விவசாயமும் அறிவியலும்
வேளாண்மை என்றால் என்ன?, இயற்கை விவசாயம் என்றால் என்ன?, விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் என்றால் என்ன?
ஆரம்ப காலத்தில் மனிதன் விவசாயத்தை அறியாமல் இருந்தபோது தனது தேவைகளை காடுகளுக்குச் சென்று அங்குள்ள தாவரங்கள் மூலமாகவோ விலங்குகள் மூலமாகவோ நி. வர்த்தி செய்து கொண்டிருந்தான்.காலப்போக்கில் மனிதன் குடியேற்றங்களை அமைத்து, மனிதன் காடுகளில் இருந்த தாவரங்களை தனது குடியேற்றத்திற்குள் ஒரு கட்டமைப்பின் மூலம் கொண்டு வந்தான். உதாரணமாக குறிப்பிட்ட கலத்தில் மட்டுமே சில உணவுகள் பெறக்கூடியதாக இருக்கும் ஆனால் அது அக்குறிப்பிட்ட காலத்தில மட்டுமல்லாமல் மற்றைய காலங்களிலும் தேவைப்பட்டது. ஆகவே இவ்வாறான தேவைகளை நிறைவேற்றுவதற்காக, மனிதன் தானாகவே பயிர்களை வளர்த்து பராமரிக்கும்ஒரு கட்டமைப்பை கொண்டுவந்தான். இதன்போது தான் விவசாயம் உருவாக்கப்பட்டது. இந்த விவசாயத்தின் மூலம் மனிதன் உணவுகளாக இருக்கட்டும் மற்றும் பல தேவைகளையும் நிவர்த்தி செய்து கொண்டிருந்தான்.
இன்றைய உலகத்தில் மனித இனத்திற்கு விவசாயம் ஒரு முக்கிய காரணியாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் விவசாயமும் அறிவியலும் என்ற கருப்பொருள் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. அத்தோடு விவசாயத்தை பொருத்தவரை இவ்வுலகத்தில் மனிதனாக இருந்தாலும் சரி மனித இனத்தை தவிர வேறு உயிரினங்களாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு வகையில் பயன்பட்டு வரும் ஒரு காரணியாகவும் இருந்து வருகிறது. விவசாயம் பண்டைய காலம் தொட்டு மனித இனத்தோடு ஒன்றிய அமையக்கூடிய ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. மனிதன் ஆரம்பத்தில் உணவுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தான். அதாவது உணவுப்பொருட்களாக கடல் உணவாக இருக்கட்டும் மாமிச உணவாக இருக்கட்டும் ஆனால் தாவர உணவுகள் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்து வந்தது. மனிதனைப் பொறுத்தவரை தாவர வகைகளுக்கும் விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தான். இதன் போது விவசாய உணவுப் பொருட்களையும் தாண்டி, இன்றைய உலகத்தில் தாவர இனங்களால் மனிதன் அவனுடைய பல தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான்.
விவசாயத்தின் முக்கியத்துவம்
விவசாயம் இன்று உலகில் ஒரு முக்கிய தேவையாகவும் காணப்பட்டு வருகின்றது. விவசாயத்தைப் பற்றி மேலும் அறிய முற்படும்போது, விவசாயத்தின் அவசியமானது அன்று தொட்டு இன்றுவரை மனிதனின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக இருப்பதால் விவசாயம் ஒரு முக்கிய அம்சமாக காணப்பட்டு வருகிறது. இன்றைய உலகத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்க கூடிய ஒரு அம்சமாகவே இந்த விவசாயம் காணப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதாவது விவசாயமானது நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து எடுத்துரைக்க முடியும்.
ஆசிய நாடுகளில் பயிரிடப்படும் நெற் பயிர்ச்செய்கையாக இருக்கட்டும் தேயிலை பயிர்ச்செய்கையாக இருக்கட்டும் தெங்குபயிர்ச்செய்கையாக இருக்கட்டும், மற்றும் மேற்கத்திய நாடுகளில் பெயரிடப்படும் சோளம், கோதுமை போன்ற பயிற்சிகள் ஆக இருக்கட்டும் எல்லாம் விவசாயத்தின் கட்டமைப்புக்குள் வரையறுக்கப்படுகின்றது.
மனிதன் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருப்பதால் விவசாயத்தை தனது அத்தியவசிய தேவையாகும் அடிப்படை தேவையாகும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றான். மனிதன் இன்றைய உலகத்தில் விவசாயத்தை உணவுப் பொருட்களாக மட்டுமல்லாமல், அவன் இருக்கும் குடியேற்றத்தைக் கூட தீர்மானிக்கக்கூடிய ஒரு நிர்பந்த சூழ்நிலைக்குள் இந்த விவசாயம் அதாவது இந்த தாவர வகைகள் வரையறுக்கப்பட்டு காணப்படுகின்றது. அது மட்டும்மல்லாமல் இன்றைய நவீன உலகத்தில் மனிதன் அவனுடைய ஆடம்பர தேவைகளுக்கு விவசாயத்தை பயன்படுத்தி வருகின்றான். அதாவது தனது இருப்பிடங்களை அழகியல் முறையின் மூலம் கொண்டு கட்டமைக்க. பணத்தை செலவு செய்து தாவரத்தின் பாகங்கள் மூலம் கட்டிடங்களை அமைத்து கொள்கிறான்.
