அமிர்தத்தின் சாகரமே..! பகுதி 1 | தொடர்கதை
காதல்

வெளிவர துடித்த கண்ணீரை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு ஜன்னலின் வழியே மாலை வேலையில் தன் இருப்பிடம் நோக்கி பறந்து செல்லும் பறவைக் கூட்டங்களை இரசித்த படி நின்றிருந்தாள் அமிர்த வர்ஷினி.
இரண்டு நாட்களாய் போதும் போதுமென்றளவிற்கு அழுதாகிவிட்டது இனியும் கண்ணீர் வடிக்க உடலிலும் சரி மனதிலும் சரி தெம்பு இல்லை. வேளாவேளைக்கு உணவு முதற்கொண்டு உடைவரை அனைத்தும் தங்கத்தட்டில் வைத்து கொண்டு வரப்படுகிறது அவளுக்காய் இருந்தும் ஏற்க மறுக்கிறது பெண்மனம்.
பிரமாண்டமான மாளிகை, விரல் சொடுக்கினால் வேலைக்காரர்கள்,நகம் வெட்டி விட கூட ஆட்கள் வந்து காலடியில் நிற்பார்கள் ஆனால் அவளோ இவை அனைத்தையும் துச்சமென அல்லவா பார்க்கிறாள்.இதே வேறு பெண்ணாய் இருந்திருந்தால் கிடைத்த வரை லாபம் என அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்றிருப்பாள்.
இன்றோடு அமிர்தா இந்த அரண்மனைக்கு வந்து.. இல்லையில்லை கடத்தி வரப்பட்டு மூன்று நாட்கள் விட்டது.
பாதையில் சென்று கொண்டிருந்தவளை அலுங்காமல் குலுங்காமல் ஒரு கும்பல் கடத்தி வந்து இங்கே விட்டு விட்டு சென்று விட்டது.
யார் இவர்கள் என்று அறியும் முன்னமே ஆறடியில் அசராது ஆண்மகன் ஒருவன் வந்து என்னை காதல் செய் என்று கண்முன் நிற்கிறான். அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்கே விளங்கி கொள்ள முடியாத அவல நிலை.
ஜன்னலில் வழியே வானை பார்த்திருந்தவளை பின்னால் இருந்து அனைத்தான் அவன்.
அவன் அனைப்பு இதத்தை கொடுக்கவில்லை எரிச்சலை தான் உண்டு பண்ணியது..அவள் கையில் கத்தியென்ன ஒரு ஊசி இருந்திருந்தால் கூட அவனை கொஞ்சம் கொஞ்சமாக குத்தி குத்தியே கொன்றிருப்பாள்.
அந்த பறவைங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்ல..உன்ன விட அழகு குறைவு தான் பேபி.. என்றவன் தானும் வானை ரசிக்கலானான்.
இயந்திரமாக வாழ்ந்தவன் அவளை பார்த்த சில நாட்களில் பின்னர் தான் காதல் நோய் கண்டு இந்த மாதிரி வேலைகளை செய்து வருகின்றான்.இயற்கை ரசிக்கிறான் இசையை ரசிக்கிறான், அவளுக்கு எதெல்லாம் பிடிக்கும் அனைத்தையும் ரசிக்கிறான் அவளின் வெறுப்பையும் கூட ரசிக்கிறான்.
இருபத்தியெட்டு வயது ஆணழகன் அமிர்த சாகரன்.நாட்டில் முன்னனி இளம் தொழிலதிபன் அவனுக்கென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை அமிர்தாவை பார்க்கும் வரையிலும்.
ஒரு சில நாட்களின் முன்பு அவன் கார் பஞ்சர் ஆகி விட்டது. நடு ரோட்டில் நின்று தனக்கு இன்னொரு கார் அனுப்புமாறு தன் பீஏவிடம் ஃபோனில் கத்தி கொண்டிருந்தான் பொறுமையிழந்து.
அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த அமிர்தா எதிர் பாரா விதமாக அவன் மேல் மோதிவிட இருவரும் சாலையில் விழுந்தார்கள். பெண்கள் என்றாலே சாகரனுக்கு எப்பொழுதும் ஒரு வித வெறுப்பு உண்டு அவர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்ற எண்ணம் அவன் மனதில்.அவன் அழகில் மயங்கி அருகில் வரும் பெண்களை பார்வையாலேயே தள்ளி நிறுத்தி விடுவான்.இது வரையிலும் எந்த பெண்ணும் அவனை நெருங்கியதில்லை அவனும் எந்த பெண்ணையும் நெருங்கியதில்லை.
அமிர்தாவையும் அதே வெறுப்புடன் பார்த்தவன் கோபம் கொண்டு அவளை அறைந்தும் விட்டான்..
யூ இடியட் ரோட பார்த்து டிரைவ் பண்ண மாட்டியா... கவனத்தை எங்க வச்சிட்டு தான் வண்டி ஓட்டுவிங்களோ... கோபத்தில் பற்களை கடித்தவன் மீண்டும் அவளை அடிக்க போக அவளோ தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
சாரி..சாரி சார் நா தெரியாம இடிச்சிட்டேன் உங்க கைல பிளட் வருது கைய காட்டுங்க என அவன் கரத்தை பிடித்து திருப்பி பார்த்தாள் அமிர்தா. கீழே விழுந்ததில் அடிப்பட்டு உதிரம் கசிந்தது.
நிச்சயம் சாகரன் அடித்தற்காய் அமிர்தா அழவில்லை அவன் காயத்திற்கான அழுகை அது என அவளை பார்த்ததுமே புரிந்து கொண்டான் சாகரன்.
நல்லவேளை அந்த சாலை ஊரின் ஒதுக்கு புறம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்கவில்லை.அவன் கைப்பிடித்து ஒரு கல்லில் அமர வைத்தவள் தன் ஸ்கூட்டியில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மெதுவாய் அவன் காயத்தை துடைத்து எடுத்தாள்.
உச்சி முதல் பாதம் வரை அவளை கண்களால் ஸ்கேன் செய்தான் சாகரன்.மெல்லிய தேகம், சந்தனமும் மஞ்சளும் குழைத்தெடுத்த நிறம்,கார் கூந்தல், அஞ்சனம் தீட்டிய படபடக்கும் விழிகள் ,சிவந்த அதரங்கள் என குட்டி பேபிடாலை போல இருந்தாள் அமிர்தா.
அவளது கண்ணீர் மட்டும் நிற்காமல் இருக்க காரணம் தெரிந்தும் அவள் வாயால் கேட்க ஆர்வம் கொண்டவன் சற்று காட்டமாகவே கேட்டான் எதுக்கு இப்போ அழறே...கண்ணை தொட இரிட்டேட் பண்ணாம..குரலை உயர்த்த..
என்னால தானே உங்களுக்கு காயமாச்சு எப்படி அழாம இருக்க முடியும்.. அவன் மிரட்டியதில் அழுகை இன்னும் கூடிப்போனது.
எனக்காகவா இந்த கண்ணீர் எனக்காக ஒருத்தி அழுகின்றாள் என் காயத்தை கண்டு துடிக்கிறாள் என்ற உணர்வே ஆணவனை அவள் மேல் காதல் கொள்ள வைத்தது.
என்ன மாதிரியான உணர்விது இத்தனை வருட காலத்தில் எந்த பெண்ணிலும் சலனம் கொள்ளாத அவன் மனம் சிறுபெண்ணின் அக்கறையில் கரைந்து போனது.கண்டதும் காதல் எல்லாம் சினிமாவில் மட்டும் தான் வருமா..?இதோ வந்துள்ளதே முதல் முறையாக காதலை உணர்கிறான் ஆனால் அதை அவளிடம் மொழியும் வழி தான் தெரியவில்லை.
உன்னோட ஏஜ் என்ன கையில் கட்டு போட்டு கொண்டிருந்தவளை விழிகளால் விழுங்கி கொண்டே அவன் கேட்டு வைக்க தலையை நிமிர்த்தாமல் இருபத்தியொன்று என்றாள் அவள்.
அப்பாடா கட்டு போட்டாச்சு..அவள் இதழில் மெல்லிய புன்னகை.. அதையும் இதயத்தில் சேமித்து கொண்டான் அவன்.
உங்களுக்கு பெய்ன் ஏதும் இருக்கா அவன் முகத்தை ஆராய்ந்து கொண்டே கலக்கத்தோடு கேட்டாள் அமிர்தவர்ஷினியானவள்.
இல்லையென தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவன் அவள் மேல் இருந்து பார்வையை அகற்றவில்லை.
ஓக்கே சார் அப்போ நா கிளம்புறேன் என்றவள் விழுந்து கிடந்த தன் ஸ்கூட்டியை தூக்க போக அதற்கு முன்னமே அவன் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தினான்.
தேங்க் யூ சார் என்றவள் உங்க பேர்..என கேள்வியாக அவனை பார்க்க
அமிர்த சாகரன் என்றான் தன் சிம்ம குரலில்..
வாட்.. அட கைக்குடுங்க சார் என் பேரும் அதே தான்... அமிர்த வர்ஷினி ஒரே மாதிரி பேர் வச்சிருக்கோம் ரெண்டு பேரும்..என்று சிரித்தவள் ஃபிரண்ட்ஸ் என அவன் முன்பு கையை நீட்ட அதற்காகவே காத்திருந்தவன் போல உடனே அவனும் கையை நீட்டி விட்டான்.
சட்டென்று ஞாபகம் வந்தவளாய் தன் ஹேன்ட் பேக்கில் இருந்து ஒரு கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
ரொட்ல வச்சி கொடுக்குறேன்னு தப்பா நினைக்காதிங்க சார் இப்போ தான் நாம ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோமே அதான் சாரி.. இன்னும் பத்து நாள்ள எனக்கு கல்யாணம் இருக்கு நீங்க கண்டிப்பா வரணும் என பெரிய இடியாய் அவன் தலையில் இறக்கி வைத்தாள்.
காதல் மலர்ந்த நொடியே அது கருகி போகுமென அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இது தான் காதலின் அவஸ்தையோ..வலியும் சுகமும் ஒரு சேரவே கிடைக்கின்றதே..
கன்டிப்பா வருவேன் அமிர்தா..மர்மபாய் சிரித்தவன் அடுத்த பத்தாவது நாளில் அந்த திருமண மண்டபத்தில் இருந்தான்.
அழகு மயிலென மணவறையில் அமர்ந்திருந்த அமிர்தா சாகரைனை கண்டதும் சினேகமாக புன்னகைத்தாள்.
அவனும் புன்னகைத்து விட்டு அமர்ந்து கொள்ள...நாழியாறது மாப்பிள்ளைய அழைச்சிண்டு வாங்கோ..ஐயர் சொல்ல..
மாப்பிள்ளைய காணோம் என்று கூட்டத்தில் இருந்து ஒரு சத்தம்..
என்னது மாப்பிள்ளைய காணோமா?
என்ன மாப்பிள்ளை ஓடி போய்ட்டாரா..?
மாப்பிள்ளைக்கு பொண்ண புடிக்கலையா...?
ஒவ்வொருவரும் வாய்க்கு வந்த படி கதையை திரித்து கூற.கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் அமிர்தா.
அவளின் பெற்றோர் ஒரு புறம் அழுத கொண்டிருக்க திருமணம் நின்ற மகிழ்ச்சியில் சந்தோஷமாக வெளியேறினான் சாகரன்.
இரண்டு நாள் கழித்து அமிர்தா கடைத்தெருவிற்கு வர பாவி பையன் ஆட்களை வைத்து அவளை கடத்தி வந்து விட்டான்.
அவன் தான் கடத்தி வந்தான் என்றறிந்த அமிர்தா வீட்டை விட்டு வெளியேற பார்க்க நீ என் லவ் பண்ணலனா உன் அப்பா அம்மா உன் தங்கச்சி மூனு பேரையும் கொன்றுவேன்..என அவர்களையும் கடத்தி வந்து தனியாய் அடைத்து வைத்து விட்டான்.
