டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 21 முதல் ஆஃபீஸ் சீரிஸ்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும்  பிப்ரவரி 21 முதல் ஆஃபீஸ் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘ஆஃபிஸ்’ – நகைச்சுவை அசத்தும் இரண்டாவது புரோமோ வெளியீடு!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஆஃபிஸ்’ (Hotstar Specials) சீரிஸின் இரண்டாவது புரோமோவை வெளியிட்டுள்ளது. இதன் டைட்டில் பாடலும் புரோமோக்களும் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளன. இந்த நகைச்சுவை கலந்த வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் ‘ஆஃபிஸ்’, வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

புரோமோவில் என்ன உள்ளது?

ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, இந்த சீரிஸின் கதைக்களத்தையும், அதில் உள்ள நகைச்சுவையை துல்லியமாக காட்டுகிறது.

புரோமோவின் தொடக்கத்தில், ஒரு கிராமத்திலிருந்து வந்த பெண், வாக்காளர் அடையாள அட்டைக்காக தாசில்தார் அலுவலகம் வருகிறார். ஆனால், அவர் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்ததால், தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். இதனால் அலுவலகம் முழுவதும் குழப்பமாகிறது. அனைவரும் அவரது கணவரின் பெயரை கண்டுபிடிக்க முயற்சிக்க, இறுதியில் சைகை மொழி மூலம் பெயரை கூறச் செய்ய முயல்கின்றனர். இதனைச் சுற்றியுள்ள சம்பவங்கள், நகைச்சுவையை அள்ளி விடுகின்றன.

இந்த வீடியோவின் கடைசி டேக்லைன் – “வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்”, இந்த சீரிஸின் மொத்த உணர்வை வெளிப்படுத்துகிறது.

யார் யார் நடித்துள்ளார்கள்?

இந்த நகைச்சுவைத் தொடரை கபீஸ் இயக்க, ஜெகன்நாத் தயாரித்துள்ளார். ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் பார்வையாளர்களை கவர்ந்த குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ், இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன், ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஹார்ட் பீட்’ ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம்!

‘ஹார்ட் பீட்’ விரும்பியவர்கள், ‘ஆஃபிஸ்’ சீரிஸை மேலும் ரசிப்பார்கள். ஒரு தாசில்தார் அலுவலகத்தின் அன்றாட நிகழ்வுகளை, கிராமப்புற பின்னணியில் நகைச்சுவை கலந்து சொல்லும் விதமான கதைக்களம், அனைவரையும் கவரும். ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாக, கலகலப்பாக இருக்கும்.

நகைச்சுவையை விரும்புவோருக்கு, இது மனம் விடுத்து சிரிக்கத் தக்க, முழுமையாக அசத்தும் ஒரு பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும்!

பிப்ரவரி 21 முதல், ‘ஆஃபிஸ்’ – ஹாட்ஸ்டாரில் மட்டுமே!