வலிமை அப்டேட்- சூட்டிங் ஸ்போட்டில் ரசிகர்களை மகிழ்விக்க தல என்ன செய்தார் தெரியுமா..? - படங்கள் இணைப்பு
சும்மா ஸ்டைலா செம கெத்தா இருக்காரு தல அஜித். ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இது படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தில் அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் லீக் ஆகி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகை ஏற்கனவே ஓரிரு முறை தல அஜித்தின் வலிமை கெட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களில் தல அஜித் செம மாஸா கெத்தா இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.