இணையத்தை கலக்கும் அருண் விஜயின் புதிய பட டைட்டில்

இணையத்தை கலக்கும் அருண் விஜயின் புதிய பட டைட்டில்

அருண் விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'குற்றம் 23'. இந்தப் படத்தை இயக்கியவர் அறிவழகன்.

 

அருண் விஜய்யின் 31 ஆவது படமான இந்தப் படத்திற்கு 'AV31' என்று தற்காலிகமாக தலைப்பு வைத்திருந்தனர். இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

AV 31 படத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமையை 11:11 புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் பார்டர் திரைப்படம் ஒரு ஸ்பை த்ரில்லர் படமாக இருக்கும் என்றும், 90களில் வெளியான அர்ஜூன் மற்றும் விஜயகாந்த் படங்களை போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் அருண் விஜய், பாதுகாப்புத்துறையின் உளவாளியாக நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் உளவாளியா அல்லது தீவிரவாதியா என்ற தகவல் வெளியாகவில்லை.

புதுமுகமான ஸ்டெபி பட்டேல் அருண் விஜய்யின் காதலியாக நடித்துள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.


pictures--->>>>.  Regina Cassandra      

மேலும் செய்திகள்

- Srilanka News

- India News

- Technology News

-Sports News

- Cinema News - Trailers - Image Gallery - Song Lyrics