காமடியன் சதீஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியானார் குக்வித் கோமாளி பிரபலம் பவித்ரா
இப்படத்திற்கு இன்று பூஜைகள் போடப்பட்டன. இதில் ஏஜிஎஸ் நிறுவனக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
முன்னணி நடிகர்களுடன்
வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, செந்தில் வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷும் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகளின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வயிலு குலுக்க சிக்க வைத்தவர் சதீஷ்.
ரஜினியின்
மதராசப்பட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, ஆம்பள, தேவி, ரெமோ, கலகலப்பு2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கு பூஜை
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. இதில், சதீஸ், பவித்ரா லஷ்மி, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சதீஷின் நெருங்கி நண்பரான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சதீஷூக்கு ஜோடியாக
இப்படத்தில் சதீஷூக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லஷ்மி நடிக்கிறார். யூடியூப்பில் பல வீடியோக்களை தயாரித்து வெளியிட்ட கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு அஜீத் அசோக் இசை அமைக்க உள்ளார்.