முக்கிய பணியை முடித்துவிட்டேன் -சிவகார்த்திகேயன் அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் திரைப்படத்திற்கான தனது முக்கிய பணியை முடித்து விட்டேன் என சிவகார்த்திகேயன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்்

முக்கிய பணியை முடித்துவிட்டேன் -சிவகார்த்திகேயன் அறிவிப்பு
Siva karthikeyan in doctor

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரின் டப்பிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த குழுவினருடன் பயணம் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தின் முக்கிய பணியான டப்பிங் முடிந்ததை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது