விக்ரம் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Vikram collection report

Jun 6, 2022 - 17:27
 0  326
விக்ரம் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் இதன் சூழல் வசூலிலும் எதிரொலிக்கிறது.

விக்ரம் படம் உலகம் முழுக்க ரசிகர்களின் ஆதரவுடன் முதல் மூன்று நாள்களில் ரூ. 150 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலை விடவும் அடுத்த இரு நாள்களின் வசூல் அதிகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை எட்டிய 2-வது கமல் படம் - விக்ரம். சனிக்கிழமை வரை அமெரிக்காவில் 1.37 மில்லியன் அதாவது ரூ. 10.65 கோடி வசூலை அடைந்துள்ளது. இங்கிலாந்தில் ரூ. 2.78 கோடியும் ஆஸ்திரேலியாவில் ரூ. 2.60 கோடியும் வசூலித்துள்ளது.

முதல் மூன்று நாள்களில் கிடைத்த வசூலின் அடிப்படையில் விக்ரம் படம், ரூ. 500 கோடி வசூலை அடையும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.