குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள். (2021.11.20 முதல் 2022.04.13வரை)

மேஷம்
அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
வெகுளியாகவும், மனம் திறந்து பேசக்கூடிய நற்குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியுமான குரு பகவான் திருக்கணித வரும் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எல்லா வகையிலும் லாபமும் வெற்றியும் உண்டாகும். உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த வம்பு வழக்குகள் மறைந்து தீர்வு உங்களுக்கு சாதகமாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் நீங்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வேலைபளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளி காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நேரத்திற்கு உணவு உண்பது உத்தமம். உங்களது மனைவியின் ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
தேகஆரோக்கியம்
ஜென்ம ராசிக்கு 11-ல் குரு பகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால், உங்களின் தேக ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சினைகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த நோய்கள் கூட உங்களை விட்டு படிப்படியாக விலகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும்.
குடும்பம் பொருளாதாரம்
குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிறப்பான மணவாழ்க்கையும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். சிலர் வீடு, மனை வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பார்கள். இதுவரை இருந்த பொருளாதாரத் தடை விலகும்.
கொடுக்கல்- வாங்கல்
குருவின் சாதகமான சஞ்சாரத்தால் பண விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை கையாளும் போது சற்று கவனமுடன் இருந்தால் லாபத்தை காண முடியும். இதுவரை விரோதிகளாக இருந்தவர்களும் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழில் வியாபாரிகளுக்கு
சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் குரு தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் இதுவரை சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் மறைந்து, எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கப்பெற்று மனநிறைவு உண்டாகும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மேலும் உற்சாகம் பிறக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் கனவுகள் நினைவாகும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் அழகான புத்திர பாக்கியத்தை பெறுவர். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். அனைவரும் உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவுடன் செயல்படுவார்கள். உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறக் கூடிய காலம் என்றே சொல்லலாம். உங்களின் பேச்சிற்கு சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். மதிப்பு மிகுந்த பதவிகள் உங்களை தேடி வரும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய பல யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள் பெருகுவதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்குவீர்கள்.
படிப்பு
கல்வியில் திறம்படச் செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். உங்களால் நீங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் பெருமை ஏற்படும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தேடி வரும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் யோகம் அமையும். பெற்றோரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து நிம்மதியான நிலையினை அடைவார்கள்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, பலருக்கு நன்மைகள் செய்யும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அனைவரின் பாராட்டுதல்களையும் தடையின்றி பெறுவீர்கள். நினைத்ததெல்லாம் நிறைவேறும். சனி 10-ல் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் அபிவிருத்திகள் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பலவகையில் ஏற்றங்களை அடைவீர்கள். உணவு விஷயத்தில் நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களும் தடபுடலாக கைகூடும். சிலர் நினைத்தவரையே கரம் பிடிப்பர். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை அதிகப்படியாக இருந்தாலும் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும் என்றாலும் வேலையாட்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 11-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் உங்கள் ராசிக்கு ராகு 2-ல் கேது 8-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9, நிறம் - ஆழ்சிவப்பு கிழமை - செவ்வாய்
கல் - பவளம் திசை - தெற்கு தெய்வம் - முருகன்
ரிஷபம்
கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
அனைவரிடமும் இனிமையாகப் பழகும் சுபாவமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோகத்தில் சற்று இடையூறுகளை ஏற்படுத்தும் என்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனி 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும்.
பொதுவாக 10-ல் குரு நின்றால் பதவியும் பாழ் என்பது பழமொழி. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பிறர் வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டி வரும் என்றாலும் அதற்கேற்ற சன்மானம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் வலமான பலனை அடைய முடியும். குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தேவைக்கு ஏற்ற வகையில் பண வரவுகள், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் யோகம், அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம், எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகமும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஒரு சில உதவிகள் கிடைத்து உங்களது வாழ்க்கை தரம் உயரும்.
உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது, முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் சற்று விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும்.
தேகஆரோக்கியம்
சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொண்டால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும் என்றாலும் எதிலும் திறன்பட செயல்படும் வாய்ப்பு ஏற்படும்.
குடும்பம்பொருளாதாரம்
ஜென்ம ராசியில் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. முன்கோபத்தைக் குறைப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சி மற்றும் அசையா சொத்து பராமரிப்பு செலவு காரணமாக உங்கள் சேமிப்பு குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
தனகாரகன் குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலை நிலவும். பண விஷயத்தில் பிறருக்கு ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதையும் சமாளித்து வலமான பலனை பெறுவீர்கள்.
தொழில் வியாபாரிகளுக்கு
குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி சாதகமாக சஞ்சரிப்பதால் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடையும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் கடினமான நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் தாமதம் ஆகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் முடிந்த வரை பணியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் சுபகாரியத் தடைகள் ஏற்பட்டாலும் குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
உங்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களில் தாமத நிலை ஏற்படும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய நேரிடும். மக்களின் ஆதரவும் பெரிய இடத்து நட்பும் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபமும் குறைவாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும். பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற கடினமாக முயற்சிக்க வேண்டி இருக்கும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
படிப்பு
கல்வியில் சற்று மந்தமான நிலை இருக்கும். ஞாபகமறதி ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது. பயணங்களின் போது நிதானமுடனிருப்பதும், பேச்சில் சற்று கவனமுடனிருப்பதும் நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது முன்கோபத்தை குறைப்பது நல்லது. சனி 9-ல் இருப்பதால் பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். அசையும் அசையா சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து சென்றால் லாபங்களை அடைய முடியும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் தருவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பலவகையில் நற்பலன்களைப் பெற முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப் பளு இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் நல்ல செய்தி கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நற்பலனை பெற முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் உறவினர்களின் ஆதரவையும் பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுத்தாமல், இருப்பதை வைத்தே பணத்தை புரட்டுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்துவிட முடியும். கூட்டாளிகளினாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சக ஊழியார்களை அனுசரித்து நடந்து கொண்டால் கடினமான வேலையை கூட சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் எடுக்க முடியும். வேலை தேடுபவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10--ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.
ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - வெண்மை, நீலம், கிழமை - வெள்ளி, சனி
கல் - வைரம் திசை - தென்கிழக்கு, தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி
மிதுனம்
மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சிரிக்கச் சிரிக்க பேசும் சுபாவமும் சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் 8-ல் சஞ்சரித்த குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். அதுமட்டுமின்றி சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். தாராள தன வரவு ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி சஞ்சரித்து தற்போது அஷ்டமசனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அதிக உழைப்பால் உடல் அசதி, சோர்வு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தனது விஷேச பார்வையாக ஜென்ம ராசிக்கும், 3, 5-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இதுநாள் வரை குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு, புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.
செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்களின் சுய முயற்சியால் படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டு மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து லாபங்களை அடைவீர்கள். வேலையாட்களால் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது. கூட்டாளிகளின் உதவியால் தொழில் ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். மற்றவர்கள் வேலையை நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் எதையும் சிறப்பாக செய்யும் பலம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
தேகஆரோக்கியம்
அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் அடிக்கடி ஏதாவது சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதால் உடனே சரியாகி விடும். அதிக அலைச்சல் தேவையற்ற பயணங்களால் உடல் அசதி ஏற்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும்.
குடும்பம் பொருளாதாரம்
குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் தடபுடலாக நடைபெறும். சிலருக்கு மனதிற்கு பிடித்தவரை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அசையும் அசையா சொத்துகளின் சேர்க்கையும் அதிகரிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் லாபகரமான பலனை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
செய்யும் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் விலகும். மறைமுக எதிரிகளை ஒட ஒட விரட்டக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்திகளைப் பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் இருப்பது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டு மூலம் அனுகூலமான நற்செய்தி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கப் பெற்று பொருளாதார நிலை உயர்வடையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை தோன்றும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிட்டும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். அசையும் அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது குடும்பத்திற்கு நன்மை அளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
எதிர்பார்த்த பதவிகளை பெறக்கூடிய காலமாக இருக்கும். மேடைப் பேச்சுக்களில் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை காப்பீடு செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற முடியும்.
படிப்பு
மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. மந்த நிலை, ஞாபக மறதி போன்றவற்றால் பரீட்சை நேரத்தில் கோட்டை விட்டுவிடுவீர்கள். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்த்து மிகுந்த கவனமுடன் கல்வியில் செயல்பட்டால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிடைக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் உணடாவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல வகையான பொதுநலக் காரியங்களுக்கான செலவுகள் செய்வீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றிப் பெற முடியும். கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அஷ்டமச்சனி நடப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலர் அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் உடன் இருப்பவர்களின் ஆதரவினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் உங்களை தேடி வரும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்தால் நற்பலன்கள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து சென்றால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெரி மனிதரின் ஆதரவு கிடைத்து உங்களுக்கு உள்ள கஷ்டங்கள் மறையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெற்று மனமகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 9-ல் சஞ்சரித்தாலும் அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, முதியோருக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8, நிறம் - பச்சை, வெள்ளை, கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம் திசை - வடக்கு தெய்வம் - விஷ்ணு
சிம்மம்
மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இராஜ தந்திரமும் சிறந்த வாக்குவன்மையும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். அதுமட்டுமின்றி ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறைவதுடன் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும்.
உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு ஜென்ம ராசி, 3, 11-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும் யோகம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் அமைப்பு, உங்களது நீண்ட கனவுகள் நிறைவேறி மன மகிழ்ச்சி அடையும் யோகம், சகல விதத்திலும் லாபகரமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறைந்து லாபங்கள் பெருகும். தொழிலை அபிவித்தி செய்யும் யோகம் ஏற்படும். உங்களது கடந்த கால உழைப்பிற்கான பலனை தற்போது முழுமையாக அடைவீர்கள். எதிர்பார்த்த லாபம் அடைந்து அதன் மூலம் நீங்கள் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் யாவும் தடையின்றிக் கிட்டும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் எந்த விதத்திலும் பாதிப்புகள் உண்டாகாது.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பு ஏற்படுவதுடன் உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் விலகுவதுடன் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் விலகி மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
குடும்பம் பொருளாதாரம்
கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி பலமும் வலிமையும் கூடும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றிக் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் அழகான புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை வாங்கும் யோகமும் பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
குரு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிறப்பான லாபம் கிடைக்கும். சேமிப்பு பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து, புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அபிவிருத்தியை பெருக்க உதவுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிடைக்கும். வெவ்வேறு இடங்களில் கிளைகளை நிறுவும் நோக்கங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான நிலைகளும் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை தடையின்றிப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு எதிர்பார்த்த இடத்தில் கிட்டும். வேலைப்பளு குறையும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலர் அழகான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
மாண்புமிகு பதவிகள் தேடிவரக் கூடிய காலமாக இருக்கும். வருவாய் அதிகரிப்பதால் கட்சிப் பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாக அமையும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை, வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளுக்கு இடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.
படிப்பு
கல்வியில் பல சாதனைகளைச் செய்து பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் ஆதரவுகள் தேடி வரும். பல பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். நல்ல நட்புகளால் கடந்த கால பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். கல்விக்காக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சாரம் செய்வதும், சனி உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் பல வகையில் மேன்மைகளை அடைவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் நோக்கங்கள் நிறைவேறும். புத்திர வழியில் மனநிறைவு தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சமுதாயத்தில் பல நற்காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய வாய்ப்பு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரேக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் எளிதில் லாபங்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கேது 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் சேருவதுடன் சேமிக்கவும் முடியும். கடனில்லாத கண்ணியமான வாழ்க்கை அமையும். புத்திர வழியில் பூரிப்பும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். கேது 4-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - வெள்ளை, சிவப்பு கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம் திசை -கிழக்கு தெய்வம் - சிவன்
கன்னி
உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
பிறரது மனம் புண்படாத வகையில் அனைவரிடமும் அன்பாய்ப் பழகும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரித்த ஆண்டு கோளாளான குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பெருளாதார ரீதியாக அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விதத்திலும் நெருக்கடிகள் ஏற்படாத அளவிற்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உடன் இருப்பவர்களே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் மற்றவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மன நிம்மதியான நிலை இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபார ரீதியாக மறைமுக எதிர்ப்புகள், சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் உங்களின் தனி திறமையால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறிது தேக்க நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காண முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தினால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருந்து படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள் என்றாலும் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழி சொல்களை எதிர் கொள்ள நேரிடும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் மூலம் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.
தேகஆரோக்கியம்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை சந்தித்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பயணங்களால் உடல் அசதி இருந்தாலும் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை தரம் உயரும்
குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் சிறிது மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பாராத பணவரவுகள் மூலம் பொருளாதார நிலை உயர்வடையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும். தேவையற்ற மறைமுக எதிர்ப்பால் வீண் வம்பு ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
குரு பகவான் 6-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகளையும், போட்டி மற்றும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டாலும் சனி 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் திறமையுடன் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடைந்து பொருட் தேக்கம் இல்லாமல் லாபத்தை அடைவீர்கள். எதிலும் சற்று நிதானித்துச் செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றத்தை எளிதில் அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்படும். வீண் பழிச்சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளை உண்டாகும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு வெற்றி கொள்ளக் கூடிய ஆற்றல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலைகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சிறுசிறு இடையூறுகள் தோன்றி மறையும். சேமிப்புகள் சற்று குறையும்.
