அழிவு பாதையில் சேதன விவசாயம்
பசுமை புரட்சி எப்போது? கலப்பாக்கம், இயந்திர பயன்பாடு, களை மற்றும் பூச்சி நாசினி பயன்பாடு

மனித இனத்தின் தோற்ற காலத்தில் வேட்டையாடுதலுக்கு அடுத்ததாக காய்,கனிகள் மற்றும் இலைத்தழைகளை பறித்து உண்பதற்கு பழகிய நாளதில் தொடங்கி மனித இன வளர்ச்சியின் பின்னணியில் படிப்படியாக தானும் வளர்ச்சியுற்று தன்னிறைவு மற்றும் ஜீவணோபாயத் தொழிலாக மாற்றமடைந்து வலு நிலை பெற்றதே இச் சேதன விவசாயம் ஆகும். அன்றைய கால வேடுவ மனிதனின் இறைச்சியை அடிப்படையாக கொண்ட உணவு முறைக்கு அடுத்ததாக அடையாளப் படுத்தப்பட்டதே தாவர இலைத் தழைகள் மற்றும் காய்,கனிகளை முதன்மையாக கொண்ட உணவு முறை கட்டமைப்பாகும். இவ் தாவர உணவு கட்டமைப்பானது பிற்கால மனித இன வளர்ச்சியில் உணவுக்கு ஏற்ற தாவர இனங்கள் என தனித்து அடையாளப் படுத்தப்பட்டு அவை காய்கள்,கனிகள்,கிழங்கு வகைகள், இலைத் தழைகளை உள்ளடக்கிய கீரை வகைகள் மற்றும் தானிய வகைகள் எனும் வகைபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு இவை பிற்காலத்தில் இயற்கையாக மனித தேவைக்கு பற்றாக்குறையாகவும் கிடைக்க பெறாத தன்மையும் ஏற்பட மாற்று தீர்வாக மனித முயற்சியில் பயிரிட்டு தோற்றுவித்து பெற்றுக் கொண்டு தன் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். இவ்வாறு மனிதனால் தாவர பயிரிடப்படும் முறைமையானதே விவசாயம் எனும் நாமம் கொண்டு அடையாளப் படுத்தப்படுகின்றது. இவ்வாறு தோற்றமுற்ற விவசாயம் பற்றியும் அதன் அழிவு பாதை பற்றியதுமான ஒரு விரிவான தொகுப்பே இக் கட்டுரை.
இவ்வாறு தன் ஜுவணோபாயத்துக்காக விவசாயத்தை கைக் கொண்ட மனித சமுதாயத்தில் பிற் காலத்தில் மனிதனது பிறதான உணவு கட்டமைப்பாக இவ் விவசாய பயிர் செய்கை விளை பொருட்கள் காணப்பட்டன. ஒரு புறம் மதம், இறை நம்பிக்கை , முதலானவையும் உயிரின சார் பாதுகாப்பு எண்ணப்பாடும்
இறைச்சி உணவுக்கான விலங்கினங்களது தேய்வு,எண்ணிக்கை தன்மை என்பவையால் வேட்டையாடுதல் மூலமான உணவு கட்டமைப்பில் குறைத் தன்மை ஏற்பட மாற்று உணவு முறையான விவசாய பயிர்ச் செய்கையானது துரிதமடைந்தது. மனித வளர்ச்சில் ஆயிரத்தெற்ணூறாம் ஆண்டுகளின் பின்னர் குறுகிய கால கட்டத்தில் அதிகரித்த மனித வளர்ச்சி மற்றும் அரசினால் விதிக்கப்பட்ட வன விலங்கு வேட்டை சார் வரைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக இறைச்சி உணவு முறைமையை விடவும் விவசாய உணவு பொருட்கள் மீதான அதிகரித்த தேவைப்பாடுகளானது விவசாயம் மனித சமூகத்தின் பிரதான தொழிலாக மாற்றமுற்றது.
