சாதரண ஒரு தமிழனாக வந்து ஓட்டு போட்டாரு..விஜயின் தந்தை பரபரப்பு பேட்டி !
சென்னை : சட்டமன்றத் தேர்தலில் விஜய் சைக்கிள் வந்து வாக்களித்தார் இது பெரும் பரப்பாக பேசப்பட்டநிலையில், இதுகுறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் சுறுசுறுப்பாக வாக்களித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார். இவர் சைக்கிளில் வந்த வீடியோ வைரலாகி இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.
கடுமையாக உயர்ந்து வரும் பொட்ரோல் டீசல் விலையை எதிர்த்தே விஜய் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது பிஆர்ஓ வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகிய சந்து என்பதால் விஜய் சைக்கிளில் சென்றதாவும் இதன் பின்னணியில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அளித்துள்ள பேட்டியில், 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொருவரும் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். அவர் இப்படி செய்ததை நான் ஒரு பொது மக்களாக இருந்து பார்க்கும் போது, விஜய் தன்னை ஒரு நடிகராக அல்லது ஒரு விஜபியாக வந்த ஓட்டுப்போட வேண்டும் என்று நினைக்காமல் ஒரு சாதாரண மனிதனாக எல்லோரும் சமம் என நினைத்து எல்லாரும் ஒரு இந்தியன் என் நினைத்து சாதாரண ஒரு தமிழனாக வந்தார். இதில் அவர் ஒரு நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறினார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் சைக்கிளின் வந்தாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதில், வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது என்று பதில் அளித்தார்.