டெடி திரைப்பட வெளியீட்டு தினம் அறிவிப்பு
குழந்தைகளை கவரும் வகையில் பெரிய சைஸ் டெடிபியர் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்
தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக பேங்க் திருட்டு சம்பந்தப்பட்ட படம் நாணயம், முதல் ஜாம்பி படம் மிருதன், இரண்டாவது விண்வெளி பற்றிய படம்டிக் டிக் டிக் என கலக்கி வரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இப்பொழுது இயக்கியிருக்கும் படம் டெடி. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்க அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை
2012ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான என்ற டெட் திரைப்படத்தின் ரீமேக் போலவே உருவாகியிருக்கும் டெடி திரைப்படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காப்பான் படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் பா.ரஞ்சித்துடன் இணைந்து சார்பட்டா பரம்பரை படத்திற்காக தாறுமாறாக உடம்பை தயார் செய்துள்ளார்.
புஷ்பா திரைப்படத்தில்
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள அல்லு அர்ஜுன் இப்போது நடித்து வரும் புஷ்பா திரைப்படத்தில் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தேதி பிரச்சினை காரணமாக அதில் நடிக்க முடியாமல் போக இப்போது அதில் வில்லனாக ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் ஹீரோவாக நடித்து வரும் அதே சமயம் தெலுங்கிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 19ஆம் தேதி
சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிலேயே இரண்டாவது முறையாக மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகியிருக்கும் டெடி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என ஏற்கனவே சில தகவல்கள் வெளிவந்த நிலையில் இப்பொழுது அதிகாரப்பூர்வ தகவலாக வரும் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிக நீண்டகாலமாக ரெடி படத்தின் ரிலீஸ் தேதியை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்பொழுது குஷியில் இருக்க மார்ச் 19 ரிலீஸ் சென்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.