How to start a Business?- in tamil வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பது எப்படி..?

How to start a Business?- in tamil  வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பது எப்படி..?
Google image

சிறு வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தலும், வணிக யோசனை மதிப்பீட்டிற்கான உள்மற்றும் வெளிப்புற பகுப்பாய்வும்.

ஒப்பிட்டளவில் சிறிதளவு மூலதனத்துடன் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களையும் கொண்டு  ஆரம்பிக்கக்கூடியதும் வரையறுக்கப்பட்ட சிறிய அளவிலான சந்தைப் பங்கினனை உடைய ஓர் தொழில் முயற்சியை சிறு வணிகமாக வரையறுக்க முடியும்.  இவ் வணிகங்கள் இலகுவாக வாடிக்கையாளர்களுடன் நேரடியான தொடர்பை பேணக்கூடியவாறு காணப்படுகின்றன. அந்த வகையில் பெரும்பாலும் சிறு வணிகங்கள் அந்த அந்த பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்து வருவதை நாம் அவதானித்துள்ளோம். 

அவ்வாறு சிறு வணிகம் ஒன்றை நீங்கள் ஆரம்பிக்கும் போது பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளப்படுதல் வேண்டும்.



  • தொழிலின் தன்மை
  • எதனை உற்பத்தி செய்தல் அல்லது விற்பனை செய்தல்
  • தேவைப்படும் மூலதன அளவு
  • நிறுவன அமைப்பின் தன்மை.
  • தொழிலாளர் வசதி
  • போட்டி நிறுவனம் பற்றிய தகவல்கள்
  • அமைவிடம்
  • வாடிக்கையாளரின் விருப்பு வெறுப்பு.

ஒரு சிறு வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் நான் மேற்கூறிய விடயங்களை கட்டாயம் நீங்கள் அவதானித்து தங்களின் முழுமையாக கவனத்தைச் செலுத்த வேண்டும்.  

மேலும் விளக்கம் வழங்குவதற்காக நான் ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பிப்பதாக இருந்தால், நான் மேற்கூறிய விடயங்களை எவ்வாறு கையாள்வேன் என்பதை உதாரணத்துடன் கீழ்கண்டவாறு விளக்கியுள்ளேன். 

 அந்த வகையில்  நான் வசிக்கும் நகரை அண்டிய பிரதேசத்தில் ஒன்லைன் மூலம் “சமையல் எரிவாயு வியாபாரம்” ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். நான் இம் முயற்சியை தொடங்குவதற்கான காரணங்கள் பின்வருமாறு..

  • எனது கிராமத்தில் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிலையங்கள் குறைவானதாகவும் அதே வேளை வீட்டிலிருந்து தூரமான அமைவிடத்தை கொண்டதாகவும் காணப்படுகிறது.

  • பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் வேலைக்குச் சென்ற பின் பெண்கள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத முகமாக சமையல் எரிவாயு முடிவடைந்தால் அதனை கடைகளுக்கு தூக்கிச்சென்று புதிய சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்வதில் பாரிய சிரமம் காணப்படுவதோடு சமையல் நடவடிக்கைகளும் தடைப்படுகின்றது.

  • சந்தையில் உள்ள போட்டியாளரை ஆய்வு செய்த போது அவரது விற்பனை நிலையத்தில் போதிய களஞ்சிய வசதி இன்மையால் இருப்புத் தட்டுப்பாடு நிகழ்கிறது. இதனால் தூர இடங்களுக்குச்சென்று கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

மேற்படி பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் முகமாக எனது சிறு வியாபாரத்தினை பின்வருமாறு வடிவமைத்துள்ளேன்.

  • தொலைபேசி மூலம் கொள்வனவு – ஸ்மாட் தொலைபேசி செயலி ஒன்றை உருவாக்கி அதன் முலமாக வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டு சமையல் எரிவாவை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல்.

  • முடிந்த வெற்று எரிவாயு போத்தல்களை தூக்கி எமது வியாபார நிலையத்தினை நோக்கி கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை – தொலைபேசி செயலி மூலம் கொள்வனவு கட்டளையை பிறப்பித்து அதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அவரது வங்கி கணக்கின்  மூலமாகவே பணம் செலுத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் வீட்டிலிருந்தவாறே கொள்வனவு செய்ய முடியும். அதன் பின் கொள்வனவு கட்டளை பிறப்பித்த வாடிக்கையாளரின் வீடு வரை சென்று புதிய சமையல் எரிவாயுவை ஒப்படைத்து விட்டு வெற்றுபோத்தலையும் மீள பெற்று கூடியவாறு எனது வணிகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



  • களஞ்சியப்படுத்தல் செலவு குறைவு – வாடிக்கையாளரின் கொள்வனவு கட்டளை கிடைத்த பின்னரும் கூட மொத்த வியாபாரியிடம் கொள்வனவு செய்து பொருள்களை விநியோகிக்க முடியும். இதனால் களஞ்சியப்படுத்தலுக்கான தேவையும் செலவையும் குறைத்துக்கொள்ளலாம்.

எனது சமையல் எரிவாயு சிறு வியாபரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான யோசனை மதிப்பீட்டிற்கான உள்மற்றும் வெளிப்புறப்பகுப்பாய்வு பின்வருமாறு அமைகின்றது.

