வேலைக்கமர்த்தல் (staffing) என்றால் என்ன?
வேலைக்கமர்த்தல், ஆளெடுத்தல் வரைவிலக்கணங்கள்

வேலைக்கமர்த்தல் (Staffing)
வேலைக்கமர்த்தல் என்பது திறமை வாய்ந்த ஊழியர் குழுவைத் தேர்ந்தெடுத்து, முழுமையாகப் பயன்படுத்தி, தக்க வைத்துக் கொள்ளும் முகாமைத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகும் இதன் முக்கிய நோக்கம், ஆரோக்கியமான தனிநபர் உறவுகளை நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் நிலை நாட்டுவதன் மூலம் பேணுவதாகும். இதன் மூலம் ஊழியர் திறமையுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் நோக்கங்களை தொகுதியை (Personal) அடைவதுடன், ஊழியர்கள் விரும்பும் தனி நபர் மற்றும் சமூக தேவைகளை அளித்து அவர்களை மனநிறைவடையச் செய்வதாகும்
வேலைக்கமர்த்தல் வரைவிலக்கணம்
கூண்ட்ஸ் ஓ டோன்னல் அவர்களின் கூற்றுப்படி, வேலைக்கமர்த்தல் என்பது, நிறுவன அமைப்பு முறையின் பல்வேறு நிலைகளில் வேலை செய்யத் தேவையான மொத்த ஊழியரை (work force) அடையாளம் கண்டு, வேலை விவரப்பட்டியல் தயாரித்து ஆளெடுத்தல், தெரிந்தெடுத்தல், இடம் குறித்தல், பதவி உயர்வு, மதிப்பீடு செய்தல், ஈடு செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் நிரப்புவதாகும்.
ஆளெடுத்தல்
ஆளெடுத்தல் என்பது தொழிலாளர் மூலங்களைக் கண்டு படித்து அவர்களை எவ்விடத்திலுருந்து வேலைக்கமர்த்துவது என்றும், மேலும் அவர்கள் தாங்களாகவே வேலைக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டும் நடைமுறையாகும்.
வரைவிலக்கணம்
வில்லியம்ஸ் டீ வெர்தர் மற்றும் கெய்த் டேவஸ் அவர்களின் கூற்றுப்படி ஆளெடுத்தல் என்பது வேலைக்குத் தேவயானவர்களைக் கண்டுபடித்து வேலைக்குத் தகுதியுடைய விண்ணப்பதாரர்களைக் கவருவதாகும். இந்த நடைமுறை புதிய ஆட்களைத் தேடுவதில் ஆரம்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் வரை தொடர்கிறது இதன் விளைவு விண்ணப்பதாரர்களின் குழுவிலிருந்து புதிய தொழிலாளர்களைத் தெரிந்தெடுத்தல் ஆகும்.
இவ்வாறு ஆளெடுத்தல் வேலை என்பது கிடைக்கக் கூடிய ஆளினர் மூலங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் தொடர்வதைக் குறிக்கிறது