இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-15 சனிகிழமை
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்கான தினப்பலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
15-01-2022, தை 02, சனிக்கிழமை, திரியோதசி திதிஇரவு 12.57 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்புதிருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன் - 1. மாட்டுப் பொங்கல் வழிபட காலை07.00 மணி முதல் 08.00 மணி வரை, 10.30 மணிமுதல் 12.00 மணி வரை. சனிப் பிரதோஷம். திருவள்ளுவர் தினம். கரி நாள். புதிய முயற்சிகளைதவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 15.01.2022
மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமானபலன்கள் உண்டாகும். வியாபார ரீதியானபயணங்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால்தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பிறந்தவர்களால் அனுகூலம்கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறிமுன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாகஇருக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்துசேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள்காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில்கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கிமகிழ்வார்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராகஇருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில்மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவுகிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைஉருவாகும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள்ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள்சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில்எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கப் பெறும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீகசொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில்புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவுசிறப்பாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்காலை 09.51 வரை இருப்பதால் எடுக்கும்முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டாலும்மதியத்திற்கு பிறகு நற்செய்தி கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம்லாபம் அடையலாம்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் காலை09.51 முதல் இருப்பதால் நீங்கள் செய்யும்செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல்இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம்கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம்உண்டாகும். செலவுகள் குறையும். வருமானம்அதிகரிக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்துசேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அதிகலாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாகஇருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம்கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்குதடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில்உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம்தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைசெலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள்ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல்இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள்ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால்வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில்ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.