அட்சய திருதியை தினத்தில் மஹா லக்ஷ்மியை வழிபடும் முறை
அக்ஷய திரிதியை ஸ்பெஷல்! லக்ஷ்மி ஸ்துதி !ஷோடச லக்ஷ்மி ஸ்துதி.

ஆதிலட்சுமி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீI
யசோதேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
பரபிரம்ம சொரூபிணியான ஆதிலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புகழைக் கொடு. தனத்தைக் கொடு. அனைத்து அத்தியாவசிய விருப்பங்களையும் அளிப்பாயாக.
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினீI
புத்ரான்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
சந்ததி சிறந்திட சந்தான பாக்யம் அளித்திடும் சந்தான லட்சுமியே வணக்கம். எனக்கும் அந்தப் பேறினைக் கொடு. செல்வத்தைக் கொடு. நியாயமான எல்லா தேவைகளையும் நிறைவேற்று.
வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணீI
வித்யாம்தேஹி கலாம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
பிரம்ம வித்யா தேவியின் வடிவினளான வித்யா லட்சுமியே உனக்கு நமஸ்காரம். வித்யையைக்கொடு. கலைகளைக் கொடு. எல்லா நல் இஷ்டங்களையும் நிறைவேற்று.
தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதாரித்ரிய நாசினிI
தனம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
அனைத்து வறுமைகளையும் நசிக்கச் செய்யும் தனலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீங்காத செல்வத்தைக் கொடு. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்.
தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாபரண பூஷிதேI
ப்ரஞாம் தேஹிச்ரியம் தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமேII
எல்லா விதமான உயர்ந்த ஆபரணங்ளையும் அணிந்து பிரகாசத்தோடு விளங்கும் தான்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புத்திக் கூர்மையைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்று.
மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலி கல்மஷ நாசினீ I
ப்ரஞாம்தேஹி ச்ரியம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
கலியின் கொடுமைகளை அழிக்கும் மேதாலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அறிவாற்றலான மேதைத்தனத்தை அளி. நிறைவான செல்வத்தைக் கொடு. சகல கலைஞானங்களையும் என் தேவையறிந்து கொடு.
கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வதேவ ஸ்வரூபிணீI
அஸ்வாம்ஸ்ச கோகுலம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
அனைத்து தேவர்களின் அம்சங்களையும் கொண்ட கஜலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.குதிரைகளும்,பசுக்களும் நிரம்பிய கோகுலத்தைக்கொடு.எனது எல்லா நல்ல எண்ணங்களையும் நிறைவேற்று.
வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வகார்ய ஜயப்ரதேI
வீர்யம்தேஹி பலம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமேII
எல்லாச் செயல்களிலும் வெற்றியைத் தரும் வீரலட்சுமியே உனக்கு வணக்கம்.தைரியத்தையும் பலத்தையும் கொடு.எல்லா நல்விருப்பங்களும் ஈடேற அருள்புரி.
ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணீI
ஜயம்தேஹி சுபம்தேஹி சர்வ காமாம்ஸ்ச தேஹிமேII
பராசக்தி வடிவினளான ஜயலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம். அனைத்திலும் எனக்கு வெற்றியைக் கொடு. சர்வமங்களங்களையும் அளித்திடு. சகல வேண்டுதல்களையும் ஈடேற்றிடு.
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்தினிI
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
உனது கருணை மனதால் சௌமாங்கல்யத்தை அளித்திடும் பாக்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்பாக்கியத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. சகல நலமும் வளமும் அளித்திடு.
கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதேI
கீர்த்தம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் கீர்த்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். மங்காத புகழினைக் கொடு. நிறைவான செல்வத்தைக் கொடு. உன் விருப்பப்படி எனக்கு எல்லா நன்மைகளையும் அளித்திடு.
ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வரோக நிவாரிணிI
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII
எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் ஆரோக்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. நான் விரும்பும் வரமாக,அனைத்தையும் அனுபவிக்கும்படியான ஆயுளும் ஆரோக்யமும் எனக்குக் கொடு.
சித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வசித்தி ப்ரதாயினீI
சித்திம்தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமேII
சர்வ சித்திகளையும் அளிக்கவல்ல சித்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். என் எல்லாச் செயல்களிலும் சித்தியினை அளித்திடு. குன்றாத வளமையைக் கொடு.எனக்கு விருப்பமானதும் நன்மை பயப்பதுமான பலன்களையும் கொடு.
சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வாலங்கார சோபிதேI
ரூபம் தேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமேII
அழகு மிளிரும் சௌந்தர்யலட்சுமியே எழிலான ஆபரணங்களை அணிந்து மேலும் ஜொலிக்கும் உனக்கு வணக்கம். அழகான உருவத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு.என்மனம் போல் யாவற்றையும் குறைவின்றிக் கொடு.
சாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து புக்திமுக்தி ப்ரதாயினீI
மோக்ஷதேஹி ச்ரியம் தேஹி சர்வகாமாம்ஸ் ச தேஹிமேII
புத்தியும் முக்தியும் அளிக்கக்கூடிய சாம்ராஜ்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். முக்தியைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனக்குத் தேவையான புத்தியையும், சகல விருப்பங்களையும் அளித்திடு.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்கலப்ரதேI
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதாII
மாங்கல்யத்தின் மூலம் மங்களத்தை வழங்கும் மங்களையே, மங்களாம்பிகையே எக்காலமும் மங்களத்தை அளிக்கும் மாங்கல்ய வளத்தை எனக்குக் கொடு.
சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகேI
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதேII
அனைத்து மங்களங்களையும் மாங்கல்யத்தையும், ஆரோக்யம், ஆயுள் உள்ளிட்ட எல்லா நலன்களையும்,எல்லா செல்வங்களையும் அளிக்கக்கூடியவளே. த்ரயம்பகியே, நாராயணியே உன்னைச் சரணடைகிறேன்.
சுபம்பவது கல்யாணி ஆயுராரோக்யம் சம்பதாம்I
மமசத்ரு வியாதி விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதேII
கல்யாணியே சுபம் கிடைக்க அருள்க. ஆயுள், ஆரோக்யம், செல்வமும் அருள்வாயாக. என் எதிரிகளையும் பிணிகளையும் நசிக்கச் செய்திடுக. தீபஜோதியான திருவிளக்கே, தீபலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !