டிராகன் (Dragon) திரைப்பட விமர்சனம் – பிரதீப் ரங்கநாதன் மீண்டும் வெற்றியா?

திரைப்பட விமர்சனம் – பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்து உருவான புதிய தமிழ் திரைப்படம். இது Love Today னை நினைவூட்டுமா? முழுமையான விமர்சனம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!

டிராகன் (Dragon) திரைப்பட விமர்சனம் – பிரதீப் ரங்கநாதன் மீண்டும் வெற்றியா?

படத்தின் ஆரம்பம் சாதாரணமாக கல்லூரி மாணவர்களின் அனுபவங்களுடன் தொடங்கும். முதல் பாதி வழக்கமான காதல், மோதல், மாணவர்கள் வாழ்க்கை என அமைந்திருந்தாலும், கதையின் கோணத்தை மாற்றும் திருப்பங்கள் பின்னர் அடுக்கடுக்காக வருகின்றன.

நாயகன் மற்றும் திரைக்கதை 

பிரதீப் ரங்கநாதன் தனக்கே உரிய நடிப்பு முத்திரையை விட்டிருக்கிறார். இவரின் நடிப்பில் தனுஷின் பாணி தென்பட்டாலும், அது ரசிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது. அவர் தொடக்கத்தில் வெளிப்படுத்தும் உடல் மொழி, பின்னர் கதையின் உச்சத்தில் வெளிப்படும் உணர்ச்சி மாறுதல்கள், அவரின் திறமைக்கு ஒரு சான்று. குறிப்பாக, இறுதியில் அவர் தனது தந்தையுடன் உரையாடும் காட்சி மிக வலுவாக அமைந்துள்ளது.

சுற்றியுள்ள கதாபாத்திரங்கள்

அனுபமா பரமேஸ்வரன், கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் முக்கிய திருப்புமுனைகளில் அசத்துகிறார். கதையின் முன்னேற்றத்திற்கு அவள் மிகப் பெரிய காரணமாக விளங்குகிறார். கயாது லோஹர் ரசிக்கும்படியாக நடித்து இருக்கிறார் வில்லன் அல்லாத எதிரிகள், ஜார்ஜ் மரியான் போன்ற மூத்த நடிகர்களின் நடிப்பு, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோரின் சிறப்பு தோற்றம்—என அனைத்தும் இணைந்து படம் ஓட்டுவதை உறுதி செய்கின்றன.

வசனம் மற்றும் திரைக்கதை

படத்தின் டயலாக்கள் இயல்பாகவும், சமகாலத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன. கோமெடியில் சளைக்காமல், கதை சொல்லும் முறையில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. சில இடங்களில் Love Today ஸ்டைல் நினைவூட்டினாலும், அது முடிவில் உணர்ச்சி ரீதியாக ஒரு தனி பாதையை எடுத்துக்கொள்கிறது.

தயாரிப்புநிலை & தொழில்நுட்பம்

படத்தின் ஒளிப்பதிவு சில சண்டைக் காட்சிகளில் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல்கள், பின்னணி இசை படம் நகர்த்த உதவுகின்றன. வில்லன்களை கரகரப்பாக காட்டாமல், சமூக சிக்கல்களைக் குறிப்பது, படத்திற்கு ஒரு வித்தியாசமான முனைப்பை வழங்குகிறது.

டிராகன் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம். சிரிக்க வைக்கும், சில இடங்களில் சிந்திக்க வைக்கும், உணர்ச்சிகளை கிளறும் கதையாக இது அமைகிறது. போரடிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் படமாக, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

இவற்றையும் பாருங்கள் :தமிழ் சினிமாவில் புதிய முகம் – கயாது லோஹர் பற்றிய அதிரடி தகவல்கள் 

நடிகைகள் - ஸ்லைடர்