க்ரிஞ்ச் என்றால் என்ன?

திரைப்படத்தை அல்லது திரைப்படத்தில் வரும் காட்சிகளை "கிரிஞ்ச்" வகை என சொல்வதன் காரணம் என்ன??

க்ரிஞ்ச் என்றால் என்ன?

திரைப்படத்தை அல்லது திரைப்படத்தில் வரும் காட்சிகளை "கிரிஞ்ச்" வகை என சொல்வதன் காரணம் என்ன??

ஒரு திரைப்படம் அல்லது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பவர்களை மிகவும்

  • சங்கட படுத்தினால்
  • "கடுப்பு" ஏற்றினால்
  • முகம் சுளிக்க வைத்தால்

அதை "கிரிஞ்ச்" வகை என்று சொல்வார்கள்.

.

.

அப்படியாபட்ட காட்சிகள் அல்லது திரைப்படங்கள் பற்றி சொல்ல முடியுமா?

.

இப்பொழுது வரும் பெரும்பாலான தமிழ் படங்கள் "கிரிஞ்ச்" வகையை சார்ந்து உள்ளன.

நான் "கிரிஞ்ச்" வகை என கருதும் சில திரைப்படங்கள்/காட்சிகள்:

.

.

"அடல்ட் காமெடி" என்ற பெயரில் தேவையில்லாத ஆபாச காட்சிகளை திணிக்கும் படங்கள்.

அடெய்! உங்க அம்மா/அக்கா/தங்கட்சி கூட எப்படிடா பார்ப்பீங்க..?

.

"காமெடி" என்ற பெயரில் மொக்கை போடுவது.

இந்த கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் நம்ம "பரோட்டா சூரி"

.

"ஓவர் ஆக்டிங்" செய்வது.

இதில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் அடிக்கடி ஓவர் ஆக்டிங் செய்வார்கள். "ஓவர் ஆக்டிங்"கில் சுருதி ஹாசன் அவர்களுக்கு முதல் இடம் வழங்கலாம்.

.

ஜவ்வு போல் படத்தை இழுப்பது.

ஒரு நல்ல திரைப்படம் பொதுவாக அதிக நேரம் ஓடாது. அப்படியே ஓடினாலும், அதில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால், தமிழ் படங்கள் அவ்வாறு எடுக்கப்படவில்லை. குறிப்பாக காதல் மற்றும் ரொமான்ஸ் படங்கள்.

.

"லாஜிக்" இல்லாத அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்கள்.

சண்டைக் காட்சிகள் வைக்கலாம். அதுக்குனு ஒரே அடியில் எதிரியை பத்து கிலோமீட்டர் பறக்க வைப்பது கனவில் மட்டுமே நடக்கும். இது போன்ற காட்சிகளை சூர்யா மற்றும் விஷால் படங்களில் அதிகம் பார்க்கலாம்.

"ஏர் இந்தியா"க்கே சவால் விடுவார் நம்ம விஷால் :)

.

அதிகமான அளவில் கருத்துகளை கூறுவது.

படத்தில் கருத்து இருக்கலாம். ஆனால் கருத்தில் படம் இருக்கக்கூடாது.

நமக்கு யாராச்சும் பத்து நிமிடம் "அட்வைஸ்" பண்ணலே பிடிக்காது. இதில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து "அட்வைஸ்" பண்ணால் படத்தை எப்படி பார்ப்பது ????.

.

.

.

.

.

லிஸ்ட் பெருசா பொகுவதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன் ????.


மேலே சொன்ன விஷயங்கள் இல்லாமல் படம் எடுப்பது சாத்தியமா?? என்று கேட்டால்… நிச்சயம் சாத்தியம் என்பேன். இதற்கு மலையாள படங்கள் சிறந்த உதாரணம்.

இதனால் தான் மலையாள படங்கள் மிக தரமாக மற்றும் சிறப்பாக இருக்கும்.

மேல் சொன்ன அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள். நான் என் கருத்துகளை நகைச்சுவையாக கூற முயற்சி செய்தேன். யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல..! 

நன்றி