அன்றைய பண்டமாற்று முறை நடைமுறையிலிருந்த காலக் கட்டத்தில் பண்டமாற்று பொருட்களாக பிரதான இடம் வகித்தவை இவ் விவசாய பொருட்களே ஆகும். இவற்றுள் நெல், கிழங்கு வகைகள், தானிய வகைகள் முதலானவை பண்டமாற்று பொருட்களாக பிரதான பங்கு வகித்தன. அவ்வாறு அன்றைய மனிதனது குடும்பம் சார் விளை நிலங்களில் விளையப் பெற்ற தானியங்கள் மற்றும் கிழங்கு வகைகள் முதலானவற்றை சகோதர குடும்பங்களிடம் பகிர்ந்து அவர்களின் விளை நிலங்களில் விளையப் பெற்ற மாற்று தானிய வகைகள் மற்றும் கிழங்கு , இலைதழைகள் முதலானவற்றை பெற்று தன் ஜீவணோபாயத்தை நடாத்தி செல்லும் நடைமுறையானது காணப்பட்டது. பிற்காலத்தில் பணம் எனும் கொள்வனவு மூலப் பொருளின் தோற்றத்தோடு மேலும் வளர்ச்சியுற்ற விவசாய செய்கையானது. பணத்தை அடிப்படையாக கொண்ட கொள்வனவு முறைமையை நடைமுறைப் படுத்தியது. இதனால் முதற் காலத்தில் தன் வீட்டுத் தோட்டத்தில் தன் வாழ்வை கடத்துவதற்கு தேவையான பல்வேறு விவசாய பயிர்களை ஆங்காங்கே கொண்ட பல்லின கலப்பு பயிர்ச் செய்கை நடைமுறையாக கொண்டிருந்தவன் தன் தேவைக்கு அப்பாற் ஓரின பயிரை இலாப நோக்கம் கருதி பரவலாக பயிரிடும் நடை முறையை கையாள ஆரம்பித்தான்.
இவ்வாறு விற்பனை நோக்கத்தில் தன் விவசாய செய்கையை கையாள ஆரம்பித்த மனிதன் சந்தையில் அதாவது மனித சமூகத்தில் அதிகரித்த கேள்வி நிலவும் பயிர்களை இணங்கண்டு பயிர்ச் செய்கை செய்வதற்கான நடை முறையை நேற் கொண்டான் இவ்வாறு பிரதான உணவு பொருட்களான நெல்,குரக்கன்,கோதுமை,வரகு,கடலை,பட்டானி,பாசிப்பயறு முதலான தானிய வகைகளையும் உருளைக் கிழங்கு ,மரவள்ளி கரட்,பீட் முதலான கிழங்கு வகைகளையும் இதற்கு மேலாக கத்தரி,போஞ்சி,கோவா,முதலான காய்கறி வகைகளையும் பிரதான பயிர்ச் செய்கை பயிரினங்களாக கொண்டு பயிர்ச் செய்கையை ஆரம்பித்தான். இவ்வாறு பயிர்ச் செய்கை மூலம் கிடைக்கப் பெற்ற விளைச்சலை தன் சமூக சிறு நகர பகுதிகளில் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கான நடைமுறையினை மேற்கொண்டான்.இவ்வாறு தொடர்ந்த அன்றைய ஜீவணோபாய தொழிலாக அமைந்த விவசாய செய்கையில் கால மாற்றத்தால் பாரிய கேள்வி நிலையானது தோற்றம் பெற தொடங்கியது. இந் நிலைக்கு இயற்கை காலநிலை மாறுபாடு மற்றும் மழை வீழ்ச்சியின் தன்மை முதலானவை அன்றைய சமுதாயத்தில் பாரிய சவாலாக அமைந்தது. அவ்வாறு மழையை ஆதாரமாக கொண்டு காலங்களை பெரு போகங்கள் மற்றும் சிறு போகங்கள் எனும் வகைபாட்டுக்குள் வரையறைப் படுத்தி போகங்களின் அடிப்படையில் விவசாய பயிர்ச் செய்கையை முன்னெடுத்து அதனை சேமித்து வைத்து அடுத்த போகத்தின் விளைச்சல் வரை சந்தைப்படுத்தி உழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயிர்ச் செய்கைகளை முன்னைய கால கட்டங்களைவிட அதிகளவில் மோற்கொள்ள ஆரம்பித்தான்.
