்

22-03-2022, பங்குனி 08, செவ்வாய்க்கிழமை,

சதுர்த்தி திதிகாலை 06.24 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 04.22 வரைபின்பு தேய்பிறை சஷ்டி.

விசாகம் நட்சத்திரம் இரவு 08.13 வரைபின்பு அனுஷம். மரணயோகம் இரவு 08.13 வரை பின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.

லக்ஷ்மி நரசிம்மருக்குஉகந்த நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இராசிபலன் ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

இன்றைய ராசிப்பலன் -  22.03.2022

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 2.33 மணிக்கு மேல்சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும்மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண்வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமைஅதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன்செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள்உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைதரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்கவேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும்சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள்ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர்ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள்ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம்வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள்கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில்தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லமுன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்புஉயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியைதரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவதுநல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள்ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்துசெல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதரசகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு வெளியூர் பயணங்கள் செல்வதற்கானவாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாகசெயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியதுநிறைவேறும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சிலஇடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால்அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளைஅனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம்பெருகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம்செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள்வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாகஇருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடையமுடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உங்கள்ராசிக்கு பகல் 2.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியானபயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்.

இதனையும் அறிந்து கொள்ளுங்கள் -->>> இராசிபலன் ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow