இயேசுவின் இறுதி உணவு

இராப்போசனத்தின் மூலம் அறைவன் எமக்கு உணர்த்தும் பாடம்

Mar 18, 2023 - 23:18
 0  64
இயேசுவின் இறுதி உணவு

இயேசுவின் இறுதி உணவு

கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு அருள் அடையாளம் நற்கருணை ஆகும். இதனை இயேசு தனது நினைவாகச் செய்யுமாறு எமக்குத்தந்த உன்னதமான ஒரு கொடையாக அமைவதோடு இதனை நாம் தகுதியான உள்ளத்தோடும் உட்கொள்ளவேண்டும். அவ்வாறு உட்கொள்ளும்போது மட்டுமே எமக்கு ஆண்மபலன், நன்மை என்பன கிடைக்கும். இவ் நற்கருணை அதாவது இறுதி இராஉணவினை இயேசு தனது பாஸ்கா உணவாகக் கொண்டாடினார் என ஒத்தமை நற்செய்திகள் கூறுவதைக் காணக்கூடியதாகவும் யாவேயின் உடனிருப்பை உறுதிப்படுத்தும் சடங்காகவும் இருக்கின்றது. இங்கு இறச்சியை கசப்பான கீரையுடன் உண்பது என்பன முக்கிய உணவாகவும் நன்றிப்பாடல்கள் யூதர்களின் கலாச்சார அடையாளமாகவும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நற்கருணை என்பது ‘இறைவன் தருகின்ற நன்மை மிக்க கொடை யூக்கரிஸ்தியா எனும் கிறேக்க சொல்லை மொழி பெயர்த்து நற்கருணை எனும் சொல்லை பயன்படுத்தினர். நற்கருணை எனும் சொல் வார்த்தை வடிவிலான நன்றி வெளிப்பாடு, வெளிப்பாட்டில் இருந்து வரும் அடையாளச் செயல் என இருவகையாக உள்ளது. நற்கருணை மூலமாக எமக்கு சொல்லப்படுவது இயேசுவின் இறுதி உணவு நிகழ்வாகும். இயேசுவினுடைய நினைவுதான் நற்கருணையின் ஊற்றாக அமைகிறது. இயேசு எந்த இலக்கை நோக்கி பயணித்தாரோ அந்த இலக்கை நோக்கி அவரை உந்துதள்ளிய அற்புத நிகழ்ச்சியாக இறுதி உணவு காணப்படுகிறது. இது இயேசுவினுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளின் உச்சகட்டமாக உள்ளது. இவ் இறுதியுணவு பாஸ்கா சூழலில் நிகழ்கிறது. இயேசுவின் மரணத்தை குறித்துக்காட்டுகிறது. 

பாஸ்கா பின்னணி குறித்துப்பார்க்கையில் இயேசு தனது இறுதியுணவை பாஸ்கா உணவாகக் கொண்டாடினார் என ஒத்தமை நற்செய்திகள் குறிப்பிடுகின்றது. யூதர்களின் பாஸ்கா திருவிழா அவர்களின் தலைசிறந்த நம்பிக்கைச்செயல். இது யாவேயின் உடனிருப்பை உறுதிப்படுத்தும் சடங்காக உள்ளது. பாஸ்கா நிகழ்வானது ஆலய நிகழ்ச்சி வீட்டு நிகழ்ச்சி என இரண்டு பகுதியாகக் காணப்பட்டது. எருசலேம் நகரில் மட்டுமே கொண்டாடப்படும் இச் சடங்கிற்காக யூதர்கள் அனைவரும் ஒன்றுகூடி மதியநேரத்தில் ஆலயத்தில் இடம்பெறும் சடங்கில் கலந்துகொள்வர். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் குடும்பத்தலைவனே குருவாகக் காணப்படுவார். இந்நிகழ்ச்சியில் குடும்பப்பெண்கள் கட்டாய் கலந்துகொள்ள வேண்டும். வீட்டில் இடம்பெறும் பாஸ்கா நிகழ்வில் அப்பம் பிக்குதல் திராட்சை இரசக்கிண்ணம், பாஸ்கா அறிக்கை, முக்கிய உணவு, நன்றிப்பாடல்கள் என்பன முக்கியமான அடையாளச்செயல்களாகக் காணப்படுகின்றது.

