எப்படி கூகிள் நமது தரவை(data, MB) பணமாக மாற்றுகிறது?

கூகுள் தான் இன்றைய மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்! அதற்கு காரணம் நாம் தான்! ஆம் கூகிளின் சேவைகளை பயன்படுத்தும் நாம்தான் முக்கிய காரணம்! சரி இப்போது கூகுள் எப்படி நமது தகவல்களை காசாக்குகிறது என பார்ப்போம்!

எப்படி கூகிள் நமது தரவை(data, MB) பணமாக மாற்றுகிறது?

டிஜிட்டல் விளம்பரங்களின் மூலமாக.

ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்க முற்படுகிறேன். நாம் ரோட்டில் செல்லும் போது ரோட்டின் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகளை பார்த்திருப்போம். அந்த ரோடு போலத்தான் ஒவ்வொரு வெப் சைட் டும், அதன் பக்கங்களும்.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் பெரும்பாலான வெப் சைட்டுகள் தங்களுடைய பக்கங்களின் மேல், கீழ் இட வலப்புறங்களை தங்களின் வசதிக்கு ஏற்ப கூகுளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்கள்.

அந்த பகுதியில் எந்த விளம்பரங்களை காட்ட வேண்டும் என்பதை கூகிள் முடிவு செய்யும்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்.

யாருக்கு விளம்பரத்தை காட்ட வேண்டும்?

எப்போது காட்ட வேண்டும்?

எந்த விளம்பரத்தை காட்ட வேண்டும்?

இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தெரிவதற்கு கூகுளுக்கு நம்முடைய தரவுகள் தேவைப்படுகிறது.

உதாரமானாக நான் ஒவ்வொரு முறை அயல் நாடு செல்லும் போதும் தாமஸ் குக் வெப் சைட்டுக்கு (Forex) முதலில் செல்வேன். அதன் பின் நான் செல்லும் அனைத்து தளங்களிலும் ஹோட்டல் மற்றும் கார் புக்கிங் செய்வதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வரத வரத் தொடங்கும்.

நாம் பயன்படுத்தும் உலாவி (Browser) மற்றும் இயங்கு தளத்தில் (OS Android) உள்ள குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரி தகவல்களை முழுமையாக பயன்படுத்தி நம்முடைய அடுத்த தேவை என்ன என்பதை கூகுளை கணித்து விடும்.

நம்மிடம் நண்பன் போல் காட்டிக்கொள்ளும் கூகிள், விளம்பரதாரரிடம் வசூல் ராஜாவாக மாறி,

விளம்பரங்களை காட்டுவதற்கு ஒரு கட்டணம், விளம்பரங்களை பார்வையாளர்கள் கிளிக் செய்தால் அதற்கு ஒரு கட்டணம் என பல்வேறு வகைகளில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து விடும்.

மற்ற விளம்பர ஊடகங்களுக்கு இல்லாத சில சிறப்பம்சங்கள் இந்த டிஜிட்டல் விளம்பர முறைக்கு உண்டு.

  1. Globalized Platform : நம்ம ஊர் துபாய் குறுக்கு சந்தில் உள்ள ஒருவர் துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவின் மாடியில் உள்ள ஒருவருக்கு தன் விளம்பரத்தை காட்ட முடியும்.
  2. தனிப்பட்ட விளம்பரங்கள் (Personalized Advertisements) நமது அச்சு ஊடகங்கள் தொலை காட்சி வாயிலாக வரும் விளம்பரங்கள் அனைத்தும் பொதுவானவை. உதாரணத்திற்கு "மனோ பேஜ் நம்பர் 169 ல என்ன பாடம்" என்று சன் டிவி யில் நீங்கள் விளம்பரம் பார்க்கும் போது உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அதே விளம்பரத்தை தான் பார்ப்பார். ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் நீங்களும் உங்கள் பக்கத்து வீட்டு காரரும் ஒரே வெப் சைட்டை பார்க்கும் போது இரு வேறு விளம்பரங்களை உங்களுக்கு காட்ட முடியும்.

இந்த சிறப்பம்சங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கூகிள், நம்முடைய தரவுகளைப் பயன் படுத்தி விளம்பர நிருவனங்கள் தங்களின் எதிர்கால வாடிக்கையாளர்களை அடைய அவர்களுக்கு உதவுகிறது.

Google Display Advertisements

இந்த படத்தில் ஓர் ஜுவெல்லரி கடையின் விளம்பரம் காட்டப் படுவதை கவனித்தீர்களா? அது மேலே உள்ள ஐஸ்வர்யா ராய் விளம்பர படத்தை நான் கூகிளில் தேடியதன் விளைவே.

மேலே உள்ள படத்தை நான் பதிவிறக்கம் செய்த உடன் thatstamil இணைய தளத்திற்கு சென்ற தால் கூகிள் நான் நகை வாங்க விருப்பம் உள்ளதாக நினைத்துக் கொண்டது.

ஆனால் அதற்கு மேலே உள்ள படம் கோராவில் பதிலளிக்க பதிவிறக்கம் செய்யப் பட்டது என்பதை அறிய முடிய வில்லை.

வட்டமிட்ட இடத்தை கவனிக்கவும்.