எதற்கும் துணிந்தவன்( ET ) ரிலீஸான தியேட்டருக்கு வெளியே எந்த கொண்டாட்டமும் இல்லை.ஆனால் படத்தில தொய்வே இல்லாத திரைக்கதையால தியேட்டருக்குள்ள கொண்டாட நிறைய விஷயங்கள் இருப்பது உண்மைதான். ஆக்ஷன் கலந்த ,செண்டிமென்ட் கதையை சமூக அக்கறையோடு இயக்கி முக்கியமான இயக்குனர் பட்டியல பாண்டிராஜ் இணைஞ்சுடாரு..!
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை ஆரம்பம் முதலே விறுவிறுப்பா இருக்கு.ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சுருக்கிற படத்துல சூர்யாவோட அம்மாவா கோசலை கதாபாத்திரத்தை சரண்யா மிக நிறைவா செஞ்சிருக்காங்க.
சூர்யாவிற்கு அப்பாவ வர்ற சத்யராஜூம் தன் பங்குக்கு அனுபவத்தில் முதிர்ச்சியான நடிகராக சிறப்பா பண்ணி இருக்காரு..!
இளவரசு , தேவதர்ஷினி, சூரி, ஹரிஷ் பேரிடி, எம்.எஸ்.பாஸ்கர், விஜய்டிவி நட்சத்திரங்கள் என எல்லோருமே தங்கள் பங்குக்கு நிறைவான நடிப்பை வழங்கி இருக்காங்க...ஒரு அழுத்தம் நிறைஞ்ச கதையில எல்லோருமே படத்தை காமெடியால கலகலனு கொண்டு போறாங்க..!கேரள நடிகை நாயகி பிரியாமோகனுக்கும்
சூர்யாவிற்கு இணையான அழுத்தமான கதாபாத்திரம். சூர்யாவுடன காதல் அத்தியாயங்கள் ஒரு கவிதை மாதிரி இருக்கு.
ஜெய்பீம்,சூரறைப் போற்று படங்கள் மாதிரி இந்த படத்துல கண்ணப்பிரான் கதாபாத்திரமும்,சூர்யாவிற்கு ஆல்டைம் டெஸ்ட் கேரக்டர்ல ஒன்றா அமையும். அந்த அளவிற்கு சிரத்தை எடுத்து நடிச்சுருக்காரு.பெண் ரசிகைகள் மத்தியில இன்னும் அவருக்கு செல்வாக்கு உயரும். ஆக்ஸன் காட்சிகளில் கடும் உழைப்பு இருக்கு.கார்த்திக்கு பிறகு இன்னொரு நவரச நாயகான தன்னை மெருகேத்துறாரு சூரியா
வடநாடு, தென்நாடு என இரு மண்டலங்களா பிரிச்சு,அவர்களுக்குள்
நடக்கும் உணர்வுபூர்மான மோதல்களை சமூக அக்கறையுள்ள, பெண்களுக்கு விழிப்புணர்வு தர்ற படமா டி.இமான், ரத்னவேலு கூட்டணியோட ஒரு கமர்ஷியல் படமா எடுத்துறுக்காரு பாண்டிராஜ்.இமான் பிண்ணனி இசையில்,அதிரடிக்க ரத்னவேலு கேமராவும் அதற்கு ஈடு கொடுத்து உழைத்திருக்கிறது. ரூபன் எடிட்டிங்கிலும் தொய்வில்லை.
படத்தில மையப்புள்ளியான அந்த பெண்புகழ் திருவிழாவை கடைசி வரை நடத்தாமலே போனது ஏமாற்றம் தான்.சிற்சில லாஜிக் மீறல் காட்சிகள் இருந்தாலும் திரையில் அதை காட்சியாக பார்க்கும் போது ரசிக்கிறது.நவீன டெக்னாலஜியுடன் செல்போனை தவறான செயலுக்கு பயன்படுத்தி பெண்களை பாலியல் துன்புறுத்துகிற பிளேபாய் வில்லன் #வினய் கேரக்டரின் அழுத்தம் குறைவு.
வசனங்களில் சாட்டையை சுழற்றிய #பாண்டிராஜ், கேரக்டர் தேர்விலும் பாஸாகி இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறார்...!
#எதற்கும்_துணிந்தவன் பயமறியா பாசக்காரன்