கால ஓட்டத்தில் விவசாயக் குடும்பங்கள் சேவை நிலைத் தொழில்களிலும் தொழிற்சாலை சார் ஏனைய தொழிற் துறைகளிலும் உள்வாங்கப்பட மனித சமூகத்தில் படிப்படியாக விவசாயக் குடும்பங்களது எண்ணிக்கையும் விவசாயத்தை விருப்ப தொழிலாக புரியும் விவசாயிகளது எண்ணிக்கையும் படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இதனால் விவசாய துறை சார் ஈடுபாடுகளானது சடுதியாக குறைய ஆரம்பித்த அதே வேளை விவசாய செய்கையின் அளவு குறைவடைந்தமையினால் சமூகத்தவரிடையே விவசாய உணவு பொருட்களுக்கான கேள்வி நிலையானது வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. மறு புறத்தில் உலக நாடுகளில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி மற்றும் கல்வி துறை சார் விருத்தி முதலான காரணிகளால் விவசாய துறை சார் தொழில் விருப்பமானது வீழ்ச்சியுற்று மறுபுறம் சேவை மற்றும் தொழிற்சாலை முதலான தொழில் ஈடுபாடானது அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயத்தில் ஈடுபடாமல் ஏனைய தொழிற் துறையை கைக் கொள்கின்ற சமூக பிரிவினருக்கும் சேர்த்து குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய பயிர் செய்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய ஒரு சவால் மிகு நிலையானது தோற்றம் பெற்றது. மறுபக்கம் விவசாய தரப்பினருக்கு இந் நிலையானது அதிக இலாபத்தை தருவதாக அமைந்தாலும் கூட இன்றியமையாத தன் முழுமையான மனித உழைப்பை இதற்காக செலவிட வேண்டிய ஒரு நிலையும் இவ்வாறு தன் முழுமையான பங்களிப்பை வழங்கியும் கேள்விக்கான உச்ச பட்ச விளைச்சலை பெற்று கொள்ள முடியாத நிலையும் பயிரினங்களது விளைச்சல் அளவும் பெரும் சவால் நிலையாக தோற்றம் பெறத் தொடங்கியது.
இந் நிலையிலிருந்து விவசாயிகள் மீண்டு வரவும் விவசாய உணவு பொருட்களின் கேள்வி நிலைக்கு தீர்வு காணவும் இருபதாம் நூற்றாண்டின் முதற் காற் பகுதியில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி மற்றும் துரித தன்மையை அடிப்படையாக கொண்டு பாரிய ஆய்வுகள் இடம் பெறத் தொடங்கின. இவ் ஆய்வின் உச்ச கட்ட தீர்வுகளே இன்றைய கால கட்டத்தில் சேதன விவசாயத்தின் தன்மையானது அழிவு பாதைக்கு செல்ல பெரும் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது பொய்க்காது. அவ்வாறு விஞ்ஞான வளர்ச்சியால் விவசாயத்துக்கு கிடைக்கப் பெற்ற மாற்றுத் தீர்வுகளை பின்வரும் மூன்று வகைபாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
அவ்வாறு விவசாயத்திற்கு அறிவியல் துறையால் வழங்கப்பட்ட தீர்வாக
*.பசுமை புரட்சி
*.கலப்பாக்க முறைமைகள்
*.இயந்திர பயன்பாடு
*.கலை மற்றும் பூச்சி நாசினி பயன்பாடு
முதலானவைகள் முன்வைக்கப்பட்டன.
பசுமை புரட்சி எப்போது?
பசுமை புரட்சி பற்றி நோக்குவோமானால் இதுவரை காலமும் விவசாய பயிர்ச் செய்கைக்காக ஒரு நிலத்தில் தொடர்ச்சியாக ஒரே பயிர்ச் செய்கையை செய்து வந்ததன் விளைவாகவே மண் வளம் இழந்து மண்ணின் தரம் குன்றி விளைச்சலின் அளவானது வீழ்ச்சி பாதையில் சென்றுள்ளது என்பதை உணர்த்தியது. மறுபுறம் விவசாயத்துக்காக காட்டு நிலங்களை அழித்து இடம் பெறும் சேனைப் பயிர்ச் செய்கையின் விளைவாக விவசாய நிலங்களின் தொடர்ச்சியான பயன்பாட்டு தன்மையானது வலுவிக்கிறது எனும் ஆய்வு ரீதியான உண்மையை விவசாயிகளுக்கு தெளிவுப் படுத்தியது. இதனால் பிற்காலத்தில் விவசாய நிலத்துக்கான பெரும் தட்டுப்பாடானது நிலவும் என்பதை தெளிவுற உணர்த்திய அதேவேளை இந் நிலையிலிருந்து விவசாய துறையானது மீண்டு வருவதற்கான சில தீர்வுகளையும் முன்வைத்தது. அதன் அடிப்படையில் விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக ஒரே பயிரினை பயிரிடுவதனை தவிர்த்து தொடர்ச்சியாக சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட பயிரினங்களை பயிரிடுவதன் ஊடாக பயிர்ச் செய்கை மண் வளத்தை பாதுகாக்க முடியும் என இந் நிலைக்கான மாற்று தீர்வினையும் இதன் படி மண் வளத்தை பாதுகாக்கும் பயிரின வகைபாட்டையும் விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்தி வழங்கியது.
