மாறுபட்ட வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் வெளியீட்டு தினம் அறிவிப்பு

மாறுபட்ட வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் வெளியீட்டு தினம் அறிவிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார், லாபம் என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
லாபம் திரைப்படத்தை மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் தின விருந்தாக மே 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.