தந்திரோபாய முகாமைத்துவ உள்ளகச் சூழல்: வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் |The internal Environment: Resources, Capabilities, and Core Competencies

போட்டி நன்மை பற்றிய முக்கிய விடயங்கள், போட்டி நன்மை மற்றும் நிலைத்திருக்கக்கூடியதன்மை, உள்ளகச் சூழல் பகுப்பாய்வின் தன்மை, உள்ளகச் பகுப்பாய்வின் சூழ்நிலைகள், பெறுமதியை உருவாக்கல் உள்ளகச் சூழல் பகுப்பாய்வின் சவால்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் பற்றிய நிர்வாக முடிவுகளை பாதிக்கும் நிபந்தனைகள் , வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் வளங்கள் உருவமுடைய வளங்கள் உருவமற்ற / அருவமான வளங்கள் திறன்கள் முக்கிய திறன்கள் முக்கிய திறன்களை உருவாக்குதல் நிலைத்திருக்கக் கூடிய போட்டி நன்மைக்கான நான்கு அளவுகோல்கள் ii. பெறுமதிச் சங்கிலி பகுப்பாய்வு முதன்மை நடவடிக்கைகள் துணை நடவடிக்கைகள் செயற்பாடுகளை வெளியகப்படுத்தல் திறன்கள், பலங்கள், பலவீனங்கள் மற்றும் தந்திரோபாய முடிவுகள்

Feb 8, 2023 - 19:52
 0  91
தந்திரோபாய முகாமைத்துவ  உள்ளகச் சூழல்: வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் |The internal  Environment: Resources, Capabilities, and Core Competencies

  1. போட்டி நன்மை பற்றிய முக்கிய விடயங்கள் (Competitive Advantage Key Points)

எந்த ஒரு போட்டி நன்மையும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை.

காலப்போக்கில், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி உருவாக்கும் குறித்த நிறுவனத்தின் திறனை பிரதி செய்வதற்கு போட்டியாளர்கள் தங்களின் தனித்துவமான வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்களைப் பயன்படுத்துகின்றனர்.

உலகமயமாக்கலுடன், நிலைத்திருக்கக் கூடிய போட்டி நன்மை குறிப்பாக சவாலானதாக மாறியுள்ளது.

நிறுவனங்கள் எதிர்கால தற்போதைய நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில் எதிர்கால போட்டியின் வெற்றிக்கு வழிவகுக்கும் புதிய நன்மைகளை உருவாக்க தங்கள் வளங்களையும் திறன்களையும் பயன்படுத்த வேண்டும்.

புத்தாக்கம் மற்றும் நிறுவன மனிதவளம் என்பன நிறுவனங்களின் போட்டி நன்மைக்கான தேடலின் முக்கியமான வளங்களாகும்.

  1. போட்டி நன்மை மற்றும் நிலைத்திருக்கக்கூடியதன்மை (Competitive Advantage and sustainability)

பொதுவாக, ஒரு போட்டி நன்மையின் நிலைத்திருக்கக்கூடியதன்மை மூன்று காரணிகளின் செயற்பாடாகும்:

சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக முக்கிய திறன் வழக்கற்றுப்போகும் வீதம் முக்கிய திறனுக்கான பதிலீடுகளின் கிடைப்பனவுத் தன்மை, மற்றும் முக்கிய திறன்களின் பொருத்தமற்ற தன்மை

  1. உள்ளகச் சூழல் பகுப்பாய்வின் தன்மை (The Nature of Internal Environmental Analysis)

  1. உள்ளகச் பகுப்பாய்வின் சூழ்நிலைகள் (The Context of Internal Analysis)

பாரம்பரிய மூலங்களினால் உருவாக்கப்பட்ட நன்மைகளினை ஒரு சர்வதேச தந்திரோபாயம் மற்றும் உலகளாவிய பொருளாதாரம் முழுவதுமான வளங்களின் அசைவு என்பவற்றின் மூலம் போட்டியாளர்களால் கடந்துவரக் கூடியதாக உள்ளது.

எனவே போட்டி நன்மைக்கான கூடுதல் மற்றும் புதிய மூலங்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியம், நிறுவனத்தின் வளங்கள் மற்றும் திறன்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் உள்ளகச் சூழலைப் பகுப்பாய்வு செய்பவர்கள் உலகளாவிய மனநிலையைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒரு உலகளாவிய மனநிலை என்பது ஒரு நாடு, கலாச்சாரம் அல்லது சூழலின் எடுகோள்களைச் சார்ந்து அல்லாத வழிகளில் உள்ளகச் சூழலைப் பகுப்பாய்வு செய்வதற்கான திறன் ஆகும்.

