கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் |இஸ்லாமிய பக்தி பாடல் வரிகள்

Nagore Hanifa Song Kanniyare Annaiyare song female version

Apr 3, 2023 - 07:14
 0  31

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் இஸ்லாமிய ஹஸீதா

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

மாதவ தூதர் முஹம்மது நபியின்
மகளாய் வந்து பிறந்தார்.. 
போதில்லாத முழுமதி எனவே 
குலக்கொடியாக வளர்ந்தார்...

தந்தை சொல்லை சிந்தையில் ஏந்தி 
சங்கை மலர் மங்கை ஆனாரே...

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

அன்னை கதிஜா நன்னைய பண்பை 
அகம் அதில் தாங்கி சிறந்தார்...
கண்ணில் கருணை கையில் தானம் 
கல்பில் இறைவேதம் சுமந்தார்... 

செல்வத்தை மறுத்து வறுமையை
ஏற்று சீமாட்டியாய் வாழ்ந்தாரே...

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

வானவர் வாழ்ந்த யாவரும் போற்ற
வீரர் அலியை மணந்தார்...
தீன் குல பெண்கள் புறவை  ஒழிக்க 
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்... 

கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே
கனிவாய் பணிவிடை சேய்தார்...

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

சொர்க்கத்தின் நிலழாய் கணவரை 
மதித்து சோபன வாழ்வில் மிதந்தார்...
அருமை மைந்தர்கள் ஹஸன் ஹுஸைனின்
அன்புத்தாயாய் மகிழ்ந்தார்...

புவனத் தூதர் தந்தை முஹம்மதை 
பொக்கிஷமகா மதித்தார்...

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

அரஃபாத் வெளியில் இறைவன் தூதை
அண்ணல் நபி முடித்தார்கள்... 
இறைவன் அழைப்பை ஏற்று நபிகள் 
இம்மை வாழ்வை விடுத்தார்கள்... 

தந்தையை இழந்த பாத்திமா
தணலில்  புழுவாய் துத்தாரே... 

கன்னியரே அன்னையரே 
கொஞ்சம் நில்லுங்கள்... 
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்... 

எம் பெருமானார் இதயமாகவே 
இலங்கிய மாதர் திலகம்... 
தம் உடல் மெலிந்து கண்ணொளி 
மங்கி சறுகென மாறிப்போனார்கள்...

எம் பெருமானார் இதயமாகவே 
இலங்கிய மாதர் திலகம்... 
தம் உடல் மெலிந்து கண்ணொளிமங்கி 
சறுகென மாறிப்போனார்கள்...
சறுகென மாறிப்போனார்கள்...

இன்னாஇல்லாஹி 
வஇன்னா இலைஹி ராஜிவூன்...

இன்னாஇல்லாஹி 
வஇன்னா இலைஹி ராஜிவூன்...

இன்னாஇல்லாஹி 
வஇன்னா இலைஹி ராஜிவூன்...