சைக்கிளில் கிடைக்காத எந்த நன்மையையும் கார் , பைக் தருவதில்லை

சைக்கிளில் கிடைக்காத எந்த நன்மையையும் கார் , பைக் தருவதில்லை

சுற்றுச் சூழல் மாறுபாடு மற்றும் பெருகி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக பலரது கவனம் சைக்கிளை நோக்கி திரும்பியிருக்கிறது.

கார், பைக்கை விட சைக்கிள் பெஸ்ட் - ஏன் தெரியுமா?
சைக்கிளை பயன்படுத்துவபர்களை காட்டலும் கார் மற்றும் பைக் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் 84% கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுற்றுச் சூழல் மாறுபாடு மற்றும் பெருகி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக பலரது கவனம் சைக்கிளை நோக்கி திரும்பியிருக்கிறது. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சைக்கிள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. கால நிலை மாற்றம் சுற்றுச் சூழல் குறித்து அக்கறை உள்ளவர்கள் குறைந்தளவாவது சைக்கிள் பயன்பாட்டை தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

கார், பைக் வைத்திருப்பவர்களை விட 84 விழுக்காடு குறைவாக சைக்கிள் ஓட்டுநர்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வுகள் லண்டன், ரோம், பார்சிலோனா உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் சேகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டு தரவுகளின் அடிப்படையில், கார் மற்றும் பைக் பயன்படுத்தும் நபர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.2 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இதனால், கார் மற்றும் பைக் பயன்படுத்துவது குறைந்தால் நகரங்களில் சுவாசிக்கும் காற்றின் தரம் அதிகரிக்கும் என கூறியுள்ள ஆய்வாளர்கள், வாழ்க்கை முறையிலும் மாற்றம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த ஆய்வில் 10,722 பங்கேற்பார்கள் கலந்து கொண்டு, அவர்களின் நடவடிக்கைகள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டது. மற்றொரு ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, வரும் காலங்களில் மின்னலின் தாக்கம் 100 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பருநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இத்தகைய மாற்றங்களால், ஆர்டிக் பகுதிகளில் ஏற்படும் சூழலியல் மாற்றம் மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ குறித்தும் ஆராய்ந்தனர். வட துருவத்தில் 300 மைல்களுக்கு தொலைவில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலை சேகரித்த அவர்கள், ஆர்டிக் வட்டத்தில் இதற்கு முன்னர் நிகழாத அரிய தாக்குதலாக இதனை பார்த்தனர்.

இதனடிப்படையில், எதிர்வரும் காலங்களில் மின்னல் தாக்குதல்கள் 100 விழுக்காடு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், காட்டுத் தீ பாதிப்பும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.புவி வெப்பமடைவதால் ஆர்டிக் பகுதி வானிலைகளில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வில் குறிப்பிட்டு ஆய்வாளர்கள், இது வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே புவி வெப்பமடைவதை தடுக்க உலக நாடுகளை ஓரணியில் திரட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.