கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் -பாடல் வரிகள்
Kannai Nambaadhe Video Song from Ninaithathai Mudippavan Tamil Movie on AP International. Ninaithathai Mudippavan Tamil Movie ft. MGR, Latha, Manjula, M. N. Nambiar and Sharada. Directed by Pa.Neelakandhan, produced by Oriental Films, music by M. S. Viswanathan. Song Details: Song Name - Kannai Nambathey Lyrics - A. Maruthakasi Singer - T. M. Soundararajan
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால்
கள்வர்களும் வேற்றுவில்
கண்முன்னே
தோன்றுவது சாத்தியமே.
காத்திருந்து கள்வருக்கு
கை விலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு
தோணாத சாத்தியமே.
போடும் பொய் சிறையை
கிழித்துவிடும் காலம்
பொய்யும் அப்போது
மெய்யான கோலம்.
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உண்மை இல்லாதது
ஓம் முருகா என்று சொல்லி
உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்சை
பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையில்
சாமான்ய மக்களையே
ஏமாற்றி
கொண்டாட்டம் போடுறீங்க
also read :- உதயம் கண்டேன் - கவிதை
பொய்மை எப்போதும்
ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்
தூங்குவதும் இல்லை.
கண்ணை நம்பாதே.
பொன் பொருளை கண்டவுடன்
வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே.
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எதுவான போதிலும் ஆகட்டுமே.
நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே
என் மூலதனம் ஆகும்.
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>



