காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்கும் பட டைட்டில் வெளியீடு
AK cinima

இந்நிலையில் காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் "கோஸ்டி" திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் சுறுசுறுப்பாக ஒப்பந்தமாகி நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு பலரையும் கவர்ந்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் பாகம் 2 மற்றும் தெலுங்கில் அதிகப் பொருட்செலவில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ஆச்சர்யா என பிரம்மாண்ட படைப்புகளிலும் காஜல் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கும் "கோஸ்டி" காமெடி கலந்த டார்க் ஃபேண்டசி திரைப்படத்தில் காஜல் அகர்வால் லீட் ரோலில் நடிக்க இதில் யோகி பாபு, ஊர்வசி, சுரேஷ் மோகன்,மொட்ட ராஜேந்திரன், கேஎஸ் ரவிக்குமார்,விஜய் டிவி தங்கதுரை, மயில்சாமி,மனோபாலா, ஸ்ரீமான், ஆடுகளம் நரேன்,சத்யன் மற்றும் தேவதர்ஷினி என பெரும் பட்டாளமே நடிக்க இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் வேடத்தில் நடிக்க பார்லிமென்டின் முன்பு கம்பீரமாக அரசியல்வாதிகளின் படைசூழ உட்கார்ந்துகொண்டு இருக்க முன்னாள் ஹோமகுண்டம் எரிகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள "கோஸ்டி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் ஹாரர் காமெடி மட்டுமல்லாமல் இதில் அரசியல் காமெடி கலவரமும் இருக்கும் போலயே என எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் செய்திகள்