நிறுவனத்தின் தனித்துவமான வளங்கள் மற்றும் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது. உள்ளகச் சூழலை பகுப்பாய்வு செய்யும் போது தீர்மானமெடுப்பவர்கள் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய வௌயீடு ஆகும். 

 

  1. பெறுமதியை உருவாக்கல் (Creating Value)

குறைந்தபட்சம் உலகளாவிய போட்டியினை எதிர்கொள்ளும் அளவிற்கு அல்லது அதனை விஞ்சும் அளவிற்கு தங்கள் முக்கிய திறன்கள் அல்லது போட்டி நன்மைகளை பயன்படுத்தி, நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை உருவாக்குகின்றன.

ஒரு பொருளின் பெறுமதியானது அதன் செயற்றிறன் பண்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் அதன் பண்புக்கூறுகளால் அளவிடப்படுகிறது.

ஒரு நிறுவனம் போட்டி நன்மையை உருவாக்கவதற்கு, போட்டியாளர்களால் வழங்கப்படும் பெறுமதியை விட உயர்ந்த பெறுமதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் வளங்களையும் திறன்களையும் புதுமையான முறையில் தொகுத்து மேம்படுத்துவதன் மூலம் உருவாக்குகின்றன.

வாடிக்கையாளர்களுக்கான பெறுமதியை உருவாக்குவது இறுதியில் ஒரு நிறுவனத்திற்கு சராசரிக்கும் மேலான வருவாய்க்கான மூலமாக அமையும். 


உயர்ந்த மதிப்பு —————>>> சராசரிக்கு மேல் வருமானம்

உள்ளகச் சூழல் பகுப்பாய்வின் சவால்கள் (The Challenge of Internal Analysis)

நிறுவனத்தின் வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முகாமையாளர்கள் எடுக்கும் தந்திரோபாய தீர்மானங்கள்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும்.

  • வழக்கத்திற்கு மாறானவை
  • நெறிமுறை தாக்கங்கள் உடையவை மேலும்
  • நிறுவனத்தின் சராசரிக்கு மேல் வருமாய் ஈட்டும் திறனை கணிசமாக பாதிப்பவை

எவ்வாறாயினும், புதிய போட்டி நன்மைகளை உருவாக்குவதற்கு தவறுகளைச் செய்து திருத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கற்றல் முக்கியமானதாக இருக்கும்.

முக்கிய திறன்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும், முகாமையாளர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை, ஒருமைப்பாடு, நிச்சயமற்ற தன்மை மற்றும் சிக்கல்களைச் சமாளிக்கும் திறன் என்பன அவசியமாகும்.

எனவே, வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் தொடர்பான கடினமான நிர்வாக

தீர்மானங்கள் மூன்று நிபந்தனைகளால் வகைப்படுத்தப்படுகின்றன:

  • நிச்சயமற்ற தன்மை,
  • சிக்கலானது, மற்றும்
  • உள்ளக நிறுவன முரண்பாடுகள்

புதிய தொழிநுட்பங்கள், வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள், சமூக மதிப்புகளில் மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவை விருப்பங்களிலான மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முகாமையாளர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் நிச்சயமற்ற தன்மை, உள்ளகச் சூழலைப் பகுப்பாய்வு செய்யும் போது ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களின் சிக்கலான தன்மையையும் எல்லையையும் அதிகரிக்கிறது. இறுதியாக, மேம்படுத்துவதற்கான முக்கிய திறன்கள் மற்றும் அவற்றை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும்போது உள்ளக நிறுவன முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.

வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் பற்றிய நிர்வாக முடிவுகளை பாதிக்கும் நிபந்தனைகள்

இந்த மூன்று நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட முடிவுகளை எடுப்பதில், தீர்ப்பினைப் பயன்படுத்த வேண்டியதாகவுள்ளது.

தீர்ப்பு என்பது வெளிப்படையாக சரியான மாதிரி அல்லது விதி கிடைக்காதபோது அல்லது தொடர்புடைய தரவு நம்பகமற்றதாக அல்லது முழுமையானதாக இல்லாத போது வெற்றிகரமான தீர்மானங்களை எடுக்கும் திறனாகும்

பின்வரும் நிபந்தனைகளின் கீழ் தீர்ப்பு தேவைப்படுகிறது

முடிவெடுப்பவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த இடர்களை எடுத்துக்கொள்கிறார்கள் 

சிறந்த தீர்ப்புடன், வெற்றிகரமான தந்திரோபாய தலைவர்கள்  தந்திரோபாய போட்டித்தன்மையை அடைகிறார்கள்

வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள்

வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்கள் போட்டி நன்மைக்கான அடித்தளத்தை வழங்குகின்றன.

வளங்கள் ஒரு நிறுவனத்தின் திறன்களின் ஆதாரமாகவுள்ளது. நிறுவன திறன்களை உருவாக்குவதற்காக வளங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

திறன்கள் ஒரு நிறுவனத்தின் முக்கிய திறன்களின் மூலமாகும், அவை போட்டி நன்மைகளின் அடிப்படையாக அமைகின்றன.

  • வளங்கள்

பொதுவாக, வளங்கள் தனித்து போட்டி நன்மையை அளிக்காது. உண்மையில், ஒரு போட்டி நன்மை பொதுவாக பல வளங்களின் தனித்துவமான தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நிறுவனத்தின் சில வளங்கள் உருவமுள்ளவை, ஏனையவை உருவமற்றவை.

உருவமுடைய வளங்கள் கண்களால் பார்க்கக்கூடியவை மற்றும் அளவிடக்கூடியவை. உற்பத்தி உபகரணங்கள், உற்பத்தி ஆலைகள் மற்றும் முறையான அறிக்கையிடல் கட்டமைப்புகள் உருவமுள்ள வளங்களுக்கான உதாரணங்களாகும்.

உருவமற்ற வளங்களில் பொதுவாக நிறுவனத்தின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய மற்றும் காலப்போக்கில் திரட்டப்பட்ட சொத்துக்கள் அடங்கும். உருமுடைய வளங்களுடன் ஒப்பிடுகையில், பொதுவாக பார்க்கவோ தொட்டுணரவோ முடியாதவை. அவை வழக்கமான நடைமுறைகளின் தனித்துவமான வடிவங்களில் உட்பொதிக்கப்பட்டிருப்பதால், அருவமான வளங்கள் போட்டியாளர்கள் பகுப்பாய்வு செய்வதற்கும் பின்பற்றுவதற்கும் ஒப்பீட்டளவில் கடினமானவையாகும்.

உருவமுடைய வளங்களுடன் ஒப்பிடுகையில், அருவமான வளங்கள் முக்கிய திறன்களின் சிறந்த அடிப்படையாகும்.

உருவமுடைய வளங்கள்

நிதி வளங்கள் - நிறுவனத்தின் கடன் வாங்கும் திறன், உள்ளக நிதியை உருவாக்கும் நிறுவனத்தின் திறன்

நிறுவன வளங்கள் - நிறுவனத்தின் முறையான அறிக்கை அமைப்பு மற்றும் அதன் முறையான திட்டமிடல் ஒருங்கிணைத்தல், மற்றும் கட்டுப்படுத்துதல் 

பௌதிக வளங்கள் - ஒரு நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் உபகரணங்களின் நுட்பம் மற்றும் இடம் , மூலப்பொருட்களுக்கான அணுகல் 

தொழில்நுட்ப வளங்கள்- காப்புரிமைகள், வியாபாரக் குறி, பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தக இரகசியங்கள் போன்ற தொழில்நுட்பத்தின் பங்கு

உருவமற்ற / அருவமான வளங்கள்

அருவமான வளங்கள் வெளிப்படையாகத் தெரியாமையினால் அவை போட்டியாளர்களுக்கு புரிந்துகொள்வது, கொள்வனவு செய்வது, பின்பற்றுவது அல்லது பதிலீடு செய்வது மிகவும் கடினமானது என்பதால், நிறுவனங்கள் தங்கள் திறன்கள் மற்றும் முக்கிய திறன்களுக்கான அடித்தளமாக உருவமுள்ள வளங்களை விட உருவமற்ற வளங்களையே பயன்படுத்துகின்றன.

உண்மையில், ஒரு வளமானது எவ்வளவு அதிகமாக வெளிப்படையற்றதாக உள்ளதோ (அதாவது, கண்ணுக்குத் தெரியாதது) அந்த அளவிற்கு அதன் அடிப்படையிலான போட்டி நன்மைகள் மிகவும் நிலையானதாக இருக்கும்.

அருவமான வளங்களின் வகைகளாவன,

  • மனித வளங்கள் - அறிவு, நம்பிக்கை, திறன்கள், கூட்டு திறன்கள் புத்தாக்க வளங்கள் அறிவியல் திறன்கள் புதுமைகளை உருவாக்கும் திறன்
  • நன்மதிப்பு சார்ந்த வளங்கள் - வியாபாரப் பெயர், அக்கறையுடைய தரப்பினர்களிடனான நேர்மறையான நற்பெயர்,
  • திறன்கள்- ஒரு குறிப்பிட்ட பணி அல்லது பணிகளின் தொகுப்பை அடையும் நோக்குடன் வளங்கள் ஒருங்கிணைக்கப்படும் போது திறன்கள் உருவாகின்றன.
  • உருவமுள்ள மற்றும் உருவமற்ற வளங்களுக்கிடையிலான சிக்கலான தொடர்புகளின் மூலம் காலப்போக்கில் வெளிப்படுத்தப்படும்.

                      - திறன்கள் ஊழியர்களிடமிருந்து

                      -தனித்துவமான திறன்கள் மற்றும் அறிவு         செயற்பாட்டு நிபுணத்துவம் என்பவற்றிலிருந்து பெறப்படும்.

  • திறன்களானவை, போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஒரு நிறுவனம் விதிவிலக்காக சிறப்பாக செய்யும் செயற்பாடுகளாகும்.
  • அவை நிறுவனம் நீண்ட காலத்தில் அதன் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு தனித்துவமான பெறுமதியைச் சேர்க்கும் செயற்பாடுகளாகும்.

திறன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட செயற்பாட்டு பகுதிகளில் (உற்பத்தி, R&D மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவை) அல்லது செயற்பாட்டு பகுதியின் ஒரு பிரிவில் (உதாரணமாக, விளம்பரம்) உருவாக்கப்படுகின்றன.

முக்கிய திறன்கள்

  • முக்கிய திறன்கள் என்பது ஒரு நிறுவனத்திற்கு அதன் போட்டியாளர்களை விட போட்டி நன்மைக்கான ஆதாரமாக செயற்படும் திறன்களாகும்.
  • முக்கிய திறன்கள் ஒரு நிறுவனத்தை போட்டித்தன்மையுடன் வேறுபடுத்துவதுடன் அதன் ஆளுமையை பிரதிபலிக்கின்றன.
  • வெவ்வேறு வளங்கள் மற்றும் திறன்களை எவ்வாறு வரிசைப்படுத்துவது என்பதைக் மற்றும் திரட்டுவது என்பதனைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு நிறுவன செயன்முறையின் மூலம் முக்கிய திறன்கள் காலப்போக்கில் வெளிப்படுகின்றன.
  • ஒரு நிறுவனத்தின் வளங்கள் மற்றும் திறன்கள் அனைத்தும் தந்திரோபாய சொத்துக்கள் அல்ல அதாவது, போட்டி மதிப்பு மற்றும் போட்டி நன்மைக்கான ஆதாரமாக செயற்படும் திறன் கொண்ட சொத்துக்கள். 

முக்கிய திறன்களை உருவாக்குதல்

  • நிறுவனம் அதன் முக்கிய திறன்களைக் கண்டறிந்து உருவாக்குவதற்கு இரண்டு கருவிகள் உதவுகின்றன.
  • முதலாவது நிலையான போட்டி நன்மைக்கான நான்கு குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டது. அவை எந்த திறன்கள் முக்கிய திறன்கள் என்பதை தீர்மானிக்க பயன்படுத்தப்படலாம் இரண்டாவது கருவி பெறமதிச் சங்கிலி பகுப்பாய்வு ஆகும் இந்தக் கருவி,
  • பராமரிக்கப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட வேண்டிய மற்றும் வெளியகப்படுத்தல் செய்யப்பட வேண்டிய பெறுமதி உருவாக்கத் திறன்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

நிலைத்திருக்கக் கூடிய போட்டி நன்மைக்கான நான்கு அளவுகோல்கள்

முக்கியத் திறன்களாக அமைவதற்கு, திறன்கள் நான்கு குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்

  • பெறுமதிமிக்கது
  • அரிதானது
  • பிரதி செய்வதற்கு செலவு மிக்கது

பதிலீடற்ற திறன்கள்

நிலைத்திருக்கக்கூடிய போட்டி நன்மைக்கான நான்கு அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறிய திறன்கள் முக்கிய திறன்கள் அமையாது, அதாவது

"ஒவ்வொரு முக்கிய திறனும் ஒரு திறன் என்றாலும், ஒவ்வொரு திறனும் ஒரு முக்கிய திறன் அல்ல"

பெறுமதிமிக்க திறன்கள் நிறுவனம் அதன் வெளிப்புற சூழலில் வாய்ப்புகளை பயன்படுத்த அல்லது அச்சுறுத்தல்களை நடுநிலையாக்க அனுமதிக்கிறது.

அரிய திறன்கள் என்பது பலரிடம் இல்லாத திறன்கள். பல போட்டியாளர்களிடம் உள்ள திறன்கள் அவர்களில் எவருக்கும் போட்டி நன்மைக்கான ஆதாரமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக, மதிப்புமிக்க ஆனால் பொதுவான (அதாவது அரிதானது அல்லாத) வளங்கள் மற்றும் திறன்கள் போட்டி சமநிலைக்கான ஆதாரங்களாகும்.

பிற நிறுவனங்களால் எளிதில் உருவாக்க முடியாத திறன்கள் பிரதிசெய்வதற்கு செலவுமிக்க திறன்கள் ஆகும்.

பிரதிசெய்வதற்கு செலவுமிக்க திறன்கள் பின்வரும் குறிப்பிட்ட ஒரு காரணியினாலோ அல்லது மூன்று காரணிகளின் கலவையினாலோ உருவாக்கப்படுகின்றன.

ஒரு நிறுவனம் சில நேரங்களில் தனித்துவமான வரலாற்று நிலைமைகளின் காரணமாக திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

நிறுவனத்தின் திறன்களுக்கும் அதன் போட்டி நன்மைக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாக இருக்கும்போது. இந்நிமைகளில், ஒரு நிறுவனம் அதன் திறன்களை போட்டி நன்மைக்கான அடித்தளமாக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை போட்டியாளர்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது.

சில சமூக சிக்கலானதன்மை, திறன்கள் பிரதிசெய்வதற்கு செலவுமிக்கதாக இருக்கக்கூடிய மூன்றாவது காரணமாகும். சமூக சிக்கலானதன்மை என்பது குறிப்பிட்ட நிறுவனங்களின் திறன்கள் சிக்கலான சமூக நிகழ்வுகளின் விளைவாகும். தனிப்பட்ட உறவுகள், நம்பிக்கை, முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையேயான நட்பு, மற்றும் வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்தின் நற்பெயர் ஆகியவை சமூக ரீதியாக சிக்கலான திறன்களின் உதாரணங்களாகும்.

பதிலீடற்ற திறன்கள் தந்திரோபாய ரீதியில் சமமானவை இல்லாத திறன்கள் ஆகும்.

பொதுவாக, திறன்களைப் பதிலீடு செய்வது கடினமானவுள்ள போது அவற்றின் தந்திரோபாய பெறுமதி அதிகரிக்கிறது.

பதிலீடற்ற திறன்கள் பினவருவனவற்றின் விளைவாகும்,

  • நிறுவன ரீதியான விசேட அறிவு
  • நிறுவன கலாச்சாரம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக மாதிரியின் சிறந்த செயலாக்கம்
  • எனவே நிலைத்திருக்கக் கூடிய போட்டி நன்மை,
  • போட்டியாளர்கள் ஒரு நிறுவனத்தின் தந்திரோபாயத்தை பிரதிசெய்ய முடியாதபோது அல்லது பின்பற்ற முயற்சிப்பதற்கான மூலங்கள் இல்லாதபோது மட்டுமே காணப்படும். போட்டியாளர்கள் ஒரு பொருள், சேவை அல்லது செயன்முறையை வெற்றிகரமாகப்பின்பற்றும் வரை காணப்படும். 

விவாதிக்கப்பட்ட நான்கு அளவுகோல்களும் திருப்திகரமாக இருப்பின் ஒப்பீட்டளவில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்.

பெறுமதிச் சங்கிலி பகுப்பாய்வு

பெறுமதிச் சங்கிலி பகுப்பாய்வு நிறுவனம் அதன் பெறுமதி உருவாக்கச் செயற்பாடுகள் மற்றும் அல்லாதவற்றைப் புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.

நிறுவனம் உருவாக்கும் பெறுமதி, அப் பெறுமதி உருவாக்கச் செலவை விட அதிகமாக இருக்கும்போது மட்டுமே சராசரிக்கு மேல் வருவாயை ஈட்ட முடியமென்பதால் இச்சிக்கல்களைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

பெறுமதிச் சங்கிலிப் பகுப்பாய்வானது,

  • அவற்றின் கிரய நிலையைப் புரிந்து கொளவதற்கும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக-நிலை தந்திரோபாயத்தை  செயற்படுத்துவதை எளிதாக்குவதற்கும்

                         நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றது.


ஒரு நிறுவனத்தின் பெறுமதிச் சங்கிலிச் செயற்பாடுகள் முதன்மை மற்றும் ஆதரவு நடவடிக்கைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதன்மை நடவடிக்கைகள் எனப்படுவது ஒரு பொருளின் பௌதிக உருவாக்கம், அதன் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவை ஆகியவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளாகும். 

முதன்மை நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு தேவையான உதவிகளை துணை நடவடிக்கைகள் வழங்குகின்றன.

போட்டி நன்மைக்கான ஆதாரமாக இருப்பதற்கு, ஒரு வளம் அல்லது திறன் நிறுவனத்தை

  • போட்டியாளர்கள் வழங்கியதை விட உயர்ந்த பெறுமதியை வழங்கும் வகையில் ஒரு செயலைச் செய்வதற்கு, அல்லது
  • போட்டியாளர்களால் செய்ய முடியாத பெறுமதி உருவாக்கச் செயலைச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு செயற்பாடும் போட்டியாளரின் திறன்களுடன் ஒப்பிடப்பட்டு, உயர்ந்தது, சமமானது அல்லது தாழ்ந்ததாக மதிப்பிடப்பட வேண்டும்.

முதன்மை நடவடிக்கைகள்

1) உள்ளகச் சரக்குக் கையாள்கை பொருட்கள் கையாளுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் இருப்புக்கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகள், ஒரு தயாரிப்புக்கான  உள்ளீடுகளைப் பெறவும், சேமிக்கவும் மற்றும் விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

2) செயற்பாடுகள் - உள்ளகச் சரக்குக் கையாள்கையினால் வழங்கப்பட்ட உள்ளீடுகளை இறுதி தயாரிப்பு வடிவமாக மாற்ற தேவையான செயற்பாடுகளாகும். இயந்திரங்களை ஒழுங்குபடுத்தல் பொதிசெய்தல், தொகுத்தல் மற்றும் உபகரண பராமரிப்பு ஆகியவை செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான உதாரணங்களாகும்.

3) வெளியகச் சரக்குக் கையாள்கை வாடிக்கையாளர்களுக்கு இறுதி உற்பத்திகளைச் - சேகரித்தல், சேமித்தல் மற்றும் பௌதிக ரீதியாக விநியோகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளாகும். இந்த நடவடிக்கைகளுக்கான உதாரணங்களாக முடிவுப்பொருட்களின் களஞ்சியப்டுத்தல், பொருட்கள் கையாளுகை மற்றும் கட்டளைகளைச் செயற்படுத்தல் ஆகியவை அடங்கும். 

4) சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வாடிக்கையாளர்கள் உற்பத்திகளை வாங்குவதற்கும் அவர்களைக் கொள்வனவு செய்யத் தூண்டுவதற்கும் வழிவகைகளை வழங்குவதற்காக நிறைவுசெய்யப்பட்ட நடவடிக்கைகளாகும்.

5) சேவை ஒரு பொருளின் பெறுமதியை மேம்படுத்த அல்லது பராமரிக்க வடிவமைக்கப்பட்ட செயற்பாடுகள். நிறுவுதல், பழுதுபார்ப்பு, பயிற்சி மற்றும் சரிசெய்தல் உள்ளிட்ட சேவை தொடர்பான செயற்பாடுகளில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

துணை நடவடிக்கைகள்

1) கொள்முதல் -ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள்.

2) தொழில்நுட்ப விருத்தி ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் அதைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் செயன்முறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.

3) மனித வள முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், பணியமர்த்துதல், பயிற்சியளித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் வெகுமதியளித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகள்.

4) நிறுவன உள்கட்டமைப்பு உறுதியான உள்கட்டமைப்பு என்பது பொது முகாமைத்துவம், திட்டமிடல், நிதி, கணக்கியல், சட்ட ஆதரவு மற்றும் முழு பெறுமதிச் சங்கிலியின் பணிகளை ஆதரிக்கத் தேவையான அரசாங்க உறவுகள் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது.

செயற்பாடுகளை வெளியகப்படுத்தல் (Outsourcing)

வெளியகப்படுத்தல் பெறுமதி  உருவாக்கச் செயற்பாட்டை என்பது  வெளியக  வழங்குநர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதாகும்.

பயனுள்ள வெளியகப்படுத்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு, அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றின் மூலதன முதலீடுகளைக் குறைத்துக்கொள்கின்றன.

சில நிறுவனங்கள் மட்டுமே அனைத்து முதன்மை மற்றும் துணை நடவடிக்கைகளிலும் போட்டி நன்மையை அடையத் தேவையான வளங்கள் மற்றும் திறன்கள் கொண்டிருப்பதனால் வெளியகப்படுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

வெளியகப்படுத்தலுக்கான தந்திரோபாய நியாயப்படுத்தல்கள்

அனைத்து பெறுமதிச் சங்கிலி செயற்பாடுகளிலும் துணைச் செயற்பாடுகளிலும் சில  நிறுவனங்கள் மட்டுமே போட்டித்தன்மையுடன் சிறந்து விளங்குகின்றன.

நிறுவனத்தால் திறம்பட செய்ய முடியாத செயற்பாடுகளை வெளியகப்படுத்துவதனால் நிறுவனம் பெறுமதியை உருவாக்கக்கூடிய பகுதிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

பிற நோக்கங்களுக்காக வளங்களை விடுவிப்பது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறம்பட சேவை செய்யும் நோக்கில் முக்கிய செயற்பாடுகளிலிருந்து அல்லாத முக்கிய செயற்பாடு அல்லாத முயற்சிகளுக்கு திசைதிருப்புகிறது

சிறப்பு வழங்குநர்கள் வெளியகப்படுத்தப்படும் செயற்பாடுகளை மிகவும் திறமையாக செய்ய முடியும்.

இடர்களைப் பகிர்தல் முதலீட்டுத் தேவைகளைக் குறைத்து, நிறுவனத்தை மேலும் நெகிழ்வானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும், மாறிவரும் வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும் செய்கிறது.

உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளுக்கான அணுகலை வழங்குதல் வெளியகப்படுத்தல் வழங்குநர்களின் சிறப்பு வளங்கள் மற்றும் உலகத் தரத்திலான திறன்களை நிறுவனங்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பொருத்தமான முதன்மை மற்றும் துணை நடவடிக்கைகள் வெளியகப்படுத்தல் செய்யப்பட்டதா என்பதைச் சரிபார்க்க, வெளியகப்படுத்தல் திட்டங்களில் ஈடுபட்டுள்ள முகாமையாளர்களுக்கு நான்கு திறன்கள் அவசியம்:

  • தந்திரோபாய சிந்தனை,
  • ஒப்பந்தம் செய்தல்,
  • கூட்டாண்மை நிர்வாகம், மற்றும்ந
  • நிர்வாகத்தை மாற்றவும்.

எனவே, புதுமை மற்றும் தொழில்நுட்ப நிச்சயமற்ற தன்மை ஆகியவை வெளியகப்படுத்தல் முடிவுகளை எடுப்பதில் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான பிரச்சினைகளாகும்.

திறன்கள், பலங்கள், பலவீனங்கள் மற்றும் தந்திரோபாய முடிவுகள்

உள்ளகப் பகுப்பாய்வின் முடிவில், நிறுவனங்கள் வளங்கள், திறன்கள் மற்றும் முக்கிய திறன்களில் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண வேண்டும்.

விரும்பிய தந்திரோபாயத்தை உருவாக்க மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற அக்கறையுடைய தரப்பினருக்கான பெறுமதியை உருவாக்க பொருத்தமான வளங்கள் மற்றும் திறன்கள் தேவையாகும்.

"சரியான" வளங்கள் ("பல" வளங்களுக்கு மாறாக) போட்டி நன்மைக்கான அடித்தளமாகும் வகையில் முக்கிய திறன்களாக உருவாகும் திறன் கொண்டவை.

வெளியகப்படுத்தல் போன்ற கருவிகள் போட்டி நன்மைக்கான ஆதாரமாக முக்கிய திறன்களில் உறுதியான கவனம் செலுத்த நிறுவனங்களுக்கு உதவும்.

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow