தற்கொலை வாசகம் என்றால் என்ன? | what is the suicide clause

ஆயுள் காப்புறுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள நபந்தனைகளுள் மக முக்கியமானது தற்கொலை வாசகம் (suicide clause) ஆகும்

தற்கொலை வாசகம் என்றால் என்ன? | what is the suicide clause

தற்கொலை தொடர்பான வாசகம் - Suicide Clause

உலகளாவிய காப்புறுதிக் கம்பனிகள் தற்கொலையினால் ஏற்படும் மரணத்திற்கு விதிவிலக்களிக்கின்ற ஒரு கால எல்லையை நிர்ணயித்துள்ளன. அடிப்படையில் ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவருக்குத் தன்னளவில் பயன் கிடைப்பதை விட முக்கியமாக அவரில் தங்கியிருப்போருக்கு பயன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்ற ஆயுள் காப்பறுதிக்கான அடிப்படைக் காரணத்தில் இருந்தே இது விடயம் எழுகின்றது

ஒரு நீண்டகால ஒப்பந்தத்தில் அவ்வாறான ஒரு சூழ்நிலையின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டவர் தமது சொந்த உயிரை மாய்த்துக் கொள்ளும் அந்த துன்பகரமான சம்பவத்தால் குடும்பத்தைத் தண்டிப்பது நியாயமானதொரு செயலாகாது. மறுபுறத்தில் தற்கொலை நிகழ்வை கருத்திற்கொண்டு காப்புறுதி செய்யப்பட்ட ஆயுளின் இழப்பிற்கெதிராக சில பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுவதே முற்றிலும் நியாயமானதாகும். இங்கு அமுலில் இருக்கின்ற வழமையான ஏற்பாடுகள் வருமாறு.

  1. காப்புறுதி பத்திரத்தின் ஆரம்பத்தில் ஒரு கால எல்லைக்கு தற்கொலை நீக்கப்பட்டுள்ளது

  1. ஆரம்ப காலப்பகுதி காப்புறுதி கம்பனிகளிற்கு இடையில் வேறுபடுகின்றதாயினும் ஒரு வருடம் என்பது ஒரு பொதுவான தன்மையாகும்.

iii. அக்காலப்பகுதிக்குப் பின் தற்கொலை இடம்பெற்றால் காப்புறுதிப்பத்திரத்தில் இடப்பட்டுள்ள தொகை செலுத்தப்படும்

  1. அக்காலப்பகுதியில் தற்கொலை சம்பவித்தால் காப்புறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படமாட்டாது. ஆனால் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்கள் (நிலுவையிலுள்ள கடன் மற்றும் வட்டி என்பன கழிக்கப்பட்டு) மீளளிக்கப்பட வேண்டும் என்பது, காப்புறுதிப்பத்திர நிபந்தனைகளில் வழமையில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டியதாகும்

குறிப்பு: காப்புறுதி பத்திரத்தின் விதிவிலக்கு என்ற வகையில் இறப்பு தற்கொலையால் தான்

ஏற்பட்டது' என்பதை நிரூபிக்கவேண்டியது காப்புறுதி கம்பனியின் பொறுப்பாகும். இது இலகுவான ஒரு காரியமல்ல