Share Market Investment- பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி..?

இந்த பகுதியில் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் பற்றிய தொகுக்கப்பட்ட கட்டுரைகள் பகுதி பகுதியாக பதிவிடப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் கொழும்பு பங்குச் சந்தை பற்றிய சிறு அறிமுகம், கொழும்பு பங்குசந்தை கடந்த காலங்களில் முன்னெடுத்த செயற்பாடுகளை விபரமாக தொகுக்கப்பட்டுள்ளது.

1. கொழும்பு பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

கொழும்பு பங்குச் சந்தை ஓர் அறிமுகம்
Colombo Stock Exchange Introduction

அறிமுகம்
இலங்கையிலுள்ள ஒரே ஒரு பங்குச் சந்தையினை கொழும்புபங்குபரிவர்த்தனை இயக்குவதுடன் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக்கூடிய ஓர் வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது.

கொழும்புபங்குப் பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஓர் கம்பனியாகும்.

இந் நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால்  உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன்  இது 15 அங்கத்தர்வர்களையும்; 16 வியாபாரஅங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ஓர்பரஸ்பரமுள்ள பரிமாற்றகமாகும்.

அனைத்து அங்கத்தவர்கள் மற்றும் மற்றும் வியாபார அங்கத்தவர்கள் பங்குத் தரகர்களாகச் செயற்படுவதற்கு  இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளார்கள்.


இவ்வாறு இலங்கையில் இயங்கிவரும் கொழும்பு புங்கு பரிவர்த்தனை நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அவை தொடர்பில்  2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலானகாலப்பகுதியில் இடம்பெற்றுள்ளமாற்றங்கள் பற்றியதொகுப்பினை இங்குநாம் கண்டறியமுடியும். 

  • GICS  கட்டமைப்பில் தற்போது 289 நிறுவனங்கள் காணப்படுவதுடன் தற்போது 11 துறைகள், 24 தொழில் குழுக்கள்,மற்றும் 69 தொழில் குழுக்களும்  காணப்படுகின்றது. இது நான்கு வகையானபகுப்பாய்வுகளைவழங்குகின்றது.
  • துறைகள்   

  • Consumer Discretionary
  • Consumer Staples
  • Energy
  • Financials
  • Health care
  • Industrials
  • Information technology
  • Materials
  • Real Estate
  • Tele communication Service
  • Utilities

  • 2015
    • தெற்காசியநாடுகளுக்கானபரிமாற்றங்கள் அமையத்தின்         தலைவராக கொழும்புபங்குபரிவர்த்தனை பொறுப்பேற்றுக்கொண்டது.
    • ஐக்கியநாடுகளின் பங்குச் சந்தையில் இணைந்துகொண்டது.
    • பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வகைப்பாட்டிற்கானஉலகலாவியதொழில் வகைப்பாட்டுதரத்ததைஏற்றுக் கொண்டது.
    • மாலைதீவின் பங்குச் சந்தையுடன் புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொண்டமை.
    CDS பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவையினை முன்னெடுக்கஆரம்பித்தமை.
    • புதியமனிதவள முகாமைத் தகவல் தொழில் நுட்பமுறைமை(HRIS அறிமுகப்படுத்தப்பட்டமை.
    • ஊழியர்களுக்கான இணையபாதுகாப்பு வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளமை.
  • 2016
    • புதியதரகர்பின் அலுவலத்தினையும் முறையான ஒழுங்குபடுத்தல் முகாமைக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளமை.
    • அம்பலாந்தோட்டை எனும் இடத்தில்  புதியகிளைகள் உருவாக்கியமை.
    • பட்டியல்படத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை
  • Colombo Stock Exchange wins Global HR Excellence Award for Innovation in training and development.
  • .
    • மத்தியவைப்பகமுறைமையினால் E-Connect ஒன்லைன் மூலமானகணக்குமுகாமைத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • புதியகண்காணிப்புஅமைப்புஅறிமுகப்படுத்தப்பட்டது.

  • 2017
    • உறுப்பினர்களின்களின் நிறுவனங்களுக்குபோதுமானஅவசரஆபத்து இடர் அடிப்படை மூலதனத் தேவைவசதிகளைஏற்படுத்தியுள்ளமை.

  • • இவ்வாண்டில் பின்வரும் 03 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
     
  • Korea Exchange
  • Sydney Exchange
  • Central Depository (India)
  •  
    • பங்கு பரிவர்த்தனை கட்டணங்களுக்கான Step-up fee முறைமைஅறிமுகப்படுத்தப்பட்டது.
    • வாக்குரிமையல்லாத பங்குகளையும் சந்தை மூலதன கணிப்பிட்டிலும் சுட்டிகள் கணிப்பீட்டிலும் உள்வாங்கப்பட்டிருந்தமை.

  • 2018
    • கொழும்புபங்குச் சந்தையானது Empower Board மற்றும் Multi currency oard என்பவற்றைஅறிமுகம் செய்தது.
    • இவ் வருடத்தில் நிதிச் சந்தை டிப்ளோமா கற்கை நெறியினைஆரம்பித்துள்ளது.
    • கொழும்புபங்குச் சந்தைமற்றும் இந்தியாவின் தேசியபங்குச் சந்தை ஆகியவை ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
    • பங்குச் சந்தையில் கட்டுப்பணமற்ற பங்கிலாபம் என்னும் விடயத்தில் ஒதுக்கப்பட்ட பங்குகளானவை மத்தியவைப்பக முறைமைக்கு கம்பனிசெயலாளரினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய வாடிக்கையாளருடைய கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப்படுதல்  வேண்டும்.
    • கொழும்புபங்குப் பரிவர்த்தனையில் முன்னர் வகுக்கப்பட்டிருந்த பட்டியல்  படுத்தும் முறைiமை நீக்கப்பட்டு துறை ரீதியான 20 பிரிவுகளாக மாற்றப்பட்டு நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்படுகின்றன. 

2019
• சந்தை தகவல்களை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அதிக பயன்பாட்டினை வழங்க புதிய CSE கைபேசி (Mobile) பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
• கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து முதற் தடவையாக கிழக்குமாகாணத்தில் (மட்டக்களப்பில்) பட்டியற்படுத்தல் கருத்துக்களத்தினை நடாத்தியது.
• மஹாவெலி கொகநட் பிளான்டேஷன்ஸ் அதன் பங்குகளைமுதன் முறையாக கொழும்புபங்கு பரிவர்த்தனையின் திரிசவி பலகையில் பெருந்தோட்டத் துறையின் கீழ் பட்டியற்படுத்தப்பட்டது.
• 21,ஏப்ரல், 2019 அன்றுநடந்த ஈஸ்டர் ஞாயிறுதாக்குதல்களின் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவகை நோக்காகக் கொண்டு கொழும்புபங்குச்சந்தை மற்றும் இலங்கை பத்திரங்கள் மற்றும் பிணையங்கள் ஆணைக்குழுஆகியவை இணைந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில்,சிங்கப்பூரில் போஃட்போலியோ மற்றும்  நேரடிமுதலீட்டாளர்களைகவரும் பொருட்டு  இலங்கை முதலீட்டு மன்றத்தினை ஏற்படுத்தியது.