பிக் பாஸ் தமிழ் OTT நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
Bigg Boss Tamil OTT Contestant List :

சின்னத்திரையில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழுக்கு தான் இந்த நிகழ்ச்சி புதுசு. மற்ற மொழிகளில் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி OTT-ல் ஒளிபரப்பானது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி OTT-ல் ஒளிபரப்பாக உள்ளது. இதனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிலையில் இந்த போட்டியில் ஜூலி, அனிதா சம்பத் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பது உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.