திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம் | Thiruchitrambalam Movie review
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் விமர்சனம்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் , பிரகாஸ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசிகண்ணா , முனிஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் திருச்சிற்றம்பலம்.
படத்திற்கு இசை அனிருத், ஒளிப்பதிவு ஓம் பிரகாஸ் , எடிட்டிங் பிரசன்னா GK.
கதைச் சுருக்கம்.
Spoiler alert (படம் பார்க்காதவங்க மேற்கொண்டு படிக்க வேண்டாம்)
படிச்சுட்டு வேலை வெட்டி இல்லாம இருக்குற தனுஷ் தனது அப்பாவான பொலிஸ் அதிகாரி பிரகாஸ்ராஜ் கூடவும் தாத்தாவான பாரதிராஜா கூடவும் ஒரே வீட்டில இருக்காரு.. ஊர்ல இருக்கிற தனது சொந்தக்கார பெண்ணான ப்ரியா பவானி சங்கரை காதலிக்குறாரு கல்யாண வரைக்கும் போற இவங்க காதல் தனுஷ்க்கு வேலை இல்லாததால ப்ரியா பவானி சங்கர வேறொருத்தருக்கு கல்யாணம் பன்னி வச்சுடுராங்க.. காதல் சோகத்தில இருக்கிற தனுஷ் தனது பக்கத்திட்டு பெண்ணான சின்ன வயசுல இருந்தே பழகும் நித்யா மேனன்னுடன் கவலைகளை சொல்லு நட்பாக பழகிட்டும் வர்றாரு.. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல்ல என்டா பரவால்ல கிடைச்ச வேலைய செய்வோம் என்டு முடிவெடுத்த தனுஷ் டெலிவரி போய் வேலைக்கும் போறாரு.. வேலைக்கு போற சமயத்தில ராசிக் கண்ணாவ காதலிக்குறாரு.. இந்த காதலும் கல்யாணம் வரைக்கும் போய் தனுஷ்க்கு சரியான வேலை இல்லை என்று காரணம் காட்டி ராசிக் கண்ணா பிரிஞ்சு போய்டுறாங்க.. சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒன்னா இருக்கிங்க ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டிங்க நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரனும் அப்டினு தாத்தாவான பாரதிராஜா தனித்தனியா தனுஷ்க்கும் நித்தியாமேனனுக்கு சொல்லிவிட்டுறாரு.. அதுகப்பறம் தனுஷ் நத்தியாமேனன் ஒன்னு சேர்ந்தாங்களா என்று உருக்கமா சொல்லிருக்குற படம் தான் திருச்சிற்றம்பலம்.
பாசிட்டிவ்
இசை :- படத்தில் பாடல்கள் மற்றும் பின்னனி இசை இரண்டுமே பக்காவா பொருந்திருக்கு மீண்டும் தனுஷ் அனிருத் கூட்டனி சரியாவே அமைச்சுருக்கு என்டு தான் சொல்லனும். மேகம் கருக்காத பாடலும் அதற்கான காட்சி அமைப்பும் படத்திற்கு பக்க பலமா இருக்கு
தனுஷ் நடிப்பு:- வழக்கம் போல பக்கத்திட்டு பையன் போலவே தனுஷ் நடிச்சுருந்தாலும் காதல் தோல்வி, அப்பாவுக்கு பயப்படுறது, குறிப்பா க்ளைமெக்ஸ் காட்சிகளில் எல்லாம் சிறப்பா நடிச்சுருக்காரு..
ப்ரியா பவானி சங்கர் :- கொஞ்ச நேரம் தான் படத்தில வந்தாலும் மனசுல நிக்குறாங்க அழகாவும் இருக்காங்க.. சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ்ல ரசிக்கும் படியா நடிச்சுருக்காங்க.. தமிழ் சினிமாவுல பெரிய ரவுண்ட் கட்டாயம் வருவாங்க அவருக்கு எமது பாராட்டுக்கள் .
நெக்கட்டிவ்ஸ்
1. கதை :- தமிழ்சினிமாவில் பார்த்து புளிச்சு போன அதே அரைச்ச மாவுதான் இந்த கதை.. விஜய் பூமிகா மோனல் நடிப்பில் உருவான பத்ரி படத்தோட கதையை ரெண்டு கதாநாயகிகளுக்கு பதிலா மூன்று கதாநாயகிகளை வச்சு பண்ணிருக்காங்க
2.திரைக்கதை :- படத்தின் முதல் பாதில அப்பா திட்டுறது ஊருக்கு போறது அங்க லவ் பண்றது அப்டினு கொஞ்சம் நகைச்சுவையா நகர்ந்தாலும். பிற்பாதியும் அதே போல ரிப்பீட் ஆகிறதால திரைக்கதை சலிப்படைய வைக்குது. இதனால படத்திற்கு மூன்று ஹீரோயின் தேவையா என தோனுது. ராசிக்கண்ணா கரேக்டரை தவிர்த்துருக்கலாம் என்டு தோன வைக்குது.
3. பிரகாஸ்ராஜ் :- வழக்கமான ஹீரோக்கு திட்டுற அப்பாவா நடிச்சுருக்காரு தனுஷ்க்கும் இவருக்கும் இடையிலான காட்சிகள் வேலையில்லா பட்டதாரி படத்தின் சமுத்திரகனியை ஞாபகப்படுத்திற மாதிரி இருக்கிறதால மனசில ஒட்டல்ல..
இயக்குனர் மித்திரன R ஜவஹர், தனுஸ் உடன் இணையும் நான்காவது படம் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளது
மொத்தத்தில் திருச்சிற்றம்பலம் நாமம்.