மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 07 (பாண்டவர்கள் வருகை)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

பாகம்-7
பாண்டு இறந்ததும் குந்தியும் பாண்டவர்களும்
அத்தினாபுரத்துக்கு வந்தனர். பஞ்ச பாண்டவர்கள் திருதராட்டினது
பிள்ளைகளோடும் சேர்ந்து விளையாடுவார்கள்.
நூறு துரியோதனனுக்குப் பஞ்ச பாண்டவர்களைப் பிடிக்காது. அதனால் பஞ்ச பாண்டவர்களுடன் முரண்படுவான். வீமன் பெரும் பலசாலி அடிப்பான். அதனால் அவர்களுக்கு வீமன் மீது அதிக விரோதம் ஏற்பட்டது.
திருதராட்டினது பிள்ளைகள் பத்துப்பேரை ஒரே முறையில்
பிரம்மச்சாரியப் பருவத்தில் திருதராட்டினனது நூறு
பிள்ளைகளாகிய கௌரவர்களும் பாண்டுவின் ஐந்து புத்திரர்கள்
ஆகிய பஞ்ச பாண்டவர்களும் கிருபாச்சாரியாரிடம் வேதக் கல்வியையும் ஆயுதப் பயிற்சியையும் பெற்றனர்
வீமன் வீரனாகையால் ஆயுதப் பயிற்சியின் பின் பெருவீரனானான். அதனால் அவன் பிற்காலத்தில் தனக்குப் பெரும் விரோதியாக மாறிவிடுவானென நினைத்து அவனைக் கொல்ல வேண்டுமெனத் துரியோதனன் நினைத்தான். வீமனைக் கொன்று விட்டால் பாண்டவர்களின் கொட்டம் அடங்கிவிடும். பின் அர்ச்சுனனையும் தருமனையும் பிடித்துச் சிறையில் அடைத்து விட்டுத் தான் அரசாளலாம் என்றும் நினைத்தான்.
ஒரு நாள் கங்கைக் கரையில் கூடாரம் அமைத்து அங்கே தங்கியிருந்து நீந்தி விளையாடிய பாண்டவர்களும் கௌரவர்களும் கங்கைக் கரையில் அமைந்திருந்த கூடாரத்தில் உணவருந்தினர். கபட எண்ணங்கொண்ட துரியோதனன் வீமனுக்கு ஒதுக்கப்பட்ட உணவில் நஞ்சைக் கலந்தான். அதை அறியாத வீமன் உணவை வயிறாற உண்டு விட்டுக் கங்கைக்கரையில் நின்ற மரநிழலில் படுத்து உறங்கினான். உணவில் நஞ்சு கலக்கப்பட்டதால் வீமன் மயக்கமடைந்தான். அதற்காகக் காத்திருந்த துரியோதனன் காட்டுக்கொடிகளால் வீமனது கைகளையும் கால்களையும் கட்டிக் கங்கை நீருள்த் தள்ளி விட்டான்.
கங்கை நீரில் நீந்தி விளையாடி மீன்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்த விஷப்பாம்புகள் வீமனைக் கண்டதும் அது தீன்பண்டமென நினைத்துக் கௌவின. அதனால் வீமன் உண்ட உணவில் இருந்த விஷம் செயலற்றுப்போய் விட்டது. அதனால் வீமன் சுயநினைவடைந்தான்.
விஷப் பாம்புகள் வாழும் கங்கை நீரில் தள்ளப்பட்ட வீமனை விஷப் பாம்புகள் தீண்டியிருக்கும் என்றும், அத்துடன் உணவில் கலந்த விஷமும் சேர்ந்து வீமனின் உயிரைப் பறித்திருக்கும் என்றும் நினைத்துக் கௌரவர்கள் மகிழ்வுடன் அரண்மனைக்குச் சென்றனர்.
தருமன் வீமனைத் தேடிய போது துரியோதனன்சொன்னான்; “வீமன் முன்பே அரண்மனைக்குச் சென்று விட்டான். நீ போ" என்றான். அதனால் தருமன் அரண் மனைக்குச் சென்று வீமனைத் தேடிப்பார்த்தான். அவன் அங்கு இல்லை. அதனால் தாயாரைக் கேட்டான். தாயும், “வீமனைத் தான் காணவில்லை" என்று சொன்னாள். வீமனைக் காணாமையால் கலங்கிய குந்திதேவி விதுரனிடஞ் சென்றாள்; "விதுரா, கங்கையில் நீராடச்சென்ற எல்லோரும் திரும்பிவந்து விட்டனர். வீமனைக் காணவில்லை. எனக்குப் பயமாகவுள்ளது. வீமனைத் துரியோதனனுக்குப் பிடிக்காது. கலக்கத்துடன். அவன் ஏதாவது சொய்திருப்பான்" என்றாள்
"துரியோதனன் மிகவும் கொடியவன் தான், ஆனால் உனது பிள்ளைகள் அனைவரும் தீர்க்காயுள் படைத்தவர்கள். பலசாலிகள். துரியோதனனால் அவர்களை எதுவும் செய்யமுடியாது.. நீ பயப்படாமல் செல்" என்றான் விதுரன்.
மனக் கலக்கத்துடன் குந்தி அரண்மனைக்கு வந்த போது வீமன் அங்கே மகிழ்வுடன் இருந்தான். விடம் நீங்கப்பெற்ற வீமன் நீந்திக் கரை சேர்ந்து அரண்மனைக்கு வந்திருந்தான்.
வீமனைக்கண்ட துரியோதனனுக்கு வியப்பு மேலிட்டது; “இவன் எப்படித் தப்பி வந்தான்?” என்று சிந்தித்தான்.
தொடரும்....
பாகம் 8 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க
Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன