கர்ப்பம் தரித்தலும் ஜோதிடமும்
★கர்ப்பமும்★ ஜோதிடமும்★
★குரு புத்திரகாரகன் ஜாதகத்தில் புத்திர பாவம் என்று சொல்லக்கூடிய இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆவதால், மக்கட் செல்வம் என்பது பூர்வ புண்ணிய அடிப்படையிலேயே அமைகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவ்வாறே, பூர்வ புண்ணியம், புத்திர பாவம், புத்திர காரகன் குரு, எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகின்றன.
★இப்படித்தான், ஒருவருடைய ஜாதகத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகமுக்கிய ஸ்தானமாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால், கடந்த பிறவியில் அவர் விளைவித்தவற்றை, இந்த பிறவியில் அறுவடை செய்து, அனுபவிக்கிறார் என்று பொருள். இதன் தத்துவமே இந்த பிறவியிலாவது நன்மைகள் செய் ! அதன் பலனை பிறகு அனுபவிப்பாய் என்பதே.
★கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் :
★பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.
★ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.
பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம்.
★குரு தசையில், பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின் புத்தியிலும் கர்ப்பமடையலாம்.
ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானாதிபதியை குரு பார்த்தால், களஸ்திர ஸ்தானாதிபதியின் தசாகாலத்தில் வரும் குரு புத்தியிலும் கர்ப்பம்தரிக்கலாம்.
★கர்ப்பம் தரிப்பு கோட்சார அடிப்படையில் (குரு பெயர்ச்சி):
★கோட்சாரத்தில், ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு குருப் பெயர்ச்சியாகும் காலங்களிலும், ராசி அடிப்படையில் குரு ராசி நாதனை பார்க்கும் காலங்களிலும், ராசிக்கு 5ஆம் இடத்தைப் பார்க்கும் காலங்களிலும், புத்திர ஸ்தானாதிபதியைப் பார்க்கும் காலங்களிலும் கர்ப்பமடையலாம்.
★ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு தம்பதியர் இருவரின்ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமேகுழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையைநிர்ணயம் செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தைபாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ளஇயலும் .
★ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தைபாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு கை ஓசைக்குசமமானது அன்பரே !
★மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில்ஒருவருக்கு புத்திர ஸ்தானம் Sகடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்குகிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்துஒருவருக்காவது புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் .
★இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தைஇல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படிகொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படிகொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும்என்பதில் ஐயமில்லை . தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம்சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும்அல்லது ,
★புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன்சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர்தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண்குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது ஜாதகர்
★பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தைவிட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண்குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்பவந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம் சுயஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் தம்பதியரின் ஜாதகஅமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் ,
★அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயேகுடியிருந்தால் , நிச்சயம் பெண் குழந்தைகளாக பிறக்கும் .
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை. இதற்க்கு ஒரே காரணம்தான்இருக்க முடியும் ,
★ தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வபுண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம்பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன்சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம்மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டைபொறுத்து அமையும் .