இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-12 புதன் கிழமை

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்கான தினப்பலன்கள்

இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-12 புதன் கிழமை

இன்றைய  பஞ்சாங்கம்

12-01-2022, மார்கழி 28, புதன்கிழமை, தசமி திதிமாலை 04.49 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பரணிநட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.00 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கிருத்திகை உபவாசம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் -  12.01.2022

மேஷம்

இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள்வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைபெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால்அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள்ஏற்படலாம். சிலருக்கு வண்டி வாகனபராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறிஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களைஅனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்உண்டாகும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில்அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புஉண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாகஇருக்கும்.

கடகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வுகிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள்கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

சிம்மம்

இன்று தொழில் ரீதியாக அலைச்சலும்மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால்கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்புநல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவுதீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறைஎடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள்கைகூடும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களில் தாமதபலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மற்றவர்கள் விஷயங்களில்தலையிடுவதை தவிர்க்கவும். வாகனங்களில்செல்லும் பொழுது நிதானம் தேவை. புதியமுயற்சிகளையும் சுபகாரியங்களையும் தவிர்ப்பதுநல்லது.

துலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன்செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்குவெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாகசெயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்றுவசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிநிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமானபலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும். அரசு வழியில்உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள்கிடைக்கும்.

தனுசு

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலைகாணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன்வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம்பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன்கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில்தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன்செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சகஊழியர்களின் ஆதரவால் பணிச்சுமை சற்று குறையும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள்குறைந்து லாபம் உண்டாகும். வேலையில்மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர்பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராகஇருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம்உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன்செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதியவாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடுஅதிகரிக்கும்.