Kanavae Kanavae Official Video Song -Padalvarigal

Song 03 KANAVE KANAVE Artist ANIRUDH Album DAVID

மௌனமான மரணம் ஒன்று
உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது
திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது
நிஜமும் போனது
எனக்குள் என்னையே தேடினேன்
கனவே கனவே கலைவதேனோ
கனாக்கள் கனமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
நானும் இங்கே வழியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசிப்போன வார்த்தையை
இது நியாயமா
மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா
கனவே கனவே
கனாக்கள் கனமாய்
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