அரசியல்வாதிகளுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு குறையும் என்றாலும் எதையும் சமாளித்து பெயரையும் புகழையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உடன் இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண் வம்பு, தேவையற்ற எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும்.
படிப்பு
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படக் கூடிய காலம் என்றே சொல்லலாம். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்த்தால் ஒரளவுக்கு கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கேது 3-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். கேது 3-ல், சனி 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகளில் அமரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் சி-றுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் சனி 5-ல், கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய வலிமையைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை பாதிப்படையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். ராகு 9-ல் சஞ்ரிப்பதால் பயணங்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது மூலம் உங்களுக்கு உள்ள வேலைபளு குறையும்.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள், புத்தகங்கள் மற்றும் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது, ஏழை எளிய பிராமணர்களுக்கு முடிந்த தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8 நிறம் - பச்சை, நீலம் கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை திசை - வடக்கு தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு
துலாம்
சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நீதி நேர்மையை நிலைநாட்ட வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் துலா ராசியில் பிறந்த நேயர்களே! இது நாள் வரை 4-ல் சஞ்சரித்த குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதரா நிலை சிறப்பாக இருக்கும். தற்போது உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த பூமி, வண்டி, வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை விலகி லாபகரமான பலன் ஏற்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் வாய்ப்பு, வெளியூர் தொடர்புகளால் அனுகூலம், எதிர்பாராத பொருளாதார மேன்மைகள் ஏற்படும்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதாலும் உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
செய்யும் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
தேகஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைபளு, தேவையற்ற அலைச்சல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். பெரியவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் மனதில் நிம்மதி உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவு உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் உங்களுக்கு அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினைகளும் இன்றி வசூலாவதால் பணம் புரளும். பெரிய மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத் தொடர்புகளும் அனுகூலப் பலன்களை உண்டாக்கும். சேமிப்புகள் பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை கலந்து அலோசித்து செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமராக இருக்கும் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உத்தியோகத்தில் வரவேண்டிய ஊதிய உயர்வுகளும் பதவி உயர்வுகளும் தடையின்றி வந்து சேரும். வேலைபளு இருந்தாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் கவனமாக இருந்தால் கடினமான வேலையை கூட சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைப்பதால் குடும்பத்தோடு சேர முடியும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் என்றாலும் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு அழகான புத்திரபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
சமுதாயத்தில் உங்களின் பெயர் புகழ் உயரும். மக்களுக்குச் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பீர்கள். மக்களின் ஆதரவால் எல்லா வகையிலும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் உடன் இருப்பவர்களிடம் சற்று கவனமாக செயல்படுவதும் நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளால் வீண் செலவுகள், நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும்.
படிப்பு
கல்வியில் திறம்படச் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நல்ல நட்புகளால் பலவகையில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூரில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வதால் மேன்மையான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பொருளாதார மேன்மையும் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடங்களுக்கு இடமாற்றங்கள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குருபகவான் சர்ப்ப கிரகமான ராகு நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கேது 2-ல், சனி 4-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மேலதிகாரிகளிடம் பேசும் போது சற்று பொறுமையுடன் பேசுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். எடுக்கும் பணிகளை திறம்படக் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். சனி 4-ல், ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கவனமுடன் இருப்பது நல்லது. கேது 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனைத்து வகையிலும் அனுகூலங்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடைந்து விட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் வரவேண்டிய பணத்தொகைகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற அலைச்சலால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சர்பகிரகங்களான கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
கடினமான வேலைகளையும், எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) ஜென்ம ராசிக்கு 4---ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக சிறுது நெருக்கடி இருந்தாலும் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி தற்போது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலனை அடையும் வாய்ப்பு. நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடையும் நிலை ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் அமைப்பு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் திறன், எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலை விரிவு படுத்தும் நோக்கம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத அளவிற்கு உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயரதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நல்ல வாய்ப்புகள் கௌரவ பதவிகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும், சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டால் உங்களது பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் உதவிகளை பெற முடியும்.
