இன்றைய நாள் எப்படி - 04.01.2022
பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
04-01-2022, மார்கழி 20, செவ்வாய்க்கிழமை,
துதியை திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறைதிரிதியை.
உத்திராடம் நட்சத்திரம் பகல் 10.56 வரைபின்பு திருவோணம்.
பிரபலாரிஷ்ட யோகம் பகல்10.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன்- 0. சந்திர தரிசனம்.
ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம்காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 04.01.2022
மேஷம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்துமுடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்குமகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால்அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்லமுன்னேற்றமான நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்குமுன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதுநல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களைதவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில்மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாகநடைபெறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள்சுமூகமாக முடியும். பிள்ளைகளோடு இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்களதுமதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடுசெய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள்நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள்உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம்குறைந்து காணப்படும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன்செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள்உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்தலாபத்தை அடையலாம்.
விருச்சிகம்
இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சிஅடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதியபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில்இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி கடன்கள்கிடைக்கும்.
தனுசு
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில்எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும்சமாளிக்க முடியும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளுகுறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகிசுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதியவாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாகஇருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதியதிட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் கடன்கள்ஓரளவு குறையும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமானசூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்லசெய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில்அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழையகடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.