அன்று உணவுக்க மட்டும் பயன்படுத்த பட்ட விவசாயம் இன்று கட்டிட்ட பணிகளுக்கும் பயன்படுவதோடு மனித நோய்களுக்கும் மருந்துகளையும் இவ்விவசாயத்தின் மூலம் மனிதன் தாவரங்களை பயிர்யிட்டுக் கொள்கிறான். இப்படி தாவரத்தின் நன்மைகளை அறிந்த மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்திருப்பதால் அடுத்த படிக்கு விவயத்தை கொண்டு. செல்ல முற்படுகிறான்.
அறிவியல் எழுச்சி
ஆரம்ப கால மனிதனின் வரலாற்றை பார்க்கும் போது மனிதன் நீர் நிலைகளை அண்டி வாழ்ந்திருக்கிறான் அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் தனது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டிருப்பதை வரலாற்று புராணங்களில் நாம் அறிந்திருப்போம். பழங்கால நாகரிகங்களை பொறுத்தவரை அனைத்து நாகரிகங்களும் நதிகரையோரங்களில் அமைக்கப்பட்டிருந்தது.அதாவது அங்குள்ள தொல்பொருள் ஆய்வின் மூலம் மனிதன் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த சான்றுகள் நிறையவே உள்ளன. அதாவது சிந்து வெளி நாகரிகம் போன்ற மற்றும் வேறு சில நாகரிகங்களை எடுத்து பார்க்கும்போது அங்கு களஞ்சிய அறைகள் நிறைய காணப்பட்டதை நாம் அறிகிறோம். அதாவது களஞ்சியஅறைகளில் அவர்கள் தங்களுக்கு தேவையான தானிய வகைகளை சேகரித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது.
அக்கால நாகரிகத்திலிருந்து விவசாயம் ஒரு முக்கிய அதாவது அத்தியாவசிய ஒரு தேவையாகவே மனிதனுக்கு இருந்து வந்துள்ளது மற்றும் மனிதன் தனது குடியேற்றங்களை சமவெளி பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அதாவது சமவெளி பிரதேசங்களில் புல் நிலங்களை அண்டிய பிரதேசத்தில் மனிதன் வாழ்ந்துள்ளதாகவும் சான்றுகள் தேரிவிக்கிறது. அதாவது கால்நடைகளை வளர்ப்பதற்காக புற்கள் உள்ள பிரதேசத்தில் மனிதன் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புற்களும் இன்றைய உலகத்தில் ஒரு முக்கிய விவசாய அம்சமாக கால்நடைகளை வளர்க்க உதவுகிறது. மற்றும் அக்கால மனிதன் நாடோடி வாழ்க்கை முறையினை மேற்கொண்டதால் விவசாயம் இடத்துக்கு இடம் பரவ தொடங்கியது. இதனால் விவசாயதின் வளர்ச்சியும் அதன் அறிவியல் சார்ந்த விடயங்களும் எழுச்சி பெற ஆரம்பித்தது.
அந்த வகையில் மனிதன் ஆரம்பதில் ஒரு கட்டமைப்பு இல்லாமல் பயிரிட ஆரம்பித்து இன்று ஒரு அழகியல் முறையில் பயிரிட கற்று கொண்டு காலவரையறைகள் மூலம் விவசாயத்தை தீர்மானிக்கும் அளவுக்கு விவசாயத்தை அறிவியலோடு கொண்டு செல்ல கூடிய காலகட்டத்தை அன்றே மனிதன் உருவாக்கி விட்டான்.
அத்தோடு மனிதன் ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்ற வகையில், தனது விவசாயத்தை தீர்மானது தனக்கு தேவையான அளவு செய்யத் தொடங்கினான். அன்றய கால விவசாயம் மனிதன் கற்றுக்கொள்ளும் ஒரு பாடமாக இருந்ததோடு அறிவியல் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்துள்ளது.
பண்டையகால விவசாயமுறைகள் அக்கால உணவுத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு போதுமானதக இருந்தபோதும், அதிகரித்துவரும் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் மக்களின் தேவைப்பாட்டிற்கு ஏற்றவாறு விவசாய முறைகளானவை படிப்படியாக மாற்றமடைந்து இன்று அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் அளவிற்கு இவ்வுலகம் முன்னேறியுள்ளது.
ஆரம்பத்தில் கால்நடைகளையும் பெருமளவு மனிதவலுவையும் பயன்படுத்தி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மனித உழைப்பு குறைவாகவும், இயந்திரப்பாவனை அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஆதிகாலத்தில் நெல் பயிர்ச்செய்கையின் போது மாடுகளில் கலப்பை பூட்டி வயலை உழுது, மனிதர்களைப் பயன்படுத்தி களை எடுத்தல், அறுவடை போன்றவற்றை மேற்கொண்டார்கள்.
தற்போது உழவு இயந்திரங்களில் கலப்பைகளைப் இணைத்து வயலை உழுதல், இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்தல் என தொழில்நுட்ப ரீதியிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயமானது இலகுவாகவும் விரைவாகவும் நடைபெறுகின்றது. பாரியளவில் விவசாயம் செய்ய முடிவதோடு அதனை வேறுநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யவும் முடிகின்றது. இவ்வாறு விவசாயமானது படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று அறிவியலோடு சார்ந்துள்ளது.
நவீன விவசாயம்
விவசாயம் இன்று கலப்பு முறைகளை (Hybrid) கொண்டு செய்யபடுகிறது. அதாவது அருகில் வரும் பயிர்களை வேறு பயிர்களோடு மரபனு மாற்றம் செய்யும் அளவிற்கு விவசாயதில் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த முறைகளை அதிக லாபம் ஈட்டுவதற்கும், உலக சந்தைக்கு அதிகம் கொள்வனவு செய்வதற்கும் இந்த முறையினை பயன்படுத்துகிறது. இதன் அடிப்படையில் இன்றைய விவசாயம் அறிவியலோடு துணைபோவதற்கு காரணம் மனிதனின் தேவை அதிகரித்ததால் என்பது குறிப்பிடதக்க அம்சமாகும்.
இன்று உலகலாவிய ரீதியில் விவசாயம் ஒரு கற்க்கை நெறியாக கற்று கொடுக்கபட்டு வருவதையும் மற்றும் விவசாய செய்கை முறையினை எதிர்கால சந்ததிகளுக்கு பழக்கபடுத்தியும் வருகிறது. இந்த அறிவியல் உலகம் முழுவதும் விவசாயம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நிறைய நிறுவனங்கள் தோன்றி சேவைகளை செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயம் அறிவியல் மூலம் வளர்ச்சி பெறுவதை நாம் அறியும் ஓர் விடயம் ஆகும்.
இக்கால விவசாயத்தில் உலகின் நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று விவசாயத்தில் புதிய புதிய தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறியும் ஒரு விடயமாகும். அத்தோடு இன்றைய விவசாய முறையினை தொழில்முறைகள் ஒரு வித்தியாசமான ஒரு விவசாய தன்மையை உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. அதாவது மேற்கத்தேய நாடுகள் தனது விவசாயத்தினை இலகுவாக செய்து கொள்வதற்காக புதிய புதிய இயந்திரங்கள் மூலம் விவசாயத்தை செய்து கொண்டு வருகிறது. உதாரணமாக ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் நீரின் மேல் விவசாயம் செய்யும் ஒரு புதிய முறைகளை கொண்டு இன்று வெற்றி கரமாக செய்து வருகிறது. அரேபியா நாடுகள் நிலப்பரப்புக்கள் குறைவாகவுள்ள பிரதேசங்களில் நீரின் மீது விதைகளை மிதக்கவிட்டு நீரில் காணப்படும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி வருகிறது.
ஆரம்ப காலத்தில் இருந்து இந்த விவசாயம் இன்றைய காலம் வறை நீடித்திருந்தாலும் இன்றைய உலகத்தைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதோடு. அந்த அறிவியல் வளர்ச்சியோடு விவசாயமும் வளர்ச்சியடைந்தது. உண்மையில் எல்லோருக்கும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த விவசாயமானது கடந்த காலங்களில் விவசாயம் அழிவுற்றிருந்த போதிலும். மீண்டும் விவசாயத்தை அறிவியல் மூலமாக புதிய தொழிநுட்பகளை பயன்படுத்தி விவசாயத்தை மேலும் பண்டைய காலம் போல் வளர்ச்சி அடைய செய்ததில் உண்மையில் அறிவியலுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. உலகில் இந்த அறிவியல் தொழில்நுட்பங்களின் மூலம் விவசாயத்தில் புதிய கொள்கைகளை கொண்டு வந்த போதிலும் மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் விவசாயம் வளர்ச்சி அடையும் என்பதை இவ்விடத்தில் தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு விவசாயத்தின் உண்மை தன்மையை இந்த உலகம் அறிந்திருந்த போதிலும் உண்மையில் இயற்கையாக விவசாயம் செய்யும் முறை மாற்றப்பட்டு. இன்று செயற்கை முறை விவசாயங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக அறிவியலுக்கு பெரியதொரு பங்கு இருக்கிறது. என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வாழ்வியல் நமக்கு கற்றுத் தந்த பாடங்களில் உண்மையில் இந்த விவசாயமும் ஒரு பங்கு. என்பதை நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்த பாடமாகும். அந்த வகையில் இந்த விவசாயத்தை அழிப்பதும் காப்பதும் நம் மனிதர்களின் கைகளில்! வளர்ந்து வரும் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலமாகமட்டுமே காப்பாற்ற முடியும். எதிர்கால சந்ததிகள் விவசாயத்தை கண்டறிவதற்கு இந்த தொழில்நுட்பங்கள் மட்டுமே அதற்கு உறுதுணையாக இருக்கும்.
அறிவியலால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியும்.
Whats Your Reaction?






