காப்புறுதி தத்துவம் என்றால் என்ன?. Principles of insurance
காப்புறுதித் தத்துவங்கள் (Principles of Insurance) காப்புறுதி தத்துவங்களுக்கு இணங்கவே காப்புறுதி செயற்படுகின்றது.

காப்புறுதித் தத்துவங்கள் (Principles of Insurance)
சில அடிப்படைத் தத்துவங்களுக்கு இணங்கவே காப்புறுதி செயற்படுகின்றது. இதன் பொருள், காப்புறுதியுடன் தொடர்புடைய அடிப்படை சித்தாந்தங்கள் என்பதாகும். காப்புறுதிப் பத்திரமொன்றை பெற்றுக் கொள்ளும் போது, அதனை அமுலில் வைத்திருக்கையில் அனுகூலம் பெற்றுக் கொள்ளும் போது, முடிவுறுத்தும் போது, இந்த தத்துவங்களுக்கு இணங்கவே செயற்படுதல் வேண்டும். இந்த தத்துவங்கள் தோன்றியதன் நோக்கம், காப்புறுதியின் நம்பிக்கையைப் பாதுகாத்தல் இதன் மூலம் இரு தரப்பினரும் தகாத வழியில் இலாபமீட்டாமை, சட்டத்தின் அடிப்படையில் நீதமாக நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை உறுதி செய்து கொள்வதாகும்
காப்புறுதியில் ஆறு சித்தாந்தங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன
- காப்புறுதி செய்யத்தகு உரிமை
- மிக்குயர் நன்னம்பிக்கை
- இழப்பீடு
- பங்களிப்பு
- பிரதியீடு / மாற்றீடு
- அண்மித்த காரணம்
1. காப்புறுதி செய்யத்தகு உரிமை
காப்புறுதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்கின்ற நபருக்கு, அந்தக் காப்புறுதி சம்பந்தமான ஆயுள் அல்லது சொத்துக்கள் மீது காப்புறுதி செய்யத்தகு உரிமை இருத்தல் வேண்டும். அவ்வாறு காப்புறுதி செய்யத்தகு உரிமை தோன்றுவதற்கு குறைந்த பட்சம் பின்வரும் மூன்று பண்புகளாவது இருத்தல் வேண்டும்.
(அ) சம்பந்தப்பட்ட ஆயுள் அல்லது சொத்து இருப்பதன் மூலம் காப்புறுதி செய்யப்பட்டவருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதுடன், அவற்றை இழக்க நேரிட்டால் நட்டம் ஏற்படுவதாகவும் இருத்தல் வேண்டும். காப்புறுதி செய்யப்பட்டவர் என்பது காப்புறுதியைப் பெற்றுக் கொள்கின்ற நபராகும்
(ஆ) அவ்வாறு கிடைக்கின்ற நன்மை அல்லது ஏற்படுகின்ற இழப்பு பண அலகுகளால் மதிப்பிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
(இ) இத்தொடர்பு காப்புறுதி செய்யப்பட்டவருக்கும் சொத்துக்கும் இடையில் சட்டபூர்வமாக நிரூபிக்கக் கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும்.
மேற்படி பண்புகளை ஒன்றிணைத்து "மெக்லீவர்” எனும் காப்புறுதி நிபுணர் பின்வரும் வகையில் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். "காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வு மூலம், ஒருவருக்கு நிதிசார் இழப்பு ஏற்படுமாயின் மற்றும் அந்த விடயம் தொடர்பாக சட்டபூர்வமான தொடர்பு இருக்குமாயின் குறிப்பிட்ட விடயத்தின் பால் அவருக்கு காப்புறுதி செய்யத்தகு உரிமை ஒன்று ஏற்படும்”
2. மிக்குயர் நன்னம்பிக்கை
காப்புறுதி என்பது ஓர் ஒப்பந்தமாகும். காப்புறுதி செய்பவர் மற்றும் காப்புறுதி செய்யப்பட்டவர் ஆகிய இரு தரப்பினரும் இதில் சம்பந்தப்படுகிறார்கள். காப்புறுதி செய்கின்ற கம்பனிக்கு காப்புறுதியைப் பெற்றுக் கொள்கின்ற காப்புறுதி செய்யப்பட்டவரால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மீது நம்பிக்கை வைத்தே ஒப்பந்தத்தில் இணைதல் இடம்பெறுகிறது. எனவே இந்த சித்தாந்தத்தின் மூலம் தெளிவாவது என்னவென்றால் காப்புறுதி செய்வதுடன் தொடர்புடைய ஆயுள் அல்லது சொத்து / ஆதனம் சம்பந்தமான உண்மையான முழு தகவல்களையும் வழங்குவதற்கு காப்புறுதியைப் பெற்றுக் கொள்கின்றவர் பொறுப்புடையவராக இருக்கிறார் என்தபாகும். எனவே பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் ஒப்பந்தம் செல்லுபடியற்றதானதாகக் கொள்ளப்பட்டு இழப்பீட்டை கம்பனி செலுத்தாது விடலாம்.
மிக்குயர் நன்னம்பிக்கை முறிகின்ற சந்தர்ப்பங்கள்
- தவறுதலாகவேனும் முக்கியமல்ல என நினைத்து ஏதும் ஒரு தகவலை வெளியிடத் தவறுதல் (தகவல்களை வெளிப்படுத்தாமை)
- வேண்டுமென்றே ஏதும் தகவல்களை வெளியிடாதிருத்தல் (வேண்டுமென்றே உண்மையை மறைத்தல்)
- ஏமாற்றும் நோக்குடன் ஏதும் ஒரு தகவலை பிழையாக வழங்குதல்
- ஏதேனும் ஒரு விடயம் உண்மை என நினைத்து பிழையான முறையில் வெளியிடல்
இழப்பீடு
ஒருவர் காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொள்வது ஏதும் ஒரு அபாயவாய்ப்பு மூலம் தனக்கு இழப்பு
ஏற்பட்டால் ஏற்படுகின்ற நிதிசார் நட்டத்தை காப்புறுதியாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனாகும். எனவே,
- இழப்பு ஏற்பட்ட நபருக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் நட்டஈடு வழங்குதல் காப்புறுதியாளரின் கடமையாகும்
- காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொள்வதன் மூலம் இழப்பு ஏற்பட்ட நபரின் நிலை பழைய நிலைக்கு கொண்டு வரப்படுகிறது
- இழப்பீட்டை வழங்குவதன் மூலம் காப்புறுதிப்பத்திரதாரருக்கு இலாபமோ நட்டமோ ஏற்படலாகாது
குறைக் காப்புறுதி
குறைக் காப்புறுதி என்பதன் மூலம் கருதப்படுவது என்னவென்றால், சொத்தின் / ஆதனத்தின் உண்மையான பெறுமதியையும் விட குறைவாக அதனைக் காப்புறுதி செய்வதாகும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் காப்புறுதி செய்யப்பட்ட ஆதனம் முழுமையாக அழிவுக்கு உள்ளானால் காப்புறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையே காப்புறுதிக் கம்பனியால் இழப்பீடாக செலுத்தப்படும்
குறைக் காப்புறுதி செய்யப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் ஆதனம் பகுதியளவு சேதமடைந்தால் ஏற்பட்ட இழப்பின் மொத்த அளவுக்கும் நட்டஈடு வழங்கப்பட மாட்டாது. மாறாக ஏற்பட்டுள்ள இழப்பின் உண்மையான பெறுமதியின் விகிதசம அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படும்.
உதாரணமாக
இதன்படி உண்மையான பெறுமதிக்கு குறைவாக காப்புறுதி செய்யப்பட்டிருத்தால், இழப்பின் ஒரு பங்கை காப்புறுதி செய்யப்பட்டவர் பொறுப்பேற்க வேண்டும். எனினும் மொத்த இழப்பு ஏற்பட்டால் காப்புறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை செலுத்தப்படும்
இந்த சித்தாந்தம் ஆயுள் மற்றும் தனிநபர் விபத்துக் காப்புறுதிகளுக்கு ஏற்புடையதாகாது
- பிரதியீடு / மாற்றீடு
இது இழப்பீட்டின் ஒரு சித்தாந்தமாகும். தம்மால் வழங்கப்பட்டுள்ள ஒரு காப்புறுதிப் பத்திரத்தின்
இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்னர் அந்த இழப்புக்காக இழப்பீடு பெற்றுக் கொள்வதற்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளவருக்குள்ள அனைத்து வழிகளினதும் உரிமை காப்புறுதியாளருக்கு கிடைக்கிறது. என்பதே இதன் கருத்தாகும்
காப்புறுதி இழப்பிட்டுக்கு மேலதிகமாக ஏனைய வழிகளில் இழப்பீடு பெற்றுக் கொள்ளப்பட்டால் அவர் இலாபமடைவார். இது இழப்பீட்டுத் தத்துவத்துக்கு எதிரானதாகும்.