தேகஆரோக்கியம்
உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, அதிக அலைச்சல் இருந்தாலும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் திறன்பட செயல்பட முடியும். எளிதில் உணர்ச்சி வசப்படும் நிலை, அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பயணங்களில் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைத்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
குடும்பம் பொருளாதாரம்
சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் சற்று பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மூலம் குடும்பத்தில் உண்டாகக் கூடிய ஒற்றமை குறைவை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகளிடையே சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல், டென்ஷன், உடல் அசதி ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து லாபம் காண்பீர்கள். குரு 4-ல் சஞ்சரிப்பது சற்று சோதனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் போட்டி ஏற்பட்டாலும் அதனை சிறப்பாக கையாளும் யோகம் ஏற்படும், கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்களிடம் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம்
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகளில் தேக்க நிலை நிலவினாலும் தக்க நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவையும் பெயர், புகழையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமான நேரமிது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலை, எதிர்பார்க்கும் பதவிகளை அடையும் யோகம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால் உங்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருக்கும். சிறிது லாபத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கால் நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும்.
படிப்பு
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையக்கூடிய காலமிது. ஞாபக மறதி, உடல் நலக் குறைவு போன்றவை உண்டாகும் என்றாலும் நல்ல மதிப்பெண்களை பெறும் யோகம் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது, கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர்களிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் ராசியாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஒரளவுக்கு முன்னேற்றப் பலன்களைப் பெறுவீர்கள். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும் என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் சுப செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் உடல் அசதி ஏற்படும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்யாமல் பணி கவனத்துடன் இருந்தால் மட்டுமே பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சர்ப்ப கிரகமான ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அலைச்சல், டென்ஷன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் ஒற்றுமையான நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் சுக வாழ்விற்கு இடையூறு ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். சனி 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்கள் ராசிக்கு 4-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் -ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம், திசை - தெற்கு தெய்வம் - முருகன்
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
நல்லவர்களிடம் மட்டும் சகஜமாகப் பழகக்கூடிய பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடை தாமதங்கள் உண்டாகும். பணவரவில் தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு தனது விஷேச பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் திருமணம் சார்த்த சுப முயற்சிகள் வெற்றி பெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சிறப்பாக எதிர் கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.
ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாதச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையுடன் இருந்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். சர்ப் கிரகமாக ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் திறன் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். தேவையற்ற அலைச்சல் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் நிதானமாக செயல்பட்டால் பொருட் தேக்கமின்றி லாபங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். உழைப்பிற்கான ஊதியங்களை பெற இடையூறுகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணமின்மை, உடல் சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாவதால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.
குடும்பம் பொருளாதாரம்
கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருப்பதால் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும். உற்றார் உறவனர்களிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவும், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும். எதிர்பாராத உதவிகளால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கொடுக்கல்- வாங்கல்
தனகாரகன் குருபகவான் ஜென்மராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைகளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.
தொழில்,வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் தாமதப்படும். சிலர் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சற்று சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் முடிந்த வரை அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உங்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு
தங்கள் பெயர், புகழ், பதவிகளை காப்பாற்றிக்கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பெரிய மனிதரின் உதவியால் கஷ்டங்கள் விலகி நல்ல வாய்பை பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு
வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காமல் பணியில் நீங்கள் நேரடியாக சென்று செயல்பட வேண்டி இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நீர்மட்டம் குறைவு. அதிக காற்று, மண்வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். ஒரு சில உதவிகளால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பங்காளிகளிடம் சற்று கவனமாக பேசுவது நல்லது.
படிப்பு
கல்வியில் மிகவும் கவனம் செலுத்தினால் மட்டுமே தகுந்த மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளாலும், பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் சற்று தாமதப்படும். பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, அதிக அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் ஒரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது, முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காகவும், பொது நலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தற்போது கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் ராகு நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சாரம் செய்தாலும் இக்காலங்களில் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், கை கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் ஒரளவுக்கு அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு முன்னேற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் யாவும் ஓரளவுக்கு குறையும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.
ஏழரை சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - மஞ்சள், பச்சை கிழமை - வியாழன், திங்கள்
கல் - புஷ்ப ராகம் திசை - வடகிழக்கு தெய்வம் - தட்சிணா மூர்த்தி
மகரம்
உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
ஏற்றுக் கொண்ட லட்சியங்களை நிறைவேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் உங்கள் தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு, உடல் அசதி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம் என்றாலும் உங்கள் ராசியில் இது நாள் வரை சஞ்சரித்த குரு திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்கள் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 6, 8, 10-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு உள்ள உடம்பு பாதிப்புகள் கூட படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு, கடந்த கால வம்பு, வழக்குகள் விலகி நிம்மதியான நிலை, எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடைகள் விலகி கைகூடும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மன மகிழ்ச்சி தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் யாவும் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்த வந்தவர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியத்தில் மேன்மைகள் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதாரம்
குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்குவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் வம்பு வழக்குகளும் குறையும். சேமிப்புகளும் பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
செய்யும் தொழில் வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். பொருளாதாரம் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு திருமண சுப காரியங்கள் நடைபெறும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துகள் சேரும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழ், பெருமை யாவும் உயரக் கூடிய காலமாகும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் பேராதரவினையும் தடையின்றி பெற முடியும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசின் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். சேமிப்பும் பெருகும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். கூலி ஆட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களின் மன அழத்தம் குறைந்து நிம்மதியுடன் செயல்பட முடியும்.
படிப்பு
இதுவரை கல்வியில் இருந்து வந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றிப் பெற முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மனதிற்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் மன உறுதியுடன் செயல்பட்டால் நற்பெயர் எடுக்க முடியும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் நற்பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்த கால வேலைபளு சற்று குறையும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் சிறப்பான நிலை ஏற்படும். கடந்த கால தடைகள் விலகி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து லாபகரமான பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நற்பலனைத் தரும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சுபிட்சமான நிலை ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிப்புகள் பெருகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் நலத்தில் சிறிது பாதிப்பு தேவையற்ற வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் குறைந்து உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. இருக்கும் இடத்தில் கௌரவமான பதவிகள் உங்களை தேடி வரும்.
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது. அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - நீலம், பச்சை கிழமை - சனி, புதன்
கல் - நீலக்கல் திசை - மேற்கு தெய்வம் - விநாயகர்
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
அதிக தன்னம்பிக்கையும், சமயத்திற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வாழும் தன்மையும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் ராசியாதிபதி குரு பகவான் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என கூற முடியாது, பொருளாதார ரீதியாக சிறிது ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் என்றாலும் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும்.
ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 4, 6, 8-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும், அசையும் அசையா சொத்து வழியில் சாதகமான பலன்கள் கிட்டும். வீடு வாகனங்களை பழுது பார்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் விலகி நிம்மதியாக நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
தொழில் வியாபாரத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான பலனை அடைய முடியும். உங்களுக்கு இருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறன் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
தேகஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் அனைவரின் ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மன அமைதி ஏற்படும்.
குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் உள்ள கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி அனுகூலங்களை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது சிறப்பு. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள் ஏற்பட்டாலும் தாமதங்களுக்கு பிறகு வசூலித்து விட முடியும். வம்பு வழக்குகளில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும் என்றாலும் லாபகரமான பலனை அடைய முடியும். எதிர்பார்க்கும் வாய்ப்புகளை அடைவதில் சிறிது இடையூறுகள் உண்டானாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ஏற்படும் போட்டி பொறாமைகளை சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராமல் உண்டாகக் கூடிய இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களில் கூட குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு
எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமான பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக செய்யும் செலவுகள் வரவுக்கு மீறியதாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைவீர்கள். தலைவர்கள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாக அமையும். போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை காரணமாக வீண் செலவுகள் ஏற்படும். புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் சுப செலவுகள் ஏற்படும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும்.
படிப்பு
மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். நன்கு படித்தாலும் தேர்வின் போது ஞாபக மறதி ஏற்படும். எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்க்கும் உயர் படிப்புக்கான வாய்ப்புகளை அடைய முடியும்.
குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாய் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் திறமையுடன் கையாண்டு அனுகூலப்பலனை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று தேக்க நிலை இருந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை விரிவு படுத்த முடியும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு எப்பொழுதும் போல சிறப்பாக இருக்கும்.
குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை
குரு பகவான் சர்ப்ப கிரகமான ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் இருந்தாலும் அவர்களால் அனுகூலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையளிப்பதாக அமையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் சக நண்பர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை
குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். எது எப்படி இருந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் பல்வேறு முன்னேற்றங்களை அடைய வாய்ப்பு உண்டு. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். போட்டி பொறாமைகளை ஒட ஒட விரட்டியடித்து எதிலும் ஜொலிப்பீர்கள். புதிய கிளைகளை நிறுவக்கூடிய அளவிற்கு அபிவிருத்திகள் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று எதிர்பார்த்த வருமானத்தை பெறுவார்கள்.
பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, கொண்டை கடலை மாலை அணிவித்து, முல்லை மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 கிழமை -வியாழன், ஞாயிறு திசை - வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம் நிறம் - மஞ்சள், சிவப்பு தெய்வம் - தட்சிணாமூர்த்தி.