கத்தி முனையில் வைத்து காதல் செய்ய சொல்கிறான்.. காதல் எப்படி வரும் வெறுப்பு மட்டுமே வரும்.இதில் குடும்பத்தை வைத்து வேறு மிரட்டுகிறானே கொலை வெறியே வந்தது அவன் மேல்.காயத்திற்கு மருந்திட்டது ஒரு குத்தமா..இப்படி செய்வான் என்று தெரிந்திருந்தாள் அன்றே ஒரு கல்லை அவன் தலையில் தூக்கி போட்டு கதையை முடித்திருப்பாளே..
கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தவளை கலைத்தது அவனது குரல்.
ஹேய் பேபி என்ன யோசனை பலமா இருக்கு...என்ன எப்படி கொலை பண்ணலாம்னு யோசிக்கிறியா என்றான் நக்கலாக..
அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா கன்டிப்பா செய்வேன் என்றாள் அவளும் திமிராக..
பட் எனக்கு சீக்கிரமா சாக விருப்பம் இல்லையே பேபி...உன் கூட நூறு வருஷம் வாழனுமே அதுக்குள்ளே சாக என்ன அவசரம்...
சரி வா சாப்பிட போவோம் லேட் ஆகிடுச்சு என அவள் கைப்பிடித்து இழுக்க.. எனக்கு பசி இல்ல நீங்க போய் சாப்பிடுங்க என்றாள் விட்டேத்தியாக.
எனக்கு பசிக்குதே நீ வந்து ஊட்டி விடு என அமிர்தாவை தூக்கி கொண்டே சென்றான் கேடி பையன்.
அங்கிருந்த வேலைக்காரர்கள் யாரும் இதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை மாற்றாக மகிழ்ச்சியே கொண்டார்கள்.இது வரை சாகரன் சிரித்து அவர்கள் கண்டதேயில்லை அமிர்தா வந்ததிலிருந்து அவனின் சிரிப்பை மட்டுமே காண்கிறார்கள்.
பொம்மையை போல அவளை தூக்கி வந்தவன் டைனிங் டேபிளில் அமர வைத்து விட்டு உணவு நிரம்பிய தட்டை அவள் புறம் தள்ளிவைத்து விட்டு அவள் முகத்தை பார்த்திருக்க வேண்டா வெறுப்பாக உணவை பிசைந்து ஊட்டி விட்டாள் அமிர்தா.
அந்த வெறுப்பு கூட இனிமையை தான் தந்தது அவனுக்கு.பெயரில் மட்டுமல்ல விரல்களில் கூட அமிர்தத்தை வைத்திருப்பாள் போல அவள் பிசைந்து ஊட்டிய காய்கறி உணவே அவனுக்கு அத்தனை தித்திப்பை கொடுத்தது.
அவள் மறுக்க மறுக்க அவளுக்கும் உணவை ஊட்டி விட்டவன்.. கைப்பிடித்து அழைத்து சென்று காரில் அமர வைத்தான்.
சிறிது நேர பயணத்தின் பின்னர் அவனின் கார் ஒரு இடிந்து கட்டிடத்தின் முன்னால் நின்றது.கருப்பு உடையணிந்த காவலர்கள் சுற்றி நின்றிருக்க ஒன்று புரியாமல் அவனுடன் நடந்து உள்ளே சென்றாள் அமிர்தா..
காவலர்கள் யாரையோ தலை கீழாக கட்டி தொங்க விட்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிய ஒரு காவலனை பார்த்து சாகரன் கண்ணை காட்ட லைட் போடப்பட்டது..
கவின்...என கத்திக்கொண்டு அவன் அருகில் ஓடிய அமிர்தாவை ஓடாத படி இறுக்கி பிடித்திருந்தான் அமிர்த சாகரன்..
தொடரும்...
இப்பகுதி பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கமண்ட் செய்யுங்கள்.
இக் கதையின் அனைத்து பாகங்களும் கீழே
ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 01 | தொடர்கதை காதல் நிறைந்த திகிலூட்டும் மர்மத் தொடர்