இதன்படி,
- காப்புறுதியாளருக்கு பிரதியீட்டுக்கான உரிமை காப்புறுதி செய்யப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கியதன் பின்னரே கிடைக்கும், காப்புறுதி செய்யப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க முன்னர், அவருக்கு சொந்தமான வழிகளில் இருந்து நட்டஈடு பெற்றுக் கொள்ளும் உரிமையை காப்புறுதியாளர் பெற்றுக் கொள்ளமாட்டார்.
- காப்புறுதி செய்யப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்னர் அவருக்கு சொந்தமான ஏனைய வழிகளில் இருந்து பணம் பெற்றுக் கொள்ள முடிவது தாம் காப்புறுதி செய்யப்பட்டவருக்கு இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ள தொகை வரை மாத்திரமேயாகும். காப்புறுதி செய்யப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டையும் விட அதிகளவு பணம் கிடைக்கப்பெற்றால் அத் தொகையை காப்புறுதி செய்யப்பட்டவருக்கு செலுத்துதல் வேண்டும்
- கருணைக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பிரதியீட்டு உரிமை செல்லுபடியற்றதாகும்.
- பங்களிப்பு
இது இழப்பீட்டினது ஒரு அங்கமாகும். தம்மிடமிருந்து காப்புறுதிப் பத்திரமொன்றை பெற்றுக் கொண்டுள்ள ஒருவருக்கு இழப்பீடு வழங்குகின்ற காப்புறுதியாளருக்கு மேற்படி அபாயவாய்ப்பை காப்பீடு செய்துள்ள இன்னுமோர் காப்புறுதி இருப்பின் மேற்படி இழப்பீட்டில் பங்கேற்குமாறு கோரும் உரிமையே இதன் மூலம் கருதப்படுகிறது
இழப்பீட்டுத் தொகையில் பங்களிப்பு செலுத்துமாறு காப்பறுதிக் கம்பனிகளைக் கோர முடியுமாவது மற்றைய காப்புறுதிப் பத்திரங்கள் பின்வரும் வகையை சேர்ந்த காப்புறுதிகளாக இருந்தால் மாத்திரமேயாகும்
- அனைத்து காப்புறுதிக் கம்பனிகளினதும் காப்புறுதிகளின் பெறுமதி நட்டம் அனைத்து காப்புறுதிகள் மூலமும், ஏற்பட்டுள்ள இழப்பு காப்பீடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
- அவை அனைத்தும் அதே காப்புறுதி செய்யப்பட்டவரின் ஒரே உரிமையை பாதுகாத்தல் வேண்டும்
- அவை அனைத்தினதும் விடயதானம் ஒன்றாக இருத்தல் வேண்டும்
- மேற்படி அனைத்து காப்புறுதிகளும் இழப்பு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் செயல் நிலையில் இருத்தல் வேண்டும்
இக் கோட்பாடு ஆயுள் காப்புறுதிக்கு ஏற்புடையதாகாது
6.அண்மித்த காரணம்
காப்புறுதிப் பத்திரமொன்றின் மூலம் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடிவது, இழப்பு ஏற்படுவதற்கான அபாயவாய்ப்பு காப்புறுதிப் பத்திரத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் மாத்திரமேயாகும் சிலவேளைகளில் ஒரு ஆதனத்துக்கு இழப்பு ஏற்பட்ட முறையை தேடிப் பார்க்கும் போது இழப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே காப்புறுதிகள் மூலம் இழப்பீடு பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அந்த இழப்பு ஏற்படுவதற்கான அண்மித்த காரணம் காப்பீடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
லத்தீன் விளக்கத்துக்கு இணங்க கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. அண்மித்த காரணமே தவிர தூர காரணமல்ல. ஒரு இழப்புக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தாலும் கூட, அந்தக் காரணங்களில் இருந்து மிகவும் அண்மித்த காரணத்தையே தெரிவு செய்தல் வேண்டும்.
காப்புறுதி என்றால் என்பதை அறிய ...>>> காப்புறுதி வரைவிலக்கணம்