கலப்பாக்கம்
இதற்கு அடுத்ததாக கலப்பாக்கம் எனும் முறைமை ஊடாக இதுவரை காலமும் பயிரிடப்பட்ட சேதன பயிர்களின் ஊடாக தற்போதைய கால தேவைக்கு ஏற்றாற் போல உச்ச அளவிலான விளைச்சலை அடைய முடியாது என்பதை உணர்த்தி இதற்கு மாற்று தீர்வாக குறுகிய காலத்தில் கூடிய விளைச்சலை தரக்கூடிய மற்றும் காலநிலை வேறுபாடுகளுக்கு ஏற்றாற் போல தாக்குபிடித்து வளர கூடிய வகையிலான கலப்பாக்கம் செய்யப்பட்ட விதையினங்களை அறிமுகம் செய்து தீர்வு வழங்கியதோடு இளைய வளர்ப்பு,ஒட்டுதல் முதலான முறைகளை அறிமுகப்படுத்தி அதனூடாக மிக குறைந்த விளைநிலத்தில் மிக கூடிய விளைச்சலை பெற்றுக் கொள்ள வழிச் செய்தது. இவ்வாறு கலப்பாக்க முறையில் உருவாக்கப்பட்ட அதிக விதையினங்களேஇன்று வரையிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதே போல சம காலத்தில் விவசாயத்தை தொழிலாக மேற் கொள்ளும் குறித்த சில விவசாயிகளினால் மாத்திரம் விவசாயத்தை மேற்கொண்டு பூகோள ரீதியிலான உணவு கேள்வியை பூர்த்தி செய்ய முடியாது என்பதை உணர்த்தி இதற்கான இயந்திர பயன்பாட்டு முறைகளை மாற்று தீர்வாக வழங்கியது.அவ்வாறு முதற் காலத்தில் மண்ணை பதப்படுத்த பயன்படுத்த விலங்கினங்களை பயன்படுத்திய முறைமையை மாற்றி நவீன இயந்திர முறைமையில் தொடங்கி பின் விதை விதைத்தல்,நீர்பாசனம், நாட்டு நடுதல் உற்பட விவசாயத்தின் பாரிய செயற்பாட்டு முறைமையினை இயந்திரமயமாக்கி தீர்வு வழங்கியது. இதே போல நவீன முறைமையால் உருவாக்கப்பட்ட விதையினங்களின் துரித வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் விதமாகவும் நோய் கட்டுபாடு மற்றும் பீடைகளை அழிக்கும் நடைமுறைக்காக கிருமி நாசினி மற்றும் இரசாயன உர வகைகளை அறிமுகப்படுத்தி அதிக விளைச்சலை பெறுவதற்கான தீர்வினை வழங்கியது.
இவ்வாறு இன்றைய காலப் போக்கில் அழிவுத் தன்மையில் பயணிக்கும் விவசாய துறையில் மனித சமூகத்தின் உணவு கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில் இத் தீர்வுகள் அமையப் பெற்றாலும் கூட அதிகரித்த இயந்திர பயன்பாட்டு முறை மூலமாக அதிமான மண் வளமிழத்தலானது இடம்பெற்று வருகின்ற அதே வேலையில் அளவுக்கு அதிகமான இரசாயன கலை நாசினி மற்றும் இரசாயன உர பயன்பாட்டால் விவசாய பயிர் நிலங்கள் மற்றும் விளைபொருள் இரசாயன தன்மை மிக்கதாகவும் மாற்றமடைந்து வருகின்றமையானதும் இதனை உட்கொள்ளும் மனித சமூகத்தினர் உடலியல் சார் நோய் நிலைமைகளை எதிர்நோக்குகின்றனர் என்ற விவசாய துறை சார் அறிவியல் ஆய்வுகள் ஊடாக உறுதி படுத்தப்பட்டுள்ளமையானது மிகவும் கவலைக்குறியதாகவே அமைகின்றது.
இவ்வாறு அதிக விளைச்சலுக்கான இலாப நோக்கம் கருதிய இரசாயன தன்மை மிக்க விளைச்சலின் அதிகரிப்பால் இன்று அழிவு பாதையின் உச்ச கட்டத்திலிருக்கும் சேதன விவசாயம் பற்றி சற்று திரும்பிப் பார்ப்பது அவசியமே. இன்றைய கால பின்னணியில் சேதன விவசாயத்தை அழிவு பாதையிலிருந்து மீட்டு நம் உயிர் காத்து கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமுமே காணப்படுகின்றது. இதனை சிந்தித்து நமது குடும்ப கட்டமைப்புக்குள் இயன்ற வரை சேதன விவசாயத்தை நம் குடும்ப கட்டமைப்புகளில் இருந்தே வீட்டுத் தோடங்களூடாக மேற் கொண்டு மனித சமூகத்தின் அழிவை தடுப்போம்.
சிறந்த உணவே நோய் காக்கும் மருந்து
அன்புடன் மலையக கவிஞன் : மு.அனுஷன்
Whats Your Reaction?