அப்பம் பிட்குதல்

அப்பம் பிட்குதல் எனும் நிகழ்வு யூதக் கலாச்சார அடையாளம் ஆகும். இது வீட்டில் மூன்று இடங்களில் இடம்பெறுகிறது. அந்தவகையில் வந்தவரை வரவேற்கும் பொருட்டு முதலில் அப்பம் பிட்கப்படுகிறது. இரண்டாவது முறையாக முக்கிய உணவிற்குமுன் அப்பம் பிட்கப்படுகிறது. மூன்றாவது தடவையாக உணவு இறுதியில் மீதமான அப்பத்துண்டுகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றனர்.  பாஸ்கா நிகழ்வோடு தொடர்புடைய புளியாத அப்பத்திருவிழா வாற்கோதுமையை பயிரிட்டு அதன் முதற்கனியை இறைவனுக்கு படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விழா புளியாத அப்பத்திருவிழா எனப்படுகிறது. இது பழைய கழிதலும், புதியன புகுதலும் எனும் புதுவாழ்வின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. திராட்சை இரசக்கிண்ணம் மகிழ்ச்சியைக் குறிக்கும் அடையாளம் ஆகும். பாஸ்கா சடங்கில் திராட்சை இரசம் அருந்துவது நான்குமுறை இடம்பெறும். அந்தவகையில் முதலாவதாக அப்பம் பிட்கின்ற நேரத்தில் மகிழ்ச்சியின் அடையாளமாக அருந்தப்படுகிறது. இரண்டாவதாக பாஸ்கா அறிக்கை செய்த பின்பு இறைவனில் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அருந்தப்படுகிறது. மூன்றாவதாக உணவு அருந்திய பின் நன்றியின் வெளிப்பாடாக இருக்கின்றது. நான்காவது மெசியாவை வரவேற்க எதிர்பார்ப்பின் கிண்ணமாக அமைகின்றது. பாஸ்கா அறிக்கைஎன்பது முதல் திராட்சை இரசக்கிண்ணம் அருந்திய பின்பு பாஸ்கா அறிக்கைச்சடங்கு இடம்பெறும். இது குடும்பத்தலைவனால் விடுதலைப்பயணத்தில் இருந்து இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த எல்லா அருஞ்செயல்களையும் வரிசைப்படுத்திக்றுகூவதுடன் அன்றைய வாழ்வில் இறைவன் செய்த பெரும் செயல்களும் நினைவுகூறப் படுகின்றது. 

அடுத்து முக்கிய உணவாக இறைச்சியை கசப்பான கீரையுடன் உண்பது காணப்படுகிறது. இவ் உணவில் எகிப்தில் பட்ட வேதனைகள் பாலைநிலத்தில் உணவின்றி தாங்கள்பட்ட துன்பங்கள் இங்கு நினைவுகூறப்படுகின்றது. அதேநேரம் இறைவனின் கைவண்ணம் சிறப்பாக நினைவுகூறப்பட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வாக முக்கிய உணவு காணப்படுகின்றது. அடுத்த நிகழ்வான நன்றிப்பாடலானது இறைவனின் செயலுக்கு நன்றிகூறும் விதமாக புகழ்ச்சி திருப்பாடலை பாடுவது அவர்களது பாஸ்கா சடங்கின் முக்கிய செயலாகக் காணப்படுகிறது. பாஸ்கா அறிக்கை முடிவிலும் உணவு முடிந்த பின்பும் இப்பாடலைப் பாடுவர். இது நன்றியுணர்வின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது. இயேசுவின் பாஸ்கா நிகழ்விலும் யூதரகளின் நிகழ்ச்சியில் இயேசு எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஆனால் இச்சடங்கின் அர்த்தங்களை மாற்றும் இயல்பான தன் பணியையே வெளிப்படுத்துகிறார். இங்கு இரண்டாம்முறை அப்பம் பிட்கும்போது அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள், இது என் உடல் என்றார். பலருடைய வாழ்வுக்காகவும், தன்னுடைய மரணத்தை உறுதிசெய்து அதற்கு அர்த்தம் சேர்க்கும் விளக்கத்தை அளிக்கிறார். மூன்றாவது கிண்ணத்தை எடுத்து இது என் இரத்தம் என்றார். புதிய உடன்படிக்கையின் இரத்தம் எ கநற்செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதை என் நினைவாக செய்யுங்கள் என்ற இயேசுவின் வார்த்தை புதுமையானது. இது இன்று நம் கல்வாரிப்பணியில் நிறைவேற்றப்படுகிறது. நமக்காகத் தம் உயிரை தியாகம் செய்தவருக்கு எம் வாழ்வை முன்மாதிரியாக ஆக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நற்கருணை உணவு என்பது இன்றியமையாத ஒன்று. இவ் உணவானது ஈண்ம சக்தியும், ஆண்ம உணவாகவும் பெறக்கூடியதாக உள்ளது. இவ் நற்கருணையில் இறைவன் உண்மையாகவே உயிரோடும், உடலோடும் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து விசுவசிக்க வேண்டும். நற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொருவரது உள்ளத்திலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்ந்தவர்களாய் எம் வாழ்வை வாழ்வாக்கி செயற்பட வேண்டும். 

இயேசுவின் இறுதியுணர்வு எம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் செய்தியானது நாம் அவரைப்பற்றி இயேசு எவ்வாறு தனது வாழ்வை அர்ப்பணித்து தனது உயிரை துச்சமாக மதித்து எமக்காக பலியானாரோ அதையேற்று உணர்ந்தவர்களாக அவரைப்பின்பற்றி வாழ எமக்கு விடு ஒரு அழைப்பு இதுவாகும். இதயம் வாழ்வாக்க முன்வரவும் உண்மையான ஒரு கிறுஸ்தவன், கிறிஸ்தவளாக வாழ எம்மை நாமே தயார்படுத்துவோம். 



Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow