30 வருடம் கழித்து வைரலான “சீ சீ சீ ரே நானி” – இதற்கு காரணம் என்ன?

30 வருடம் கழித்து வைரலான “சீ சீ சீ ரே நானி” – இதற்கு காரணம் என்ன?

1992 ஆம் ஆண்டு வெளியான ஓடியா நாட்டுப்புற பாடல் தொகுப்பு “பலிபுல்” (Baliphul)-ல் இடம்பெற்ற எட்டு பாடல்களில் ஒன்றாக இருந்த “சீ சீ சீ ரே நானி”, மூன்று தசாப்தங்களுக்கு பிறகு திடீரென ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர் சத்ய நாராயணன் அதிகாரி. ஓடிசாவின் கோராட்புட் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர், ஒருபுறம் வழக்கறிஞராக செயல்பட்டாலும், நாட்டுப்புற இசையின் பாரம்பரியத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்களை உருவாக்கினார்.

எப்படி ட்ரெண்டாகியது?

முதலில் காதல் தோல்வி பாடலாக வெளியான “சீ சீ சீ ரே நானி”, சமீபத்தில் மீம்ஸ் மற்றும் ட்ரோல் கலாச்சாரத்தில் முக்கியமான இடத்தை பிடித்தது. பாடலின் வீடியோவை பலரும் மீம்களாக பயன்படுத்த, அதன் மீம்களை தொடர்ந்து பலர் பகிர, பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து பலரும் ரீல்ஸில் இந்த பாடலை பயன்படுத்த, தமிழிலும் கூட இதற்கான வெர்ஷன் உருவாக்கப்பட்டது.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு வந்த பிரபல்யம்

சித்தார்த் சம்பல்பூரி என்ற யூடியூப் சேனலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோ பதிவாகியிருந்தது. ஆனால், 2024 ஜனவரியில் பாடல் ட்ரெண்டாகத் தொடங்கியதும், சித்தார்த் மியூசிக் என்ற மற்றொரு யூடியூப் சேனலிலும் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது.

இசையின் நேர்த்தியான எழுச்சி

30 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிதாக அறியப்படாத ஒரு நாட்டுப்புற பாடகனின் பாடல் இன்றைய காலத்திலும் இளைஞர்களை Vibe செய்ய வைப்பது, அவரின் இசைக்காகவே ஏற்பட்ட வெற்றி. 2012 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி சத்ய நாராயணன் அதிகாரி உடல்நலக் குறைவால் மரணமடைந்தாலும், அவரது இசை மறைந்துவிடவில்லை.

எப்படி “சம்கீலா” படத்தின் மூலம் அமர் சிங் சம்கீலா பிரபலமடைந்தாரோ, அதேபோல் “சீ சீ சீ ரே நானி” பாடல் மூலம், சத்ய நாராயணன் அதிகாரியின் இசை உலகம் முழுவதும் விரிவடையும் என்பதில் சந்தேகம் இல்லை!