இன்றைய நாள் பஞ்சாங்கம், ராசிபலன்கள் 15-11-2021 திங்கள்கிழமை
இன்றைய நாளுக்கான பஞ்சாங்கமும், 12 ராசிகளுக்கான பலன்களும்

இன்றைய பஞ்சாங்கம்
15-11-2021, ஐப்பசி 29, திங்கட்கிழமை, ஏகாதசிதிதி காலை 06.40 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்புரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்றநாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்-10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 15.11.2021
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிலஇடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால்அடைய வேண்டிய இலக்கை அடையலாம். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதியசொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன்கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாகஇருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்டகருத்துகள் தோன்றும். வேலையில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராதஉதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில்கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதியமுயற்சி எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களைதவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.
கன்னி
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்திலாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்துசேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.
துலாம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால்முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்தபோட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதிஇருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள்ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றிஇருப்பீர்கள். உறவினர்கள் உதவியால்பிரச்சினைகள் குறையும். நண்பர்களின்ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவுமுன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும்ஒத்துழைப்பும் கிட்டும்.
தனுசு
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள்வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள்அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன்வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்துசெல்வது நல்லது.
மகரம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில்கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வழியில் இனிய செய்திகள் வந்துசேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையேஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல்ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால்வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள்குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள்விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வம்புவழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால்அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.