மீடியா துறையில் இருக்கும் நபரை திருமணம் செய்யலாமா..? பல பேரை சந்திப்பதால் நீங்கள் அவருக்கு ஸ்பெஷலாக தெரிவீர்களா..?
மீடியா துறையில் இருக்கும் நபரை திருமணம் செய்யலாமா..? பல பேரை சந்திப்பதால் நீங்கள் அவருக்கு ஸ்பெஷலாக தெரிவீர்களா..?

கேள்வி : என் காதலர் சிறந்த புகைப்படக்கலைஞர். அவர் அதை மிகவும் நேசித்து செய்கிறார். அவர் பெண்களை நிர்வாணப் புகைப்படம் எடுப்பதில் கைத்தேர்ந்தவர். ஆனால் அது எனக்கு மிகவும் பொறாமையாகவும் , பயமாகவும் உள்ளது. ஏனெனில் தினமும் பெண்களை அப்படி பார்ப்பதால் எதிர்காலத்தில் திருமணத்திற்குப் பின் என்னை அப்படி பார்க்கும்போது எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்விடுமோ என பயமாக உள்ளது.
பதில் : இந்த மாதிரியான பயம் வருவது சகஜம்தான். குறிப்பாக தம்பதியில் யாரேனும் ஒருவர் மீடியா துறையில் இருந்தாலே அவர்களுக்கு இருக்கும் புகழ் வெளிச்சமும் , மரியாதையும், ரசிகர் கூட்டமும் மற்றவரை பயமுறுத்தும். பொறாமைப்பட வைக்கும். உங்கள் பிரச்னையிலும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் எடிட் செய்யப்பட்ட, மேக்அப் அப்ளை செய்யப்பட்ட வெறும் மாடல்கள்தான். அவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள்தான் அவருக்கு நிஜம், எதார்த்தம். எனவே அவர் உங்களை ஒருபோதும் அவர்களுடன் ஒப்பிட வாய்ப்பில்லை.
நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் தன்னம்பிக்கை என்பது உங்கள் உடலமைப்பிலும் இருக்க வேண்டும். உங்கள் தகுதியை நீங்களே மெச்சிக்கொள்ளும் அளவு நம்பிக்கைகொள்ள வேண்டும். உங்களை நீங்களே தாழ்வாக நினைத்து பின் வாங்காதீர்கள். அவர் இத்தனை பெண்களை பார்த்தும் உங்கள் மீது காதல் கொண்டிருக்கிறார் எனில் எதனால் அவர் உங்களால் ஈர்க்கப்பட்டார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அந்த விஷயத்தை மேலும் அவருக்காக சிறப்பாக செய்யுங்கள். இந்த உறவுக்குள் உங்களை கொண்டு சென்றது எது என்பதையும் கண்டறியுங்கள்.
நீங்கள் சொல்வதுபோல் அதிகம் நேசிக்கும் அவரின் இந்த துறையை நீங்கள் கைவிடச் சொன்னாலோ அல்லது தவறாகப் பேசினாலோ உங்கள் மீது கோபம்தான் வரும். இதனால் உறவுக்குள் விரிசல் விழ ஆரம்பிக்கும். எனவே அவருக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்பதே சிறந்தது.
உங்கள் துணை செய்வது அவர் நேசித்து செய்கிறார் என்றாலும் அவருக்கு அதுதான் தொழில். நிர்வாணமாக பெண்கள் நின்று கொண்டிருந்தாலும் அது அவர்களுக்கு தவறாக தெரியாது. தொழில் செய்யும் இடமாகத்தான் தெரியும். அதில் காம உணர்ச்சியுடன் ரசிக்கவோ ,சிற்றின்பம் காணவோ எதுவும் இருக்காது. வேலை செய்யும் சூழலில் அவர்கள் அந்த புராஜெக்டை முடித்து அனுப்ப வேண்டும், நல்ல முறையில் எடுக்க வேண்டும், லைட்டிங், எடிட்டிங் என வேலைபளுவில் சோர்வாகவும், களைப்பாகவும் , வேர்வையுடன்தான் இருப்பார்களே தவிற இதற்கு இடையில் சிற்றின்பம் காண இயலாது.
அதுவும் மற்ற வேலை சூழலைப்போல் அழுத்தங்கள் நிறைந்ததுதான். என்ன மற்ற இடங்களில் உடையோடு சுற்றுவார்கள். இங்கு உடையில்லாமல் இருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். இன்னமும் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் வெளிப்படையாகவே உங்கள் துணையிடம் இதுபற்றி பேசிவிடுங்கள். நானும் ஒருநாள் உங்களுடன் ஷூட்டில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டுப்பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்த சூழல் புரியும்.
அது வெறும் வேலை மட்டுமே. உங்கள் காதலரும் அங்கு ஒரு ஊழியர் அவ்வளவுதான். அங்கு இருப்பவர்கள் அனைவரும் புரஃபஷ்னல்ஸ். நிர்வாணமாக நிர்ப்பதால் இயல்பாகவே சிற்றின்ப எண்ணம் வந்துவிடாது. அதாவது, எடுத்த புகைப்படத்தை நல்ல கலர் டோனுடன், செக்ஸியாக இருக்க வேண்டுமெ மணிநேரக் கணக்காக ஒரு நிர்வாண உடலை முறைத்துப் பார்த்து எடிட்டிங் செய்கிறார் எனில் அவருக்கு அதனால் களைப்புதான் உண்டாகுமே தவிற கவர்ச்சி அல்ல. அதனால் அவருக்கு உடலுறவுக்கான தூண்டுதல் வராது. அப்படி அவருக்கு வரும் உடலுறவுத் தூண்டுதல் உங்களைப் பார்த்தால் மட்டும்தான் வரும். எனவே நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது அவர் தன் வேலையை அதிகம் நேசித்துச் செய்கிறார். இதை நினைத்து கொண்டாட வேண்டும். பெருமைப்பட வேண்டும். இதில் நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.