ஜாதக தோஷம் நீங்க கூற வேண்டிய மந்திரம்...

ஜாதகத்தில் உள்ள 12 ராசிக்கட்டங்களுக்கான (12 இடங்களுக்கான) தோஷ நிவர்த்தி பரிகார மந்திரங்கள்!

ஜாதக தோஷம் நீங்க கூற வேண்டிய மந்திரம்...

ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் மொத்த ரகசியத்தையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது. 9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும். மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைய பெற்றிருக்கும்.

அவரவர் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டம். 

இதில் லக்னம் என்பதுதான் முதல் கட்டம். 

இப்படி மொத்தம் இருப்பது 12 கட்டம். 

இது அனைவருக்கும் இப்போ தெரியும். 

இந்த 12 கட்டங்களில் 
9கிரகங்களும் எங்கே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.

கவலை வேண்டாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை சொல்லி வந்தால் மட்டும்
போதுமானது. 

அதாவது ஒரு கட்டத்துக்கு ஒரு மந்திரம் வீதம் தனித்தனியாக பதியப்பட்டுள்ளது. 

ஆகவே, நீங்கள் மொத்தம் பன்னிரண்டு மந்திரங்களையுமே தினமும் காலை மாலை இரு வேளையும் சொல்லிக்கொண்டே வந்தால், அனைத்தும் நலமாகும் என நம்பப்படுகிறது. 

நம்பிக்கைதானே வாழ்க்கையாகும்.

லக்னம் . முதல் இடம்.

உயிர், ஜீவன், தோற்றம், அழகு.

இதற்கு நீங்கள் சொல்லவேண்டிய மந்திரம்.

ப்ராயோபவிஷ்டம் கங்காயாம் பரீதம் பரமர்ஷிபிஹி . க்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஜ்ஞானாதிபிஹி ஸஹ

Praayobhavishtam gangaayaam pareetham paramarshibihi.krushne swathaamobagadhe dharmajgnaanaathibihi saha.

ஆகவே, இந்த மந்திரத்தை காலை மாலை சொல்லிவந்தால் லக்ன தோஷம் குறையும்.

2ம் இடம்.

வாக்கு, தனம், குடும்பம், கண் பார்வை. நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமஸ்தஸ்மை பகவதே வாசுதேவாய வேதஸே,
பபுர் ஜ்ஞானமயம் சௌம்யா யன்முகாம்புருஹாஸவம்

namasthasmai bhagavadhe vaasudhevaaya vedhase,
papur gnaanamayam sowmyaa yanmukaampuruhaasavam

3ம் இடம்

சகோதரம், பேச்சு வல்லமை, கீர்த்தி, தைரியம், இளைய சகோதரம், சகோதரி, காது , ஆள் அடிமை, போகம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ப்ரியவ்ருதோ உத்தானபாதெள திஸ்ர கன்யாஸ்ச பாரத , ஆகூதிர் தேவஹூதிஸ்ச ப்ரஸுதிரிதி ஸத்தம

priyavrutho uththaanapaadhaw thisra kanyaascha bhaaratha, aakoothir dhevahoothischa prasoothirithi saththama

4ம் இடம்

சுகஸ்தானம், தாய், வீடு வாகனம் நிலம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜனன்யாபிஹிதஹ பந்தாக ஸ வை நிஸ்ரேயஸஸ்யதே,
பகவான் வாசுதேவஸ்தம் பஜ தத்ப்ரவணாத்மநா

jananyaabihithaha bhandhaaga sa vai nisreyasasyathe,
bhagvaan vaasudhevastham baja thathpravanaathmanaa

5ம் இடம்

சந்ததி, புகழ். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

அஹம் புரா பரதோ நாம ராஜா விமுக்த த்ருஷ்டஸ்ருதசங்கபந்தக ,
ஆராதனம் பகவத ஈஹமாநோ ம்ருகோபவம் ம்ருக ஸங்காத்த தார்தக

aham puraa bharatho naama raajaa vimuktha thrushta sruthasangabanthaga,
aaraadhanam bhagavadha eehamaano mrukobhavam mruka sangaaththa thaarthaga.

6ம் இடம்

வியாதி, எதிரி, வழக்கு, கடன். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தைஸ்தான்யகாநி பூயந்தே தபோதாந ஜபாதிபிஹி ,
நாதர்மஜம் தத்த்ருதயம் ததபீசாங்க்ரி சேவயா

thaisthaanyakaani booyanthe thapodhaana jabaathibihi,
naadharmajam thathruthayam thathabeesaangri sevayaa

7ம் இடம்

களத்திரம், மாரகம், கூட்டாளிகள். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாதசேவனம் ,
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்

sravanam keerthanam vishno smaranam paadhasevanam
archanam vandhanam dhaasyam sakyam aathmanivedhanam

8ம் இடம்

ஆயுள் ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமோ நமஸ்தேகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய
ஸர்வாகமாம்நாய மஹார்ணவாயா நமோபவர்காய பராயணாய

namo namasthekila kaaranaaya nishkaaranaaya athbutha kaaranaaya,
sarvaagamaamnaaya maharnavaayaa namobhavargaaya paraayanaaya

9ம் இடம்

பாக்கியம், தர்மம், பிரயாணம், கடவுள் பக்தி, குரு உபதேசம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ததோ மனு ஸ்ராத்த தேவக ஸம்ஜ்ஞாயாமாஸ பாரத ,
ஸ்ரத்தாயாம் ஜனயாமாஸ தச புத்ரான் ஸ ஆத்மவான்

thatho manu sraaththa dhevaga samgnaayaamaasa bhaaratha,
sradhdhaayaam janayaamaasa dhasa puthraan sa aathmavaan

10ம் இடம்

தொழில், கர்மம், ஞானம், ராஜ்ய ஆதிபத்யம், ஜீவன ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தஸ்யாவநிஜ்ய சரணௌ ததபக ஸ்வமூர்த்நா பிப்ரஜ்ஜகத்குருதரோபி ஸதாம் பதிர்ஹி
ப்ரஹ்மண்ய தேவ இதி யத் குணநாம யுக்தம் தஸ்யைவ யச்சரண சௌசமசேஷ தீர்த்தம்

thasyaavanijya saranow thathapaga swamoorthnaa bibraj jagadhguru tharopi sathaam pathirhi
brahmanya dheva ithi yath gunanaama yuktham thasyaiva yascharana sowsa masesha theertham

11ம் இடம்

மூத்த சகோதர ஸ்தானம், லாபம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜ்ஞானம் விவேகோ நிகமஸ்தபஸ்ச ப்ரத்யக்ஷ மைதிஹ்யம் அதாநுமானம்
ஆத்யந்தயோரஸ்ய யதேவ கேவலம் காலச்ச ஹேதுச்ச ததேவ மத்யே

gnaanam viveko nigamasthapascha prathyaksha maidhihyam athaanumanam
aadhyantha yorasya yatheva kevalam kaalascha hedhuscha thathe

va madhye

12ம் இடம்

செலவு, தூக்கம், மோக்ஷம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நாம சங்கீர்த்தனம் யஸ்ய ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரநாமோ துக்க சமனஸ்தம் நமாமி ஹரிம் பரம்

naama sangeerthanam yasya serva paapa pranaasanam 
pranaamo dhukka samanastham namaami harim param