இன்றைய நாள் எப்படி ..? 2021.06.10

இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்

இன்றைய நாள் எப்படி ..? 2021.06.10

இன்றைய  பஞ்சாங்கம்

10-06-2021, வைகாசி 27, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன்காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் -  10.06.2021

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகஇருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலைகாணப்படும். உறவினர்களின் உதவியால்குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள்ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கானமுயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும்ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும்.

ரிஷபம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள்வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கைமகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால்அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில்மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறிமகிழ்ச்சியை அளிக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் மனஉறுதியோடுபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால்வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தைகடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களைதவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில்சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம்கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும்முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம்எளிதில் முடியும். கொடுத்த கடன்கள்வசூலாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தைநினைத்தபடி செய்து முடித்து வெற்றிஅடைவீர்கள். குடும்பத்தில் உற்றார்உறவினர்கள் மூலம் சுபசெய்திகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குதிறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகுறைந்து லாபம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண்விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெரியமனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம்அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிலும்கவனமுடன் செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில்தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன்இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களைதவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச்சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம்உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம்நிறைவேறும். கொடுக்கல் வாங்கல்லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன்இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரியநேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின்ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புமன மகிழ்ச்சியை தரும்.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறுதடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால்வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகஇருக்கும். உறவினர்களுடன் சிறு சிறுமனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளுஅதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதியமுயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும்ஒத்துழைப்பும் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும்வெற்றியில் முடியும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில்சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையேஇருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும்மகிழ்ச்சியும் கூடும்.