முருகன் பக்தி பாடல்கள் முழுமையான வரிகளுடன்
முருகப் பெருமானை வணங்கி பாடிய பாடல்கள் அதன் வரிகளுடன்.
3.
ஆறுமுக சுவாமி விருத்தம்
ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்
ஜெகமெலாம் புகழ்படைத்தாய் சுப்பிரமண்யா முருகாசர வணபவனே கார்த்தி கேயா
அலங்கார ஆபரண மணிந்த மார்பும் திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும் முக்கணனார் புத்திரனே உக்ரவேலா இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே!
மயிலேறி விளையாடும் சுப்பிரமண்யா வடிவேலா உன்பாதம் நம்பி னேனே உயிரிழந்து அபகீர்த்தி யாகும்வேளை உன்செயலால் இதுசமயம் உயிரைக் காத்தாய் தயவாக இனிமேலும் உயிரைக் காத்து சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய் வைபோக மானமலை பழநி வேலா வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே
வருந்துமடியார் உயிரைக் காக்கும் தெய்வம்
வையகத்தில் வேறொரு வரில்லை யென்று
அறிந்துநான் உனைப் பணிந்தேன் சுப்பிர மண்யா ஆதரித்து பிராணபயம் தீருமையா திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச் பறந்துவரும் மயிலேறும் பழநி வேலா பண்பாக உயிர்காத்து ரட்சிப் பாயே.
சிறையிலிருந்து தளைப்பூண்டு சின்னமானேன்
பெருவேங்கை புலிபிடித்த பசுவைப்போல
பிதுர் கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே இருவருமே உனைக்கூவச் செவி கேளாதோ இதுசமயம் தாமதமாயிருக்க லாமோ குருவாகி தந்தை தாய் நீயேயாகில்
குமரேசா பிராணபயந் தீரு மையா முருகேசா இதுசமயம் பழநி வேலா முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே
பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை போல பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள் தேம்பியே புலம்புகிறோம் துயர மாகி தென்னவனே உன்செவிக்கு கேளா தோதான் நான்புவியில் உனைநம்பி மகிழ்ந் திருந்தேன் நாயேனுக்கு அபாயம் வரநியாய மோதான் சாம்பசிவன் புத்திரனே பழநி வேலா சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே !
வடிவேலா இதுசமயம் துயரம் தீர்ப்பாய்
வலையிலகப்பட்ட உயிரது போல் மயங்கு கிறோமே கொலைகளவு பாதகங்கள் பொய்யிருந்த தெல்லாம் கொடும்பழிகள் வஞ்சனை பில்லி சூனியமெல்லாம் தொலையாத சிறுபிணிநோய் வல்வினை களெல்லாம் துறத்து மையா மயிலேறும் சுப்பிரமணியா மலையிலுறை வாசனே பழநிவேலா வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
நாகமது கெருடனைக்கண்டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே தாகமது தீருமையா தவிக்கும் வேளை சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு மேகமது பயிர்க்குதவி செய்தார் போல
வேலவனே பிராணபயந் தீருமையா வேகமுடன் வரவேணும் பழநிவேலா வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
பூனைகையில் சிக்கியதோர் கிளியைப்போல புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி நானடிமை உனைநம்பி யிருக்கும் வேளை
நாயகனே பாராமுகமாய் இருக்க லாமோ மானீன்ற வள்ளியம்மை தெய்வயானை கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே !
மணவாளா சரவணனே கருணை செய்வாய் கானமயில் வாகனனே பழநி வேலா
தூண்டிலகப்பட்ட உயிரது போல் துடிக்கிறேனே
சுப்பிரமணியா இதுசமயம் அடியேனுக்கு வேண்டும்வரம் கொடுப்பதற்குப் பார்த்து நீயே
வேறொரு வரில்லையென்று நம்பினேனே மீண்டுவரும் வினைதீர்த்து துயரம் தீர்ப்பாய் வேலவனே சூரசங்கார வேலா ஆண்டவனே உனைப்பணிந்தோம் பழநிவேலா அடியார்கள் உயிர்காத்து ரட்சிப் பாயே !
நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல் நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள் தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா சற்குருவே பிராணபயந் தீரு மையா பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கி பரிகரித்து உன்னிருதாள் பதமே தந்து வஞ்சனைகள் செய்யாமல் பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா
அறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா வித்திறத்திற் பேசாத மூடன் நானும்
வேலவனே நின்னருளால் கவியைப்போல பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன் என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தே யாள்வாய் சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே!
*********
>>>>முதல் பக்கம்<<<<<<