  • உட்புற பகுப்பாய்வில் நிறுவனச் சூழல்.

எனது வணிகத்தில் 02 தொழிலாளர்களை இணைப்பதற்கு எதிர்பார்பதோடு அவாகளுக்கு தொழில் பாதுகாப்பினையும் உரிய சம்பளங்களை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களை எனது வணிகத்தின் பலமாக மாற்றமுடியும்.

இணைய பாவனை தொடர்பான அறிவும் அனுபவமும் என்னிடம் காணப்படுவதனால், என்னால் தடையின்றி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை சேவையை இலகுவாக வழங்கமுடிவதால் அது எனது வணிகத்திற்கு பலமாகவே அமைகின்றது.

நிதி தொடர்பில், களஞ்சியசாலை அமைப்பதற்கான குறைந்தளவு செலவு ஏற்படுவதுடன்; ,  விநியோகத்திற்காக மாத்திரம்; சிறு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான செலவு ஏற்படும். வாகனத்தினை வாடகை கொள்வனவு அடிப்படையில் குறைந்த ஆரம்ப நிதியுடன் கொள்வனவு செய்யமுடியும். 

காட்சிப்படுத்தலானது இணையத்தில் இடம் பெறுவதால் இருப்பு பேணல் செலவு குறைவாக பேண மடியும்.

நான் வாகனம் ஓட்டுதலில் முன்அனுபவம் கொண்டுள்ளதால் சாரதி ஒருவரை வேலைக்கமர்த்தல் செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.

வெளிப்புறப் பகுப்பாய்வில்  

  • பொதுச் சூழல் காரணிகள்.
  • அரசியல் மற்றும் சட்ட சூழல் - 
  • அரசங்கத்தின் அனுமதி பெற்று பதிவு செய்யப்பட்ட வணிக அமைப்பாக நடாத்தி செல்லல்.
  • தொழிலாளர் சேமலாப நிதி சட்டங்களுக்கிணங்க தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செய்தல்.
  • தொழில்நுட்ப சூழல் - 

எனது வணிக முயற்சியானது நவீன போக்கினை பிரதி பலிப்பதாக அமைந்துள்ளதால் எனது வியாபார பொருளான சமையல் எரிவாயுவுக்கான கேள்வி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியல் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதனால் அதனை பயன்படுத்தி எனது நிநுவகத்தினை குறைந்த செலவில் விளம்பரம் செய்ய முடியும்

சமூக கலாச்சார சூழல்    

சமூகப் பொறுப்புடன் பிரதேசத்தில் காணப்படும் சமூக நலன் சார்ந்த அமைப்புக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளல்.

புவியியல் சூழல்.

இயற்கை வளங்களின் கிடைப்பணவு,காலநிலை மாற்றங்கள், உட்பட எவ்வித புவியயற் சூழல் காரணிகளினாலும் நேரடியான தாக்கத்தை எனது வியபாரத்தில் ஏற்படுத்தமாட்டாது.

பொருளியல் சூழல் 

நாட்டின் பொருளாதாரக்கொள்கைகள், ஏற்றுமதி இறக்குமதி தீர்வைகள், அரசின் விலைக்கட்டுப்பாடுகள், என்பன எனத சிறு வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்லது.



போட்டிச் சூழல் காரணிகள்

  • புதிய போட்டியாளர் உள் நுழைதல்

புதிய சந்தை வாய்ப்பு என்பதனால் எனது சிறு வணிகம் சந்தையை சரியாக கைப்பற்ற முடிந்தால் நிச்சயமாக சந்தையில் புதிய போட்டியாளர்களின் வருகையினை இலகுவாக கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

  • பதீலீட்டு பண்டங்கள் சேவைகளின் அச்சுறுத்தல்

சமையல் எரிவாயு பாவனைக்கு நிகரான பதிலீட்டு பண்டம் எதுவும் இல்லை என்பதால். அது என் சிறு வணிகத்தில் தாக்கம் எதனையும் ஏற்படுத்தாது.

  • தற்போதுள்ள போட்டியாளர்கள்

சமையல் எரிவாயு விற்பனையில் வழமையான விற்பனை முறைமை காணப்படுகிறது. அதிலிருந்து முற்றாக நவீன மயப்படுத்தப்பட்ட முறையில் எனது வணிகத்தின் விற்பனை நடவடிக்கையும், விற்பனைக்கு பிந்தியதுமான விநியோக சேவையையும் வழங்குவதால், இங்கு காணப்படும் போட்டி நிறுவனங்களின் போட்டிக்கு முகம் கொடுத்து இலகுலவாக சந்தையயை கைப்பற்ற  முடியும்.

  • விற்பனையாளரின் பேரம் பேசும் சக்தி

தற்போதுள்ள போட்டியாளுடன் ஒப்பிட்டகையில் பேரம் பேசுவதற்கான ஆற்றல் அதிகமாகவே எனது வணிகம் கொண்டிருப்பதாக அமையும். காரணம் விற்பனைக்கு பிந்தி சேவையினை வழங்கி சந்தையில் தனித்துவமான இடத்தினை பெறுவதால் பேரம் சக்தி அதிகமாக காணப்படும்.